
காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவமனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் உணவு செலுத்தி போராட்டத்தை முறியடித்தனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உஸ்மானியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் உஸ்மானியா மருத்துவமனையிலும் அவர் உண்ணாவிரதத்தைத் தொடரவே உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அங்கிருந்து நேற்று நிம்ஸ் மருத்துவமனைக்கு ஜெகன் மாற்றப்பட்டார்.
தொடர் உண்ணாவிரதம்! ஜெகன் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்- பதற்றம்!
இதனிடையே ஜெகனுடன் மருத்துவமனையில் அவரது மனைவி தங்கி இருந்து உதவி செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக