சவுதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உறுப்புகள் கீழே
விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெடாவின் முஸ்ரேபா பகுதியில் மனித
உறுப்புகள் சிதரிக்கிடப்பதாக பொலிசாருக்கு காலை 2.30 மணிக்கு ஒரு அழைப்பு
வந்தது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்கு பின் தவறுதலாக நாட்டின் எல்லையை
தாண்டும் நபர்கள் சிலர் தப்பிக்க விமானத்தின் சக்கரம் வழியாக
முற்பட்டிருக்கலாம், அவ்வாறு செய்யும்போது யாரேனும் உயிரிழந்திருக்கலாம்.
இது அவ்வாறு இறந்தவர்களின் உடல் உறுப்புகளாக இருக்கலாம் என
சந்தேகிக்கின்றனர்.
மேலும், விமானத்தின் லேன்டிங் கியர் பகுதியிலிருந்து உடல் உறுப்புகள்
விழுந்ததாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை
நடந்து வருகிறது.
எல்லைத் தாண்டிச் செல்லும் பலர் கிடைக்கும் விமானத்தில் ஏறுவது சவுதி விமான
நிலையங்களில் வழக்கமாக உள்ளது. இங்குள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு
ஏற்பாடுகள் மிகவும் உன்னிப்பானதாக இல்லை என்பதும் இதற்கு காரணமாக
கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக