Hospital staff carry the body of the Indian
gang-rape victim to the police morgue vehicle at the Mount Elizabeth
hospital in Singapore. Picture: AFP/Rosland Rahman
மருத்துவ மாணவி சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து,
டில்லியில் பதட்ட நிலை தோன்றியுள்ளது. முக்கிய சாலைகள் இன்று காலையில்
இருந்தே மூடப்பட்டன. வேறு சில சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது. மூடப்பட்ட சாலைகளிலும், ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.டில்லியின் பிரதான சாலை, ஜனாதிபதி மாளிகை செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மெட்ரோ ஸ்டேஷன்களின் முன்னும் போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர்.
இன்று காலையில் டில்லி போலீசார், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாத்து வருகின்றனர். அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் எந்த நிமிடமும் வீதிகளில் இறங்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. Viruvirupu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக