சனி, 28 மே, 2016

தேர்தல் ஆணையத்தின் அஜெண்டா ... ஆளுநர் ஆட்சேபம்...

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலில் ஆளுநர் தலையீட்டுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 1ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும், தேர்தல் தொடர்பாக ஆளுநர் கடிதம் எழுதியிருக்கக் கூடாது. இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முன் தன்னுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது. தேர்தல் அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநருடன் ஆலோசிக்கப்பட வேண்டும் என எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. ஆளுநரின் செயல் தேர்தல் நடைமுறையை மீறுவதாக உள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவை தேர்தல் தொடர்பான ஆளுநரின் கருத்தும் ஏற்புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: