
மதியம், 1 மணிக்கு நீதிபதி மதன் லோகூர் முதலில் தனது தீர்ப்பை வழங்கினார். அதில் பவானிசிங் ஆஜரானது தவறு என்று குறிப்பிட்டார். ஒரு கிரிமினல் வழக்கை எப்படி நடத்த கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றும் மதன் லோகூர் தெரிவித்தார். ஜெயலலிதா இந்த சொத்துக்குவிப்பு வழக்கை நீண்ட காலமாக இழுத்தடித்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டினர். இந்த தீர்ப்பில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒரு அம்சம் என்னவென்றால், ஹைகோர்ட்டில் பவானிசிங் ஆஜரானதால், வழக்கின் தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார் லோகூர். அதாவது, அரசு வழக்கறிஞர், குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டிருந்தால், வழக்கு எப்படி நியாயமாக நடைபெற்றிருக்க முடியும் என்பது, லோகூர் கூற்றின் உட்பொருள். எனவேதான் பவானிசிங் ஆஜராகிய ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாக வேண்டாம், வேறு வழக்கறிஞரை நியமித்து வழக்கை நடத்த வேண்டும் என்று லோகூர் கூறியுள்ளார். ஆனால், நீதிபதி பானுமதியோ, கீழ்மை நீதிமன்றத்தில் ஆஜராக கர்நாடக அரசு கொடுத்த அனுமதி ரத்து செய்யப்படாததை காரணமாக கூறி, பவானிசிங் ஆஜரானது செல்லும் என்று கூறியுள்ளார். மூன்று நீதிபதிகள் பென்ச் எடுக்கும் முடிவு, வருங்காலத்தில் பல வழக்குகளுக்கு முன்னுதாரணமாக மாறும் என்பதால், இவ்வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது
Read more at:://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக