செவ்வாய், 7 ஜனவரி, 2014

வாசனி்டம் தேர்தலுக்காக 500 கோடி ரூபாய் கேட்ட விஜயகாந்த் ! என் தலைமையில்தான் கூட்டணின்னு சோனியா காந்தி அறிவிக்கணும்னு !


Captain_vijayakanth__166
"கேப்டன் என்னடா பண்ணிக்கிட்டு இருக்காரு... கூட்டணி குறித்து முடிவு பண்ணிட்டாரா ? "
"கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவுக்கும் கேப்டன் வரலை.  கடையை விரிச்சு வச்சுக்கிட்டு வியாபாரத்துக்காக காத்திருக்கிறார்.  சமீபத்தில், ஜி.கே.வாசனை சந்திச்சப்போ, வாசன் கிட்ட, தேர்தலுக்காக 500 கோடி ரூபாய் வேணும்னும், சோனியா காந்தி, தமிழகத்தைப் பொறுத்தவரை விஜயகாந்த் தலைமையில்தான் கூட்டணின்னு அறிவிக்கணும்னு கண்டிஷன் வச்சிருக்கார்.
இதையெல்லாம் கேட்ட ஜி.கே.வாசன், அதிர்ந்து போயிட்டார்.  வரதட்சிணை கேக்கிற மாதிரி கேக்கறாரே இந்த ஆளு... விஜயகாந்த் தலைமையில், தமிழகத்தில் கூட்டணின்னு நான் சோனியா கிட்ட போயி பேச முடியுமா ?  லூசு மாதிரியே பேசறாரே ன்னு பொலம்பியிருக்கார்"
"அவர் லூசு மாதிரி பேசறது என்ன புதுசா ?  பொதுக்குழுவில் பேசும்போது, அது என்னமோ ஜிஎஸ்எல்வி ன்னு ராக்கெட் விட்டிருக்காங்க.. அதை சோதனைப் பண்ணி பாத்தாத்தான் அது ஒழுங்கா வேலை செய்யுதா இல்லையான்னு தெரியும்னு விஞ்ஞானி மாதிரியே பேசறார். அவர்கிட்ட போயி என்ன பேசுவ" என்றான் ரத்னவேல்.

"அவர் லூசு கிடையாதுடா... எந்தக் கட்சி அதிகமா பணம் தரத் தயார்னு கிட்டத்தட்ட டெண்டர் விடாத குறையா அறிவிச்சிக்கிட்டு இருக்கார்.  தான் இல்லாத கூட்டணி ஜெயிக்காதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கார். "
"நீ இப்படி சொல்ற... முக.ஸ்டாலினும், கேப்டனை லூசுன்னு சொல்றாராமே... ? " என்றான் பீமராஜன்.
"உண்மைதான்டா... திமுகவோட கூட்டணி சேர்றதுக்கு கேப்டன் வச்ச கண்டிஷன் அவரை அப்படி பேச வச்சுடுச்சு"
"என்ன கண்டிஷன் போட்டாராம் "
"திமுக கூட்டணியில் சேர வேண்டும் என்றால், எந்த கல்யாண மண்டபத்தை அவங்க இடிச்சாங்களோ, அதே கல்யாண மண்டபத்துக்கு வந்து, எங்க கூட கூட்டணியில சேருங்கன்னு கேட்கணும். கேட்டாத்தான் வருவேன்னு சொல்லியிருக்காரு. இதைக் கேட்டுட்டு ஸ்டாலின் தலையில அடிச்சிக்கிட்டாராம்" savukku

கருத்துகள் இல்லை: