ஞாயிறு, 23 டிசம்பர், 2012

போராட்ட செய்தி சேகரிக்க சென்ற டி.வி. நிருபர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலி!

Viruvirupu
நடிகை மொமோகோ
நடிகை மொமோகோ
மணிப்பூரில் நடிகை மொமோகோ விவகாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், செய்தி சேகரித்துக் கொண்டிருந்த டிவி நிருபர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
தாக்கப்பட்ட பின் நடிகை மொமோகோநடிகை மொமோகோ மீது கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து இம்பாலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நாகலாந்து அமைப்பினருக்கு எதிராக திரண்ட இளைஞர்கள் சிலர் பஸ் ஒன்றுக்கு தீ வைக்க முயற்சித்தனர். அதைத் தடுக்கும் வகையில் கலவரக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது அங்கு நின்று செய்தி சேகரித்துக் கொண்டிருந்த டி.வி. நிருபர் ஒருவர் மீது 2 குண்டுகள் பாய்ந்தன. சம்பவ இடத்திலேயே அந்த நிருபர் உயிரிழந்திருக்கிறார்
மணிப்பூரின் சாண்டல் மாவட்டத்தில் கடந்த 18-ம் தேதி நடிகை மொமோகோ இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தாக்கப்பட்ட பின் நடிகை மொமோகோ< சாண்டல் பஜார் ஹைஸ்கூல் மைதான விழா மேடையில் இருந்த மொமோகோவை அங்கு வந்த NSCN (National Socialist Council of Nagaland – நாகலாந்து தனிநாடு கோரும் இயக்கம்) தளபதிகளில் ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாகத் தாக்கி வீழ்த்தினார். எழுந்த நடிகையை மீண்டும் மீண்டும் தாக்கி வீழ்த்திய இந்த சம்பவம் மணிப்பூரில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் இம்பாலில் நேற்று முன்தினம் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க சென்ற நடிகர், நடிகையர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலரும் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு காலவரையற்ற முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இன்று 2-வது நாளாக முற்றிலுமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: