டெல்லி: சமூக ஆர்வலர் மேதா பட்கரை ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்
யோகேந்திர யாதவ் நேரில் சந்தித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி, 9 மாதங்களிலேயே டெல்லி மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றி
அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆம்
ஆத்மியில் பிரபலங்கள் பலரும் வரிசைகட்டி இணைந்து வருகின்றனர்.
இந்த வரிசையில் இப்போது சமூக ஆர்வலர் மேதா பட்கரும் இடம்பிடிக்க
இருக்கிறார். பல்வேறு உரிமைப் போராட்டங்களை நடத்தி வரும் மேதா பட்கரை, ஆம்
ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் நேற்று சந்தித்துப்
பேசினார்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார் மேதா பட்கர்?
அப்போது மேதா பட்கரை, ஆம் ஆத்மி கட்சியில் இணைய வருமாறு யோகேந்திர யாதவ்
கேட்டுக் கொண்டார். இதற்கு மேதாபட்கர் 'சாதகமான' பதிலை கூறியதாக யோகேந்திர
யாதவ் கூறியுள்ளார். மேதா பட்கரை தமது கட்சிக்கு இழுப்பதன் மூலம் குஜராத்,
மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் பழங்குடியினர் மற்றும் கிராமப்புற
வாக்குகளை எளிதில் கவர முடியும் என கணக்குப் போடுகிறது ஆம் ஆத்மி.
மேதா பட்கரும் ஆம் ஆத்மி கட்சியினர் அழைப்புவிடுத்திருப்பதாக
தெரிவித்திருக்கிறார். விரைவில் அவர் ஆம் ஆத்மியில் இணையலாம் எனக்
கூறப்படுகிறது
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக