ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

திருமா விவகாரம் அப்படி என்னதான் நடக்கிறது ? நெருப்பில்லாமல் புகையுமா ?

கவிதா என்ற பெண் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது
புகார் கூறியதை அடுத்து, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது,  ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்களிலோ இந்த விவகாரம் கடந்த சில காலமாகவே பேசப்பட்டு வருகின்றது. கவிதா என்ன சொல்கிறார்? நான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகள். எனக்கும் செந்தில் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம். அத் பின்னர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக டில்லி சென்ற போது திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார். த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகின்றன. எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர்” என்பது அவரது புகார். கவிதா தரப்பு ஆதாரமாக சில போட்டோக்களை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அந்த போட்டோக்கள் அப்படியொன்றும் அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் இல்லை. ஒரு சாதாரணமான குடும்ப நிகழ்வில் திருமா கலந்து கொண்ட போட்டோக்களாகவே உள்ளன.
நாம் அறிந்தவரை கடந்த ஆறு மாத காலமாகவே இந்த பஞ்சாயத்து கட்சி வட்டாரங்களில் நடந்து வந்திருக்கிறது. கவிதா செய்தியாளர்களிடம் பேசியபின், பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த புகார்களை மறுக்கிறது. “கவிதா என்பவர் யார் என்றே தெரியாது” என்றெல்லாம் மறுக்கவில்லை அவர்கள். கவிதாவுக்கும் திருமாவுக்கும் முன்பே பரிச்சயம் இருந்ததை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால், கவிதாவின் குற்றச்சாட்டு அபாண்டமானது என்கிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் 24-08-2013 அன்று கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.
காவல்துறையினரிடம் கொடுத்த புகாரில், கோவையைச் சார்ந்த கார்த்திக், அவரது மனைவி ஜெயந்தி, வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் அவரது உதவியாளரான லதா, லதாவின் கணவர் சந்துரு ஆகியோர், கவிதாவுக்குச் சொந்தமான எஸ்.டி.கே.எஸ். நர்சரிப் பள்ளியை குத்தகைக்குக் கேட்டதாகவும், பின்னர் மிரட்டி பவர் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
புகாரில் எந்த இடத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும், பாண்டிச்சேரி காவல் நிலையத்தில் ஒருமுறையும், பின்னர் சென்னையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இரண்டு முறையும் இதே புகாரை கவிதா அளித்திருக்கிறார். மேற்கண்ட ஐந்து புகார்களிலும் எமது கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களைப் பற்றி அவதூறாக எதையும் குறிப்பிடவில்லை. 

ஆனால், அதற்கு நேர்மாறாக, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் அபாண்டமான அவதூறு செய்திகளைக் கூறியிருக்கிறார்.
தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்த நாளுக்கு கவிதா அழைத்ததன் அடிப்படையில், ஒரு கட்சியின் தலைவர் என்கிற முறையிலும், தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் குழந்தையின் விழாவுக்கு வரும்படி விடுத்த வேண்டுகோளை மதிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினார். இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
அதன் பின்னர் கட்சிக்குத் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தாம் நிதி உதவி அளிக்க விரும்புவதாகச் சொல்லி சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரைச் சந்தித்திருக்கிறார். ஆனால், அவ்வாறு நிதி உதவி எதுவும் தேவையில்லை என்று எமது கட்சியின் தலைவர் மறுத்து விட்டார்.
அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை.
ஆனால், கட்சியின் கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு தன்னுடன் வியாபாரத் தொடர்பில் உள்ளவர்களை மிரட்டியிருக்கிறார். கட்சியின் பெயரையும், கட்சித் தலைவரின் பெயரையும், கட்சியின் கொடியையும் தொடர்ந்து அவர் தவறாகப் பயன்படுத்தி வந்தது மிகவும் காலதாமதமாகவே தெரியவந்தது.
ஒரு முறை கட்சிக் கொடி கட்டிய காரில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் வந்தார். அங்கிருந்த பொறுப்பாளர்கள் விசாரித்தபோது அவர் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்துவது அவர்தான் என்பதும் தெரிய வந்தது.
கட்சியில் இல்லாத ஒருவர் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்துவது தவறு என்று மிகுந்த கனிவோடு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இனி அவ்வாறு பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நர்சரி பள்ளியை வாங்கிய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தெரிந்ததால்தான், தரவேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள், ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று கவிதா கருதியிருக்கிறார்.
அதனால் தலைவரின் ஓட்டுநர் முத்துப்பாண்டியைத் தொடர்புகொண்டு, “உங்கள் தலைவரிடம் சொல்லி கார்த்திக்கை மிரட்டிப் பணம் வாங்கித் தாருங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
இதுபோன்ற விஷயங்களில் கட்சியோ, கட்சித் தலைவரோ தலையிட மாட்டார்கள் என்று சொல்லி முத்துப்பாண்டி மறுத்திருக்கிறார்.
அதற்கு, “அப்படியா உங்களைத் தலையிட வைக்கிறேன் பார். உங்களை அசிங்கப்படுத்துகிறேன் பார்” என்றெல்லாம் முத்துப்பாண்டியிடம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அதன் பின்னரே இவ்வாறு புகார் கொடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது.
அவர் கூறியுள்ளபடி, கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்கள் யாரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை; கட்சிக்குத் தொடர்புடையவர்களுமில்லை. அத்துடன் இந்த விவகாரத்தில் கட்சியோ, கட்சியின் தலைவரோ, தலைவரின் ஒட்டுனரோ யாரும் தலையிடவேயில்லை.
கவிதா என்பவர் கூறியிருப்பது முற்றிலும் அபாண்டமான அவதூறாகும். கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கவிதா தவறாகப் பயன்படுத்தி வந்தது தாமதமாகவே தெரிய வந்தது. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் கட்சியின் சார்பில் கவிதா மீது புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: