ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

20 தமிழர்கள் படுகொலையை வெங்காய நாயுடு மறைமுகமாக ஆதரிக்கிறார்?

ஆந்திராவில் சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள், செம்மர கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் கொன்று குவிக்கப்பட்ட விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், அந்த சம்பவத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளன. ஆனால் இது ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுக்கு எரிச்சலை அளித்துள்ளது. ஐதராபாத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தபோது, மனித உரிமைகள் அமைப்புகள் இரட்டை அணுகுமுறையை கொண்டுள்ளதாக அவர் கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில், “தீவிரவாதிகளும், செம்மர கடத்தல்காரர்களும் கொல்லப்படுகிறபோது மனித உரிமை அமைப்புகள் ஓலமிடுகின்றன. ஆனால் தீவிரவாதிகளால், கடத்தல்காரர்களால் பாதுகாப்பு படையினர் கொல்லப்படுகிறபோது, அவர்கள் பார்வை மாறி விடுகிறது. நாயுடுகாரு அதெல்லாம் இருக்கட்டும்  மரக்கடத்தல் மாபியாக்களிடம்  கமிஷன்  பெறுகிறீர்களா இல்லையா? அதைமொதல்லசொல்லுங்க!ஏன்னா  இன்னும்  அவிங்களை  உங்க சட்டம் கண்ட்டுக்கலையே ?
பாதுகாப்பு படையினரை தீவிரவாதிகள் கொன்றபோது ‘மஜ்லிஸ் இ இத்தேஹாத் உல் முஸ்லிமான்’ வாய் மூடிக்கொண்டது. ஆனால் நல்கொண்டாவில் ‘சிமி’ இயக்கத்தினர் என்கவுன்டரில் கொல்லப்பட்டபோது, உடனேவிசாரணை தேவை என குரல் கொடுக்கிறது” என கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: