செவ்வாய், 25 டிசம்பர், 2012

உங்கள் பணம்; உங்கள் கையில் 2013க்குள் இந்தியா முழுவதும்

புதுச்சேரி : மானிய தொகையை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கி மூலம் செலுத்தும்  ‘‘உங்கள் பணம்; உங்கள் கையில்'' என்ற திட்டம் புதுச்சேரியில் வரும் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. 2013க்குள் இந்தியா முழுவதும் கொண்டு வரப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்த திட்ட ஆய்வுக்காக நேற்று புதுச்சேரி வந்த அவர், அதிகாரிகள் கூட்டத்தில் பேசியதாவது: மத்திய அரசின் ஏராளமான திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு பணமாக செல்கிறது.  மத்திய அரசின் 2 லட்சம் கோடி மானியம் மக்களுக்கு நேரடியாக போய் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதோடு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு, ஆதார் அடையாள எண்ணை இணைக்க வேண்டும். இதில் ஊழலுக்கு இடம் கிடையாது. ஜனவரி மாதம் முதல் புதுச்சேரியில் செயல்படுத்தப்படுகிறது. 2013ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.


2008ம் ஆண்டு 70 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தது, 52 ஆயிரம் கோடி கல்விக்கடன் வழங்கியதில் வங்கிகள் ஒத்துழைப்பு அளவிட முடியாது. அதுபோல் இந்த திட்டத்தையும் வங்கிகள் முன்னெடுத்து செல்ல வேண்டும்Õ என்றார். முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் தற்போது 90 சதவீதம் பேர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இதன்மூலம் நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தின் மூலம் புதுச் சேரியை சேர்ந்த 16 ஆயிரம் பேர் பயன்பெறுகின்றனர் என்றார். .dinakaran.com

கருத்துகள் இல்லை: