< கும்பாபிஷேக பணிகள் தொடங்கி உள்ளதால் 2 ஆண்டுகளாக தெப்போற்சவம் நடைபெறவில்லை. இதை காரணம் காட்டி காவிரியில் தண்ணீர் வந்த போதிலும், கோயில் நிர்வாகம் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப ஆர்வம் காட்டவில்லை.
குளம் வறண்டு இருப்பதால் படிக்கட்டுகள் குடிமகன்களுக்கு திறந்தவெளி பாராக மாறி உள்ளது. பக்தர்கள் குளம் அருகே வரவே முகம் சுழிக்கும் நிலை உள்ளது. காவிரி பாசன நீரை ஏரி, குளங்களில் நிரப்பி சேமிக்க உத்தரவிட்டும் தெப்பக்குளத்தில் நிரப்ப கோயில் நிர்வாகம் அக்கறை காட்டவில்லை.
பக்தர்கள் கூறுகையில், ‘குளத்தில் தண்ணீர் இருந்தால், அருகில் உள்ள வீடுகளில் கிணறுகளில் தண்ணீர் ஊறும். குளம் வறண்டதால், வீடுகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காவிரி கரையில் ஊரும், குளமும் இருந்தும் பயனில்லை‘ என்றனர் tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக