சனி, 3 மே, 2014

1,500 கிலோ தங்க விற்பனை !அக்ஷய திருதியை டாஸ்மாக்கு விற்பனை அமோகம் ! மக்கள் பணம் கோவிந்தா ?

அக்ஷய திருதியையை முன்னிட்டு, பொது மக்கள், நேற்று, ஆர்வமுடன், நகைக் கடைகளில், தங்க ஆபரணங்களை வாங்கிச் சென்றனர். இதனால், நேற்று, ஒரு நாளில் மட்டும், தமிழகத்தில், 1,500 கிலோ அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகி உள்ளது தமிழகம் உட்பட, நாடு தழுவிய அளவில், நேற்று, அக் ஷய திருதியை கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளாக, அக்?ஷய திருதியை அன்று, தங்கம் வாங்கும் பழக்கம், பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.மே தினத்தையொட்டி, நேற்று முன்தினம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. இதனால், நேற்று, ஒரு நாள் விடுமுறை எடுத்தால், தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு விடுமுறை கிடைக்கும். எனவே, அக்ஷய திருதியை நாளில் தங்கம் வாங்க, பெரும்பாலானோர், நேற்று, அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு, நகைக் கடைகளில் முகாமிட்டிருந்தனர். மூட நம்பிக்கை கொண்ட மூடர்களின் கூடாரமாக தமிழகம் திகழ்கிறது. இன்னும் பத்தாயிரம் பெரியார்கள் வந்தாலும், தமிழர்களை திருத்த முடியாது. ஜெயாவிற்கு ஓட்டு போட்டதில் இருந்தே தமிழர்களின் அறிவிலிதனம் புலப்படுகிறது.

அக்ஷய திருதியைக்கு, தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக, சில நாட்களுக்கு முன், பொதுமக்கள், நகைக் கடைகளுக்கு சென்று, விரும்பிய நகைகளை தேர்வு செய்து, பணம் செலுத்தி, முன்பதிவு செய்தனர்.முன்பதிவு செய்தவர்கள், நேற்று, நகைக் கடைகளுக்கு சென்று, முன்பதிவு ரசீதை கொடுத்து, தங்க ஆபரணங்களை வாங்கினர். பலர், தங்களிடம் உள்ள, பழைய நகைகளைக் கொடுத்து, கூடுதல் தொகை செலுத்தி, புதிய ஆபரணங்கள் வாங்கிச் சென்றனர்.

திருச்சி, கோவை, மதுரை, திருவனந்தபுரம், கொச்சி, புதுச்சேரி போன்ற நகரங்களைக் காட்டிலும், சென்னையில், ஆபரண தங்கத்திற்கு செய்கூலி, சேதாரம் குறைவாக உள்ளது.எனவே, மேற்கண்ட பகுதிகளில் இருந்து, குறிப்பாக, இலங்கையில் இருந்தும், பலர், சென்னைக்கு வந்து, தங்கம் வாங்கிச் சென்றனர்.இதனால், சென்னையில், தங்கம் விற்பனைக்கு பெயர் பெற்ற, தி.நகர், பாரிமுனையில் உள்ள, பெரிய நகைக் கடைகளில் மட்டும் அல்லாமல், சிறிய நகை கடைகளிலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.அக்ஷய திருதியையை முன்னிட்டு, தமிழகத்தில், நேற்று ஒரு நாளில் மட்டும், 1,500 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது; இதன் மதிப்பு, 420 கோடி ரூபாய். இதில், சென்னையின் பங்களிப்பு, 90 சதவீதம்; அதாவது, 1,350 கிலோ. >இதுகுறித்து, ஆபரண வர்த்தகர் ஒருவர் கூறியதாவது : தமிழகத்தில், நாள்தோறும், பழைய மற்றும் புதிய தங்கம் விற்பனை, சராசரியாக, 1,000 கிலோ. 2013 அக்ஷய திருதியைக்கு, சென்னையில், 1,100 கிலோ உட்பட, தமிழகத்தில், 1,300 கிலோ தங்கம் விற்பனையானது.அக்ஷய திருதியைக்கு, தங்கம் விற்பனை, வழக்கத்தை விட,20 30 சதவீதம் அதிகம் இருக்கும். எதிர்பார்த்ததை போல, இந்த ஆண்டும், தங்கம் விற்பனை நன்கு இருந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.
>விலை குறைவு:
சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,814 ரூபாய்; ஒரு சவரன், 22,512 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 14 ரூபாய் குறைந்து, 2,800 ரூபாய்; சவரனுக்கு, 112 ரூபாய் சரிவடைந்து, 22,400 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 44.40 ரூபாய்; ஒரு கிலோ பார் வெள்ளி, 41,540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

-நமது நிருபர்- dinamalar.com

கருத்துகள் இல்லை: