புதுடில்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான, லாலு பிரசாத் யாதவ், டில்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர்,
ராகுலை சந்தித்து பேசினார். கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், ராம்விலாஸ் பஸ்வானின், லோக்
ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள், கூட்டாக தேர்தலை சந்தித்து,
பீகாரில், 29 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்த, 2009 தேர்தலில்,
காங்கிரசை, லாலு கைகழுவியதால், அவர் கட்சி, நான்கு தொகுதிகளிலும்,
காங்கிரஸ், இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால், பஸ்வான் கட்சி, ஒரு
இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதனால், இம்முறை, காங்கிரசுடன் கூட்டு
சேர, லாலு அதீத விருப்பம் தெரிவித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்,
காங்கிரஸ் தலைவர், சோனியாவை சந்தித்த லாலு, காங்கிரஸ் தலைமையிலான
கூட்டணியில் சேர்ந்து, வரவிருக்கும் லோக்சபா தேர்தலை, சந்திக்க
விரும்புவதாக அறிவித்தார்.
எனினும், 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியை முறித்து, தனித்து போட்டியிட்ட லாலு கட்சியால், அம்மாநிலத்தில், காங்கிரசுக்கு பலத்த தோல்வி பெற்றுத் தந்தது. அதனால், லாலுவை மீண்டும், கூட்டணியில் சேர்ப்பது குறித்து, சோனியா தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், நேற்று, காங்., துணைத் தலைவர், ராகுலை சந்தித்த லாலு, லோக்சபா தேர்தல், கூட்டணி குறித்து பேசியதாக, டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக