செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ஈவ்டீசிங்கை தடுத்த சகோதரனை கொன்ற இருவருக்கு மரண தண்டனை !

டெல்லி சுல்தான்பூரியில் 2009-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி இரவு சிவபக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் தெருவில் ஆடிப்பாடி அவர்கள் சென்றதை பார்க்க பொதுமக்கள் திரண்டனர். அப்போது, உள்ளூர் ரவுடிகளான சுனில் மற்றும் சுதிர் ஆகியோர், அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம், ஆபாசமாக சைகைகளை காட்டி ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதனை அவரது சகோதரனும், தாயாரும் தடுத்தபோது பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணின் சகோதரனை சுனில், சுதிர் மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, முக்கிய குற்றவாளிகளான சுனில் மற்றும் சுதிருக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். மற்ற குற்றவாளிகளான சுரேந்தர், சுரேஷ், ராஜ் குமார் மற்றும் சஞ்சய் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையானது, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தற்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு அரிதினும் அரிதான இந்த வழக்காகும். அண்ணன் தம்பிகளான சுனில், சுதிர் ஆகியோர் திட்டமிட்டு கொலை செய்திருப்பதால், அவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றம் மிகுந்த அக்கறையுடன் தடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: