வியாழன், 29 ஆகஸ்ட், 2013

விஜயகாந்த் பாஜக கூட்டணி ? மோடியோடு ஜோடி சேர தமிழருவி மணியன் தூது ?

சென்னை: லோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கணிசமான இடங்களைப்
பெற்றுவிடும் என்ற நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் தேமுதிகவை தமது அணிக்கு கொண்டு வர மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாஜக சார்பில் தமிழருவி மணியன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தாலும் அனேகமாக இடதுசாரிகளை அரவணைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்தான் இப்போதைக்கு அழைத்துவரப்பட வேண்டிய தோழமைக் கட்சி. ஆனால் தேமுதிகவோ என்ன செய்வதென்று குழம்பினாலும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தம்மால் முடிந்த அளவுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தில் மதிமுகவை மிகவும் அதிகமாக ஆதரித்துப் பேசக் கூடியவர் தமிழருவி மணியன்.
அவர் மூலமாக தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு காய் நகர்த்தலை மேற்கொண்டிருக்கின்றனர். பாஜக அணியில் தேமுதிக?... விஜயகாந்திடம் பேச்சு நடத்திய தமிழருவி மணியன்! அதாவது பாரதிய ஜனதா, மதிமுக ஆகியவற்றுடன் தேமுதிகவை இணைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலை சந்திப்பது என்பதுதான் திட்டமாம். இதற்காகவே கடந்த 22-ந் தேதியன்று பாஜக சார்பில் தூதுவராக தமிழருவி மணியன் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது பாரதிய ஜனதாவுக்கான எதிர்காலம், இதனால் தேமுதிகவுக்கான லாபம் போன்ற கணக்குகளை தமிழருவி மணியன் விளக்கியிருக்கிறார். இந்த லாப நட்ட கணக்குகளில் கொஞ்சம் அசந்தே போனாராம் விஜயகாந்த். குறிப்பாக விஜயகாந்தின் மைத்துனர் அல்லது மனைவி பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாக ஏதேனும் ஒரு மாநிலத்தில் இருந்து கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டதாம். தேர்தல் நிதியும் கிடைக்கும்.. தொகுதியும் கிடைக்கும்.. குடும்பத்தினருக்குப் பதவியும் கிடைக்கும் என்பதெல்லாம் பெரும்பாலும் உறுதிதான் என்றாகிவிட்ட நிலையில் அலைபாயத் தொடங்கிவிட்டாராம் கேப்டன். இந்த தகவல் காங்கிரஸ் காதுகளுக்குப் போனதாலேயே அடித்துப் பிடித்துக் கொண்டு ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக் என காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாம் விஜயகாந்துக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா? காங்கிரஸின் கனவுக் கூட்டணியான திமுக- தேமுதிக- காங் அணி உருவாகுமா? என்ற நோக்கில் பயணிக்கிறது தமிழக அரசியல் களம். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இ
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: