எம்.ஜி.ஆர். நடித்துள்ள ‘ஆயிரத்தில் ஒருவன்‘ படத்தின் ஆடியோ 48
வருடத்துக்கு பிறகு நாளை மறுதினம் மீண்டும் வெளியிடப்படுகிறது. 1965ம்
ஆண்டு வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்‘. மறைந்த முன்னாள் முதல்வர்
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இணைந்து நடித்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்‘
பி.ஆர்.பந்துலு இயக்கம். விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை. பிலிம்ரோலில்
தயாராகி வெளியான இப்படம் தற்போது நவீன டிஜிட்டல் முறைக்கு
மாற்றப்பட்டிருக்கிறது. இப்படம் 48வருடத்துக்கு பிறகு ரீ ரிலீஸ்
செய்யப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ்நாடு தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதற்காக 100 பிரின்ட் போடப்படுகிறது. இதற்கிடையில் இம்மாதம் 10ம் தேதி இப்படத்தின் பாடல்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கான விழா சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடக்கிறது. டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்படும் ஒரு படத்தின் ஆடியோ மீண்டும் ரிலீஸ் ஆவது இதுதான் முதல்முறை. ஏற்கனவே சிவாஜி நடித்த ‘கர்ணன்‘ படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அதன் ஆடியோ வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. .tamilmurasu.org

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக