செவ்வாய், 7 ஜனவரி, 2014

ராகுல் இமேஜை உயர்த்த 500 கோடியில் ஜப்பான் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஒப்பந்தம்

பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருவதால்  இன்னும் மூன்று மாதங்களே உள்ளன.அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வாக்காலர்கலை கவரும்  யுக்தியை திட்டமிடுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன பாரதீய ஜனதா சார்பில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்டு பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். அதற்கு தகுந்தாற்போல் நடந்து முடிந்த  5 மாநில தேர்தல்களிலும் பாரதீயஜனதா 3 மாநிலங்களை கைபற்றியது நாடெங்கும் மோடி அலை வீசுகிறது.
ஆனால் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க போகும் ராகுல் காந்தி  இன்னும் தேர்தல்  பிரசாரத்தில் காலடியே எடுத்து வைக்கவில்லை.மேலும் நேரு குடும்பத்து வாரிசு, இளம் தலைவர் ஆகியவற்றை தவிர அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று அடிக்கடி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.இந்த நிலையில் ராகுல் மீதான இந்த விமர்சனத்தை மக்கள் மன தில் இருந்து அகற்றவும் ராகுலை இந்தியாவை வழி நடத்தப் போகும் ஒப்பற்ற தலைவர் என்ற அளவுக்கு உயர்த்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதற்கான வியூகங்களை வகுத்து தருவதற்காக டென்ட்சு இந்திய என்ற ஜப்பானிய விளம்பர நிறு வனத்துடன் ரூ. 500 கோடி ஒப்பந்தத்தை காங்கிரஸ் செய்துள்ளது. இந்த நிறுவனம், ராகுலின் இமேஜை உயர்த்த திட்டங்கள், வியூகங்கள், பிரசார வாசகங்கள் போன்றவற்றை வகுத்து கொடுக்கும். ராகுலின் தேர்தல் பிரசார பயணம், மேடை பேச்சு ஆகியவற்றையும் கவனிக்கும்.
சாமானியனுக்கும் அதிகாரம்’ என்ற கோஷத்தை தேர்தல் கோஷமாக அறிவிக்க இந்த நிறுவனம் காங்கிரசுக்கு பரிந்துரைத்துள்ளது. காங்கிரசின் முந்தைய கோஷங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டது.
அப்படி இல்லாமல் ராகுலின் பேச்சு மக்களை தட்டி எழுப்ப செய்யும் வகையில் இருக்க, இந்த  நிறுவனம் சர்வேயும் நடத்தி வருகிறது. ராகுல் பேசும் குறும்படங்கள், டி.வி., பத்திரிகை விளம்பரங் களையும் வித்தியாசமாக செய்ய ஜப்பான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எனவே அடுத்த மாதம் முதல் ராகுல்காந்தியின் புதிய கோணத்தை எதிர் பார்க்கலாம் என்று காங்கிர சார் நம்பிக்கையுடன் உள்ள னர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை: