
வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர், கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த சிறுமி குற்றம் சாட்டினார்.
இதேபோல் மனித உரிமை ஆணையத்தில், சிறுமியின் தாயார் அளித்துள்ள புகார் மனுவில், “வறுமை காரணமாக ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட எனது மகள் படிக்க ஆசைப்பட்டாள். ஆனால், அவளது விருப்பத்திற்கு மாறாக அவளை வெளிநாட்டுக்காரருக்கு கட்டாய திருமணம் செய்ய, அனாதை அல்ல நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த பெண்களை அரேபியர்கள் திருமணம் செய்துகொள்வது கேரளாவில் உள்ள சில மாவட்ட முஸ்லிம்களிடையே வழக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஐக்கிய அரபு குடியரசு நபரின் தகப்பனாரும் முன்பு இதுபோன்று கேரளாவில் திருமணம் செய்து, அவரது மனைவியை கேரளாவிலேயெ விட்டுச்சென்றுள்ளார்.
இச்சம்பவத்திற்கு நீதி கேட்டு கோழிக்கோட்டில் திங்களன்று போராட்டம் நடத்தப்பட்டது.maalaimalar.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக