வியாழன், 9 ஜனவரி, 2014

தி.மு.க.,வில் அழகிரி ! கூட்டணி வைத்தால் விஜயகாந்திற்கும் அதே நிலை ஏற்படலாம் ? தினமலர் .

தி.மு.க.,வில் அழகிரி நடத்தப்பட்ட விதத்தால், "அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், விஜயகாந்திற்கும் அதே நிலை ஏற்படலாம்' என்ற கருத்து, தே.மு.தி.க.,வினர் மத்தியில் பரவி உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க.,விடம் அவமானப்பட்ட தே.மு.தி.க.,வினர், அழகிரி விவகாரத்தால், லோக்சபா தேர்தலுக்கு, தி.மு.க.,வுடன் கூட்டணி சேர விரும்பாத நிலை உருவாகி உள்ளது. "2016ல் என்ன நடக்கும்?': தே.மு.தி.க.,வின் பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக, ஆவேசமாக பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் கருத்துக்கு, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, விஜயகாந்த் ஆலோசித்து வருகிறார்."தி.மு.க.,வில், தனக்குப் பின், ஸ்டாலின் தான் தலைவராக இருக்க வேண்டும் என, கருணாநிதி முடிவு செய்துள்ளதால், அதற்குத் தடையாக, யாரும் இருக்கக் கூடாது என்பதற்காக, கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, ஓரங்கட்டப்படுகிறார்' என, அக்கட்சியினரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.தினமலர்

இந்த நிலையில், "தன் சொந்த மகனையே, ஓரங்கட்டும் கருணாநிதி கட்சியுடன் கூட்டு சேர்ந்தால், 2016 சட்டசபை தேர்தலில், அதே ஸ்டாலினுக்காக, விஜயகாந்த்தை, தி.மு.க., நிச்சயம் ஓரங்கட்டி விடும்' என, தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் சிலர், விஜயகாந்துக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு கடிதம்: அந்த கடிதத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, தே.மு.தி.க.,வினர் பட்ட அவஸ்தைகளை பட்டியலிட்டு உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அதுபற்றி, தே.மு.தி.க.,வினர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் தான், விஜயகாந்துக்கு சொந்தமான கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டது. அதை இடிப்பதற்கு முன், கருணாநிதியை அவர் சந்தித்து, முறையிட்டார்; மாற்று திட்டம் கொடுத்தார். ஆனால், அதையே அரசியலாக்கி, விஜயகாந்த் மீது, கருணாநிதி அவதூறு பரப்பினார். தி.மு.க., ஆட்சியில், கட்சி தனித்து இயங்கியது. எங்கள் கட்சி நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. போஸ்டர், பேனர் வைப்பதற்கு கூட ஏகப்பட்ட கெடுபிடிகள். அதை விட கொடுமைகளை உள்ளாட்சித் தேர்தலில் சந்தித்தோம். எங்கள் வெற்றியை பறித்து, தி.மு.க.,வினர் ஜெயித்ததாக அறிவித்தனர்.
எங்கள் வேட்பாளர்களை கடத்தி சிறை வைத்தனர். அதையும் மீறி ஜெயித்த, சென்னை மாநகராட்சி கவுன்சிலரை, தி.மு.க.,வுக்கு இழுத்துக் கொண்டனர். இதெல்லாம் விட, வரலாற்றில் இல்லாத வகையில், தே.மு.தி.க., அலுவலகத்தில் வருமான வரி சோதனை, கடந்த ஆட்சியில் நடந்தது. விஜயகாந்த் பற்றி, அன்றைக்கு கருணாநிதி விமர்சித்ததை தான், இன்றைக்கு ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். இந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தும், அந்த கடிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.இவ்வாறு, தே.மு.தி.க.,வினர் கூறினர். அரசியல் நாடகம்? இதற்கிடையில், அழகிரி பேட்டியும், தே.மு.தி.க.,வினரை புண்பட வைத்துள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., மாநாடு ஏற்பாட்டு குழு உறுப்பினர், விழுப்புரம் வெங்கடேசன் கூறுகையில், ""எந்த அடிப்படையில் அழகிரி இப்படி பேட்டி கொடுத்தார் என, தெரியவில்லை. இதை கருத்தில் கொண்டு, எங்கள் கட்சி தலைமை நல்ல முடிவு எடுக்கும்,'' என்றார். தே.மு.தி.க., எம்.எல்.ஏ., பாபு முருகவேல் கூறுகையில், ""அழகிரி, முதலில் கட்சியில் தனக்கு உண்டான இடத்தை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும். அதன்பிறகு, மற்றவர்களை பற்றி பேச வேண்டும். அழகிரியுடன் இருந்தவர்கள் யாரும், இன்றைக்கு அவருடன் இல்லை. அழகிரியின் கருத்து, தி.மு.க.,வின் வழக்கமான அரசியல், "ஸ்டன்ட்' என்றே கருதத் தோன்றுகிறது,'' என்றார். அழகிரிக்கு, தே.மு.தி.க.,வினர் மத்தியில், ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும், அவர் தடாலடியாக ஒதுக்கப்பட்ட சம்பவம், தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க.,வுடனான உறவை நினைவூட்டி உள்ளது. "அரசியல் ஆதாயத்திற்காக சொந்தங்களையே ஒதுக்குபவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு எந்த அளவிற்கு மதிப்பு கொடுப்பார்கள்'என, சில தே.மு.தி.க., பிரமுகர்கள் புலம்புகின்றனர். "இழப்புகளை சந்திக்க நேரிடும்': காந்திய மக்கள் இயக்கத் தலைவர், தமிழருவி மணியன் அளித்த பேட்டி:விஜயகாந்த், ஒரு தவறான முடிவெடுத்து, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தால், பல இழப்புகளை சந்திக்க நேரிடும். தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்த் ஒரு துணை பாத்திரமாக தான் வலம் வர முடியுமே தவிர, கதாநாயகனாக காட்சி தர முடியாது.வரும், 2016 சட்டசபை தேர்தலில், முதல்வர் ஆக வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர் விஜயகாந்த். அதே தேர்தலில், ஸ்டாலினை முதல்வர் ஆக்க வேண்டும் என்பதற்காக, காய்களை நகர்த்துபவர் கருணாநிதி. தி.மு.க., கூட்டணியில் விஜயகாந்த் இடம்பெற்றால், தன், முதல்வர் கனவை, முதலில் கலைத்துக் கொள்ள வேண்டும். கூட்டணியில் அவர் எதிர்பார்க்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்படாது. வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களாக பார்த்து, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது கருணாநிதியின் தேர்தல் தந்திரம்.இது, விஜயகாந்துக்கு கசப்பை உருவாக்கும். மனம் கசந்த நிலையில், விஜயகாந்தால், கூட்டணியை முறித்து, வெளியே வந்து, தி.மு.க.,வை விமர்சிக்க முடியாது. எல்லாவற்றையும் விட, விஜயகாந்துக்கு மிகப்பெரிய பள்ளம், அந்த கூட்டணியில் மறைந்திருக்கிறது. "2 ஜி' அலைக்கற்றை ஊழலில் இருந்து, பல்வேறு ஊழல் திருவிளையாடல்களில், Advertisement தி.மு.க., தனி முத்திரை பதித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், ஊழலின் வடிவாக, தி.மு.க., காட்சி தருகிறது. "தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளுக்கு மாற்று' எனக் கூறி, விஜயகாந்த் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்தார். அதை நம்பித் தான், இரு திராவிட கட்சிகளின் மீதும் வெறுப்பு கொண்ட மக்கள், தே.மு.தி.க.,வை ஆதரித்தனர். இன்று அவருக்குள்ள, 10 சதவீத ஓட்டு, தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டுக்கானது.கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,வுடன், இந்த தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டு என, விஜயகாந்த் முடிவு எடுத்தால், மாற்று அரசியலுக்கான மனிதர் இவர் என்ற தோற்றம் முழுவதும் சிதைந்து விடும். லோக்சபா தேர்தலில், உடனடி லாபத்தை அனுபவிப்பது என்று முடிவு செய்தால், நீண்ட கால நஷ்டத்துக்கு தன்னையும், கட்சியையும் ஆளாக்கி, ஊழல் பள்ளத்தில் விழுந்து, மக்கள் சார்ந்த அரசியல் நடத்த முடியாத அவல நிலைக்கு, விஜயகாந்த் ஆளாவார்.இவ்வாறு, தமிழருவி மணியன் கூறினார். "முரண்பாடுகளின்மொத்த உருவமாகி விடும்!' :பா.ஜ., தேசிய செயலர், தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:என்ன நோக்கத்துக்காக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தாரோ, அந்த நோக்கத்தில் இருந்து அவர் பிறழ்ந்து போகக் கூடாது. ஊழலுக்கு எதிராகத் தான் குரல் கொடுத்து வந்தார். மத்திய ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்னை என எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வந்தார். மத்திய அரசு என்றதும், காங்கிரஸ் தானே என, தி.மு.க.,வை புறந்தள்ள முடியாது. தி.மு.க.,வும் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் விலகி விட்டது என்பதற்காக, நடந்த தவறுகளுக்கு, அவர்கள் பொறுப்பு இல்லை என்று ஆகிவிடாது. இந்த விஷயங்களை சொல்லித்தான், சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்த், அ.தி.மு.க.,வோடு கூட்டணிக்குச் சென்றார். அந்த சூழ்நிலை இப்போது மாறிவிடவில்லை. அதனால், தே.மு.தி.க., தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்தால், அது எந்த விதததிலும் பொருத்தமாக இருக்காது. அப்படி அமைந்தால், அது முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் தான் இருக்கும். தேசிய, மாநில நலனை மனதில் வைத்து, தமிழகத்தில் ஆரோக்கியமான கூட்டணிக்கு விஜயகாந்த் வித்திட வேண்டும். அப்படியொரு நல்ல கூட்டணி அமைய, விஜயகாந்த், பா.ஜ., கூட்டணியில் தான் இணைய வேண்டும். எதார்த்த நிலையை புரிந்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதுதான், நாட்டுக்கும், அவருக்கும், அவர் கட்சிக்கும் நல்லது. அந்த புரட்சி முடிவுக்காக, பா.ஜ., காத்திருக்கிறது.இவ்வாறு, தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். நமது சிறப்பு நி

கருத்துகள் இல்லை: