![]() |
Krishnamurthi S : இப்படி ஒரு அரசியலும் இருக்கிறதா?
ஏர் இந்தியா விமானம் மேல் எழும்ப முடியாமல்.. கிளம்பிய சில விநாடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது ஏன்?
விமானத்தின்.. அளவிற்கு அதிகமான எடையளவு சரிபார்ப்பதில் ஏற்பட்ட குழப்பாக இருக்கும் என்று சில வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
அப்படி என்றால் அவற்றை நிர்வாகம் செய்பவர்கள் யார்?
இதன் பின்னணியில் மறைக்கப்பட்ட மர்மம் என்ன?
விமானங்களையும், விமான நிலையங்களையும் விமானத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் பராமரிப்பதில் சர்வதேச அளவில் புகழ்பெற்று, நீண்ட அனுபவமும் கொண்ட, *CELEBI (Çelebi Aviation Holding)* என்னும் நிறுவனம் இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து வந்தது.
அவற்றில், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து புறப்பட்ட விமானம்தான் நேற்று (12/6/2025) கீழே விழுந்து சிதறியது.
ஆனால்..
CELEBI நிறுவனத்துடன் 2008 இல் போடப்பட்ட ஒப்பந்தம் 2032 வரைக்குமானது..
*கடந்த மே மாதம் 15 ஆம் தேதியுடன் ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, CELEBI நிறுவனம் வெளியேற்றப்பட்டது.*
சர்வதேச அளவில் பெயர் பெற்ற, அனுபவத்திலும் முதிர்ச்சியான இந்நிறுவனம் ஒப்பந்த காலம் முடிவதற்கு ஏழாண்டுக்கும் முன்னரே வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என்ன?
பஹல்காமில் நடைப்பெற்ற தாக்குதலை ஒட்டி ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து துருக்கி மீது சங்பரிவார் கும்பலுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்வு.
அந்த வெறுப்புணர்வை தேச உணர்வாக பாவித்துக் கொண்ட பாஜகவின் மோடி அரசு, CELEBI நிறுவனத்தை வெளியேற்றியது. அகமதாபாத் விமான நிலைய ஒப்பந்தத்தை முறித்தது..
ஆம். துருக்கி நாட்டைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் நிறுவனம்தான் CELEBI.
இங்கே தன் ட்விஸ்ட்.. ஆரம்பம்.
*தேசப்பற்றை காரணம் காட்டி CELEBIயை வெளியேற்றிய மோடி அரசு, அந்நிறுவனம் பார்த்து வந்த விமானம்-விமான நிலையங்கள் மற்றும் விமானத்தில் ஏற்றப்படும் சரக்குகளின் எடை பராமரிப்பு பணிகளை 'AAHL' என்னும் நிறுவனத்திடம் அதே நாளில் ஒப்படைத்தது.*
அகமதாபாத் விமான நிலையத்தை கடந்த மே-15 முதல் பராமரித்து வருவது இந்த நிறுவனம் தான்.
*AAHL என்பதன் விரிவாக்கம்,' Adani Airport Holding Limited.'*
*ஆம். SELEBI யை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தில் அதானியை அமரவைத்தது பாஜக மோடி அரசு. இதற்கு தான் அந்த தேசபக்த நாடகம்.*
*Airindia விமானம் TATA நிறுவனத்திற்கு சொந்தமானது ..
தான். ஆனால்..அந்த விமான நிலையத்தில் விமானங்களையும், விமான நிலையங்களையும் விமானத்தில் ஏற்றப்படும் சுமைகளையும் பராமரிப்பது.. AAHL என்ற அதானி நிறுவனமே.*
தனது நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் விபத்திற்கு உள்ளானதை தார்மீக பொறுப்பேற்றார் டாடா நிறுவனத்தின் தலைவர்.
ஆனால்..
அகமதாபாத்தில் (AMD) 2024 முதல் முழு தரைச் சேவையையும் AAHL மேற்கொள்கிறது** (CELEBI-க்கு பதிலாக).
அதானியின் நிறுவனம்.. விமான நிலைய- எடை சார்ந்த( Baggage Handling)) பணிகளில் போதிய அனுபவம் கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.
இதுவரை விபத்து குறித்து(ஊடகங்கள் மூலம்) வந்துள்ள அனுமானங்களில் 'அந்த விமானம் மேலே எழமுடியாமல் போனது ஏன்?' என்கிற கேள்வியும் இடம் பிடிக்கிறது.
ஆனால்..அதானி நிறுவனம் குறித்து ஊடகங்கள் இதுவரை மூச்சு 🤫 விடவில்லை.
விமானப் பராமரிப்பில் ஏதும் பிரச்சனையா? ஏற்றப்பட்ட எடையில் பிரச்சனையா? இகற்கெல்லாம் விடை தெரிய மோடியின் நண்பரான அதானியின் நிறுவனத்திடமும் நியாயமான விசாரணை விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
*ஆனால்.. மோடியின் ஆட்சியில் நியாயங்கள் கேள்வி குறியே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக