வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது !

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்தநிலையில் பவானிசிங்கை மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டது.
அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றி விதித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர் பவானிசிங் நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது குறித்து 3 வாரங்களுக்குள் பதிலளிக்க கர்நாடக அரசு, அன்பழகன், பவானிசிங் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு விசாரணையின் அடுத்த உத்தரவு வரும் வரை, புதிய அரசு வழக்குரைஞரை கர்நாடக அரசு நியமிக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை: