திங்கள், 24 டிசம்பர், 2012

Malnutrition சோமாலியாவை விட குஜராத்தில் தான் பரிதாபமாக உள்ளது.

போபால், டிச. 24- இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், மார்கண்டேய கட்ஜு, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்தார். போபாலில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:குஜராத் மாநிலம் முன்னேறி விட்டதாக நரேந்திரமோடி கூறிவருகின்றார். இந்த முன்னேற்றம் சராசரி மனிதனின் முன்னேற்றத்துக்கு எந்த வகையிலும் உதவிடவில்லை.மோடியின் தற்பெருமை பேச்சால், தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை குஜராத் மக்கள் உணரும் காலம் வரும். குஜராத்தில் வாழும் ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழை நாடான சோமாலியாவை விட குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது. தொடர்ந்து, 3 ஆவது முறை முதலமைச்சராவது என்பது பெரிய காரியம் அல்ல. தற்போது, நம் நாட்டில் தேர்தலில் போட்டியிடுபவர்கள், எப்படி வெற்றியடைகின்றார்கள் என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் மூலம், மோடியின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை எதன் மூலமாகவும் துடைக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: