ஞாயிறு, 30 டிசம்பர், 2012

Nepal விமான நிலையத்தில் போலீஸ் கற்பழிப்பு கொள்ளை

நேபாள விமான நிலை​யத்​தில் இளம்​பெண் பலாத்​கா​ரம்:​ பிர​த​மர் வீட்டின் எதிரே பெண்​கள் போராட்​டம்
நேபாள விமான நிலை​யத்​தில் இளம்​பெண் ஒரு​வர் பாது​காப்பு அதி​கா​ரி​க​ளால் பாலி​யல் பலாத்​கா​ரம் செய்​யப்​பட்​டார்.​ இந்த சம்​ப​வத்தை கண்​டித்து,​​ அந்​நாட்டு பிர​த​மர் இல்​லத்​துக்கு வெளியே பெண்​கள் இயக்​கத்​தி​னர் இரண்டு நாள்​க​ளாக போராட்​டம் நடத்தி வருகின்​ற​னர்.​ ​ சவூதி அரே​பி​யா​வில் வேலை​பார்த்து வந்த,​​ நேபா​ளத்​தின் வடக்​குப் பகுதி நக​ர​மான போஜ்​பூ​ரைச் சேர்ந்த 23 வயது இளம்​பெண்,​​ நவம்​பர் 21-ஆம் தேதி விமா​னத்​தில் நாடு திரும்​பி​னார்.​ ​ திரி​பு​வன் சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் வந்​தி​றங்​கிய அந்த இளம் பெண்ணை,​​ விமான நிலைய பாது​காப்பு அதி​கா​ரி​கள் சோம்​நாத் கனால்,​​ பர்​ஷு​ராம் பாஸ்​னெட் ஆகி​யோர் உட​மை​களை சோதனை போட வேண்​டும் என்று கூறி,​​ தனி அறைக்கு அழைத்​துச் சென்​ற​னர்.​ ​ அங்கு வைத்து அவ​ரி​ட​மி​ருந்த ரூ.2 லட்​சத்து 18 ஆயி​ரத்தை பறித்​துக் கொண்​ட​னர்.​ பின்​னர் அந்த இளம்​பெண்ணை பாலி​யல் பலாத்​கா​ரம் செய்​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இது​பற்றி,​​ உள்​துறை அமைச்​ச​கத்​தில் அந்​தப் பெண் புகார் செய்​தார்.​ ஏற்​கெ​னவே,​​ மூத்த போலீஸ் அதி​காரி ஒரு​வ​ரின் நெருங்​கிய உற​வி​னர் வீட்​டில் வேலை​பார்த்து வந்த 31 வயது பெண் ஒரு​வர்,​​ கடந்த 15-ஆம் தேதி மர்​ம​மான முறை​யில் இறந்​தார்.​ அதன் மீது நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​ட​வில்லை என்று கூறப்​ப​டு​கி​றது.​
​ இந்த இரண்டு சம்​ப​வத்​துக்​கும் நீதி கோரி,​​ அங்​குள்ள பெண்​கள் அமைப்​பைச் சேர்ந்த நூற்​றுக்​க​ணக்​கா​னோர்,​​ காத்​மாண்​டில் உள்ள பிர​த​மர் இல்​லத்​துக்கு வெளியே அமர்ந்து,​​ வெள்​ளிக்​கி​ழமை முதல் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற​னர்.​ போராட்​டத்​தில் பத்​தி​ரி​கை​யா​ளர்​கள்,​​ சினிமா நட்​சத்​தி​ரங்​கள் மற்​றும் தொலைக்​காட்சி பிர​ப​லங்​க​ளும் கலந்து கொண்​டுள்​ள​னர்.​ சனிக்​கி​ழமை கையெ​ழுத்து இயக்​க​மும் தொடங்​கப்​பட்​டது.​ இத​னி​டையே,​​ வெள்​ளிக்​கி​ழமை நடந்த அமைச்​ச​ரவை கூட்​டத்​தில்,​​ பலாத்​கார பாதிப்​புக்​குள்​ளான பெண்​ணுக்கு ரூ.1லட்​சத்து 50 ஆயி​ரம் இழப்​பீடு வழங்க முடிவு செய்​யப்​பட்​டது.​ மேலும்,​​ அந்த இரு சம்​ப​வங்​க​ளுக்​கும் கவலை தெரி​வித்த பிர​த​மர் பாபு​ராம் பட்​டா​ராய்,​​ பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு நீதி வழங்​கப்​ப​டும் என்​றும் உறு​தி​ய​ளித்​தார்
thenee.com

கருத்துகள் இல்லை: