திங்கள், 6 ஜனவரி, 2014

ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை ஏப்ரல் மாதம் பிற்பாதியில் தொடங்கி மே மாதம் வரை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.
நாடே பெருமளவில் எதிர்பார்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலோடு, ஆந்திரம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என தெரிகிறது.
இந்த அறிவிப்பிற்கு முன்னர் 2014-15 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் வகையில் ஒரு முறை மக்களவை கூடும். தவிர, ஊழலுக்கு எதிரான சட்ட மசோதாக்கள் சிலவற்றை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெறும் என கூறப்படுகிறது.
நடப்பு மக்களவையில் ஆயுள் காலம் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: