ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தை யூனியன்
பிரதேசமாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிரஞ்சீவி உட்பட யார் கோரிக்கை விடுத்தாலும் நாக்கை வெட்டிவிடுவோம் என்..று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்துவிட்டால் கடலோர ஆந்திரா, ராயலசீமாவின் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று மத்திய அமைச்சர் சிரஞ்சீவி யோசனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய ராஷ்ட்டீரிய சமிதி எம்.எல்.ஏ.வும், சந்திரசேகரராவ் மருமகனுமான ஹரிஸ்ராவ், ஹைதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக யார் அறிவித்தாலும் அவர்களின் நாக்கை தெலுங்கானா மக்கள் அறுத்து எறிவார்கள். அது சிரஞ்சீவி உள்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் இது பொருந்தும். ஹைதராபாத் தங்களுக்கு சொந்தம் என்று யார் கூட்டம் நடத்தினாலும் எங்களது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக