வியாழன், 16 ஏப்ரல், 2015

டொரன்டோ கலாச்சார விழாவில் மோடி உரை


டொரன்டோ: கனடாவில் டோரன்டோவில் கலாச்சார நடன நிகழ்ச்சிகள் துவங்கின.இங்கு இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.பிரான்ஸ், ஜெர்மனி கனடா நாடுகளுக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்று அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவின் அணு உலைகளுக்கு தேவையான யுரேனியம் எரிபொருளை ஐந்தாண்டுகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் இந்தியா-கனடா இடையே ஏற்பட்டன.இதையடுத்து இன்று டொரன்டோவில் இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

கனடாவின் டொரன்டோவில் உள்ள ரிக்கோ கொலீஸியம் மைதானத்தில் கலாச்சார நடன நாட்டியங்கள் துவங்கியுள்ளன. இந்த கலாச்சார நிகழ்ச்சிகளை சுக்வீந்தர்சிங் தொகுத்துவழங்கி வருகிறார். இக்கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
பல்லாயிரக்கணக்கானோர் இம்மைதானத்தில் குவிந்துள்ளனர். முன்னதாக 1985 ஜூன் 23ம் தேதி, கனடா சென்ற விமானத்தை சீக்கிய தீவிரவாதிகள் குண்டுகளை வைத்து தகர்த்தனர்.கனடாவின் மான்ட்ரீல் நகரிலிருந்து, டில்லி வந்த அந்த விமானத்தில் குண்டுகள் வெடித்ததில், அயர்லாந்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விபத்தில், 329 பேர் பலியாயினர். அந்த சோகத்தின் நினைவிடம், டொரன்டோ நகரில் அமைக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார் dinamalar.com

கருத்துகள் இல்லை: