திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து மாணவிக்கு அஞ்சலி

புதுடில்லி : டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மருத்துவ மாணவி உயிரிழந்தது மற்றும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் ஆகியவற்றின் காரணமாக டில்லியில் உள்ள பெரும்பாலான கேளிக்கை விடுதிகள், இரவுநேர கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவைகள் புத்தாண்டு கொண்டாட்டங்களையும் புத்தாண்டு பார்டிகளையும் ரத்து செய்துள்ளன. வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள்:< கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய டில்லி கேளிக்கை விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உயிரிழந்த மாணவிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு தங்களின் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் இது ஒரு துக்க தினம் எனவும், இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புத்தாண்டை முன்னிட்டு அறிவிக்கப்படும் சிறப்பு சலுகைகளும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு பல்வேறு இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து அமைதியான முறையில் போராட வேண்டும் என தெரிவித்துள்ளன. டில்லி கற்பழிப்புக்கள்: 2012ம் ஆண்டில் தலைநகர் டில்லியில் 600 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலத்தில் பதிவான 635 கற்பழிப்பு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகளை விட மிக அதிகம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 635 வழக்குகளில் ஒரே ஒரு வழக்கில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், 403 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 348 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். டில்லியில் அதிகரிக்கும் கற்பழிப்புக்கள்: <டில்லியில் ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக புள்ளிவிபர அறிக்கை தெரிவிக்கிறது. 2010ல் 507 ஆக இருந்த கற்பழிப்பு வழக்குகள் 2011ல் 572 ஆக உயர்ந்துள்ளது. இது 2008ல் 466 ஆகவும், 2009ல் 469 ஆகவும் இருந்துள்ளது. இவைகளில் 18 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 34 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 597 வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்று வருவதாகவும் 86 வழக்குகள் விசாரணையிலும், 10 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஜனவரி முதல் நவம்பர் வரை 111 வரதட்சணை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் 11 ‌மாதங்களில் வரதட்சணை கொடுமை காரணமாக 128 உயிரிழப்புக்கள் நடைபெற்றுள்ளன. இவைகள் 2010ல் 143 ஆகவும், 2011ல் 142 ஆகவும் இருந்துள்ளன. ஈவ் டீசிங் வழக்குகள் 172 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். dinamalar.com/

கருத்துகள் இல்லை: