பேனர்களை அகற்றக்கோரி ஜெயலலிதா வீட்டு முன்பு போராட்டம்! பணிந்தது ஆளும்கட்சி!
ஜெயலலிதா
வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளும் கட்சியினரின் சட்ட விரோத பேனர்களை
அகற்றுமாறு வலியுறுத்தி டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது
விடாப்பிடியான போராட்டத்தையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த பேனர்களை
அகற்றியது.
ஆளும்கட்சியினரின்
சட்ட விரோத பேனர்கள், விளம்பர தட்டிகளால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு
ஏற்படுகிறது. இத்தகைய பேனர்கள், விளம்பர தட்டிகளை அகற்றும் துணிச்சல் அரசு
அதிகாரிகளுக்கு இல்லை என்று சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்திருந்தது.
இவற்றை உடனடியாக ஒழுங்கு படுத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால்
முதல் அமைச்சர் ஜெயலலிதா செல்லும் கத்திட்ரல் சாலையிலேயே, ஆளும்
கட்சியினர் அனுமதி பெறாத பேனர்கள், விளம்பர தட்டிகள் வைத்துள்ளனர். இவற்றை
அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி என்பவர் சனிக்கிழமை காலை திடீர்
போராட்டத்தில் இறங்கினார். பலமணி நேரம் ஆகியும் அதிகாரிகள்
கண்டுகொள்ளாததால், அவரே பேனர்களை கிழிக்க தொடங்கினார்.
இதையடுத்து வேறுவழியின்றி மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேனர்களை அகற்றிய பின்னரே அவர் போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.
இதுகுறித்து
செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, இன்று காலை 7 மணி அளவில் எனது
போராட்டத்தை துவங்கினேன். மரியாதை கொடுத்தேன் முதல் அமைச்சருக்காக.
மரியாதையை காப்பாற்றிக்கொள்ளக் கூடிய சூழ்நிலையில் அவர் இல்லாத
காரணத்தினால், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளை வரவழைத்தேன்.
அவர்களும் அந்த பேனர்களை அகற்ற தயங்கியபோது, நானே கிழித்தேன். உண்மையிலேயே
இவர்களுக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும். அதனை சந்திக்க
நான் தயார். nakkheeran.in/
1 கருத்து:
தல தளபதி என்கின்ற வெட்டி Heroக்களுக்கு பின்னால் 1000பேர் நிஜ Hero
"Traffic ராமசாமிதான்.
கருத்துரையிடுக