செவ்வாய், 25 டிசம்பர், 2012

Delhi சமூக விரோதிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்

 இப்போது டில்லியை சமூக விரோதிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்; அங்கு கலந்து கொண்ட மகளிரே கூறுகின்றனர். குடித்துக் கும்மாளம்போட்டு, மகளிரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து, அருவருப்பாக பலரும் நடந்து கொள்ளும் நிலை என்றால், அப்பெண் பிரச்சினை வேறு எதற்கோ மூலதனமாக்கி விட்டுள்ளது.
டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை சில மனித மிருகங்கள் வன்புணர்ச்சி, வல்லுறவு கொண்டதினால் அவரது மானம் பறிபோய், உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தலைநகர் டில்லியிலா இப்படி என்ற நியாயமான கேள்வியை, அனைத்துத் தரப்பினரும் ஆத்திரம் பொங்க எழுப்பினர். மாணவர்கள் கொதித்து எழுந்தனர்; மகளிர் திரண்டனர் - அதெல்லாம் துவக்கத்தில். நியாயமானவையும்கூட.
மத்திய ஆட்சியாளரும் இதில் மெத்தனம் காட்டாமல், விரைந்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு எவரையும் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல்  விரைந்து நியாயம் கிடைக்கவும், அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப்படவும் ஆன அத்துணையும் செய்து கொண்டுள்ளனர். அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ஷிண்டே, டில்லி முதல்வர் திருமதி ஷீலாதீட்சத் ஆகிய எல்லோரும் உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கை, குற்ற வழக்கில் துரித நீதி, இனி இப்படி நடக்காத அளவிற்கு அரிய ஆலோசனைகள்,  செயல் திட்டங்கள்பற்றிய சிந்தனை எல்லாம் செய்யும்போது,
இப்போது டில்லியை சமூக விரோதிகள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்; அங்கு கலந்து கொண்ட மகளிரே கூறுகின்றனர். குடித்துக் கும்மாளம்போட்டு, மகளிரை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து, அருவருப்பாக பலரும் நடந்து கொள்ளும் நிலை என்றால், அப்பெண் பிரச்சினை வேறு எதற்கோ மூலதனமாக்கி விட்டுள்ளது.
பா.ஜ.க.வினர் நாடாளுமன்றத்தில் செய்த ரகளையை, மீண்டும் அடுத்த கட்டமாக ஆளும் அய்க்கிய முற்போக்கு அரசுக்கு எதிரான ஆயுதமாக இதை  கையில் எடுத்து, பல்வேறு காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்!
 வெறும் வாயை மென்ற எதிர்க்கட்சிகளுக்கு இந்த அவல் கிடைத்துள்ளது!

ஊடகங்கள் உடனே அவர் ராஜினாமா செய்வாரா? உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்வரா? என்று ஒரு வகையான தேவையற்றவைகளை திட்டமிட்டே கிளப்பி அரசியல் நடத்துகின்றன. U.P.A. அரசுக்கு புது நெருக்கடியை உருவாக்கவே சர்வ கட்சிக் கூட்டம் கூட்டுக, நாடாளுமன்றத்தைக் கூட்டுக என்று அடாவடித்தனத்தில் ஈடுபட்டு குடிஅரசுத் தலைவரிடம் ‘காவடி’ எடுக்கின்றனர். டில்லியில் ஒரு காவல்துறை ஊழியர் உயிர் துறந்துள்ளார். அதுவும் வேதனையானது. இது ஒரு நிருவாகப் பிரச்சினை; உடனே பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட அனைவரும் நடவடிக்கை எடுத்து, இந்திய மாநில அதிகாரிகளின் மாநாடு, சந்திப்பு உட்பட ஏற்பாடு செய்து இனி இப்படி எங்கும் நடக்காமலும் செய்துவிட்ட பிற்பாடு கூட ஏன் இதை ஊதி ஊதி பெரிதுபடுத்துகின்றனர்?
முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் (பா.ஜ.க.வின்) பிரதமராக வாஜ்பேயி அவர்கள் இருந்தபோது கிறித்துவ கன்னியா°திரீகள் ‘‘கற்பழிக்கப்பட்ட’’ பிரச்சினை எழுப்பப்பட்டபோது, அதற்கென்று அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கலாம் என்று கூறி அவர் கண்டனத்துக்கு ஆளான பழைய கதையை வசதியாக பா.ஜ.க. மறந்து விட்டதா? மறைத்துவிட விரும்புகிறதா?
உரிய நடவடிக்கை தேவை; அதே நேரத்தில் சமூக விரோதிகளை அடக்கி, சந்தர்ப்பவாத அரசியலையும் தடுக்க வேண்டியது அவசியம்! அவசியம்!! அதற்காக துள்ளிக் குதிக்கும் ஊடகங்கள், தலைவர்கள்  தமிழ்நாட்டில் நடைபெறும் வன்கொடுமைகளையும் கண்டிக்க வேண்டாமா?

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: