சிதம்பரம் நடராசர் கோயில் 2009-ம் ஆண்டில் இந்து
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனை
எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தால்
நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீட்சிதர்கள் அன்றைய எதிர்க்கட்சித்
தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டனர். உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடும் செய்தனர். இந்த வழக்கில் சிவனடியார் ஆறுமுகசாமி சார்பில்
மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் முனைப்புடன் கலந்து கொண்டு போராடியது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதன்படி தில்லைக் கோவிலை மீண்டும் தீட்சிதர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பார்ப்பன சதி வென்று விட்டது. நீதி தோற்று விட்டது. இது குறித்து மனித
உரிமைப்பாதுகாப்பு மையத்தின் அறிக்கையை விரைவில் வெளியிடுகிறோம்..vinavu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக