"என்னடா... அழகிரி அதிரடி பேட்டி குடுத்திருக்கார் ? " என்று விவாதத்தை தொடங்கினான் ரத்னவேல்.
"ஆமாம்டா... அண்ணன் அதிரடியா பேட்டி கொடுத்திருக்கார். ஏகத்துக்கும் தலைமை மேல கடுப்புல இருக்கார் அழகிரி. அதிமுக ஆட்சி வந்ததுல இருந்தே அழகிரியின் செயல்பாடுகள் ரொம்ப மந்தமாகத்தான் இருந்தது. அவர் மகன் மீது க்ரானைட் ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிந்ததும் ரொம்பவும் பயந்து போயிட்டார் அழகிரி. தமிழகத்தில் தங்காமல், டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியதும், வெளிநாட்டில் தங்குவதுமாக ஓடிக்கிட்டே இருந்தார் அழகிரி.
காவல்துறை தேடியதும், அழகிரியோட மகன் துரை தயாநிதி, ஓடி ஒளிஞ்சார். அவருக்கு முன் ஜாமீன் கிடைச்ச பிறகுதான், அழகிரி தமிழகத்துக்கே வந்தார். அதற்குப் பிறகும் தொடர்ந்து அடக்கியே வாசிச்சிக்கிட்டு இருந்தார். அழகிரியோட இந்த அமைதியைப் பயன்படுத்திக்கிட்டு ஸ்டாலின், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தன் செல்வாக்கை பலப்படுத்தினார். மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஸ்டாலின் கை வசம் வந்திருச்சு.
ஸ்டாலின், தன்னோட ஆதரவாளர்களை அவர் பக்கம் இழுப்பதும், கட்சியில் தன்னோட செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவதும் தெரிந்தும் கூட, அழகிரி அமைதியாத்தான் இருந்தார்.
போன வாரம், மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளை கட்சி கூண்டோடு கலைத்ததுதான், அழகிரிக்கு ஸ்டாலின் வைச்ச செக். தன்னை மீறி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் எதுவுமே நடக்காதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்த அழகிரியை, சுத்தமா ஓரங்கட்டும் வேலைதான் அது.
இதுக்கு அப்புறமும் அழகிரி அமைதியாத்தான் இருக்காருன்னா, அவர் கிட்டத்தட்ட அரசியலுக்கு முழுக்கு போடும் மன நிலைக்கு வந்துட்டார்.
நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், விஜயகாந்த் ஒரு தலைவரே அல்ல. அவரிடம் அரசியல் நாகரீகம் இல்லை. அவரோடு கூட்டணி வைத்தால் திமுக உருப்படாதுன்னு பேசியிருக்கார்.
ஸ்டாலினும், கருணாநிதியும், கேப்டன் காலில் விழாத குறையாக கெஞ்சிக்கிட்டு இருக்கும்போது, அழகிரி இப்படிப் பேசுனது, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டித்தான் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர்."
"ஆனா.. இந்த பேட்டி வெளியானது 5ம் தேதி. நாலாம் தேதியே நிர்வாகிகளை கலைச்சுட்டாங்களே அது எப்படி ? " என்றான் ரத்னவேல்.
"அழகிரி இந்த மாதிரி பேட்டி குடுத்துருக்கார்னு புதிய தலைமுறையில இருந்து தகவல் வந்ததுனாலதான் இப்படி ஒரு நாள் முன்னதாகவே கலைப்பு நடவடிக்கை"
"சரி. இதுக்கெல்லாம் தலைவர் என்ன சொல்றார் ? " என்றான் பீமராஜன்.
"கருணாநிதிதான் இந்த பிரச்சினை அனைத்துக்கும் காரணம். அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தீராத மோதல் இருந்துக்கிட்டே இருந்தாத்தான், தலைவர் பதவியைப் பத்தி பேச்சு வராதுன்னு கவனமா இருக்கார் தலைவர். கருணாநிதி நினைச்சிருந்தார்னா, மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலைப்பை நிறுத்தியிருக்க முடியும். ஆனா, இப்படி செஞ்சா, அழகிரி கடுமையா கோபமடைவார், ஏடாகூடமா ஏதாவது செய்வார்னு கருணாநிதிக்கு நல்லா தெரியும். அப்படி செய்வாருன்றது, ஸ்டாலினுக்கும் தெரியும். அதனால ஸ்டாலின் கவனமெல்லாம் அழகிரி மேலதான் இருக்கும். தலைவர் பதவி குடு, பொதுச் செயலாளர் பதவி குடுன்னு ஸ்டாலின் எந்த பேச்சும் பேச மாட்டாருன்றதுதான் இதுக்கு பின்னாடி இருக்கிற ஐடியா..."
"கனிமொழி பிறந்தநாள் எப்படி நடந்தது... ? " என்றான் வடிவேல்.
"கனிமொழி பிறந்தநாள் சிறப்பாத்தான் நடந்தது. ஆனா, அந்த பிறந்தநாள் அன்னைக்கே, கோவையில் இளைஞர் அணியின் கூட்டத்தை வைச்ச ஸ்டாலினோட அற்பத்தனம் பத்திதான் திமுக பூரா பேச்சு"
"இதுல என்ன அற்பத்தனம் இருக்கு ? "
"கனிமொழி ஸ்டாலினோட தங்கை. அவங்களோட பிறந்தநாள் ஜனவரி 5ம் தேதி வருதுன்னு ஸ்டாலினுக்கு நல்லாத் தெரியும். எங்க பிறந்தநாள் சிறப்பா கொண்டாடப் படப்போகுதோன்ற பயத்துலதான், ஜனவரி 5 அன்னைக்கு கோவில இளைஞர் அணி நிகழ்ச்சியை வைத்தார். இதே கருணாநிதி பிறந்தநாள் அன்னைக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணுவாரா ? அல்லது இவரோட பிறந்த நாள் அன்னைக்கு வேற யாராவது இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணா விட்டுடுவாரா ?
அது மட்டுமில்லாம, ஜனவரி 4 அன்றைக்கு, மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளை கலைத்ததன் பின்னணியிலயும் ஸ்டாலின் இருக்கறதா சொல்றாங்க"
"ஏன் நாலாம் தேதி கலைச்சா என்ன ? "
"நாலாம் தேதி கலைத்தா, அடுத்த இரண்டு நாட்களும், அதைப் பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் வரும். கனிமொழியின் பிறந்த நாள் விழா இருட்டடிப்பு செய்யப்படும்னு அவர் திட்டமிட்டுத்தான் நாலாம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்றாங்க"
"ஸ்டாலின் இவ்வளவு அற்பத்தனமா நடந்துக்குவாரா என்ன ? " என்று வியப்பாக கேட்டான் வடிவேல்.
"அரசியலில் எல்லாம் நடக்கும்"savukku.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக