புதுடெல்லி:
2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே உணவு
பாதுகாப்பு மசோதா என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மக்களவையில்
தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மசோதா குறித்த விவாதத்தில் பேசிய அவர்,
இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியை
நிறைவேற்றுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக கூறிய அவர், இந்த மசோதா
நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
ஏழை மக்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாக கூறிய சோனியா, மசோதா நிறைவேற்றுவதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். உணவுக்கான சட்ட உரிமையை அளிப்பது நாடாளுமன்றத்தின் வசம் உள்ளதாக கூறிய சோனியா காந்தி, மக்களுக்கு உணவு தரும் கடமையை இந்தியா ஏற்றுள்ளதை உலகுக்கு அறிவிக்கும் நாள் எனக் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக