ஞாயிறு, 8 ஜூன், 2025

தலைவரே... திமுகவுக்கு எதிர்கட்சியாக திமுக தொண்டர்களே மாறி வருகிறார்கள். கவனம் செலுத்துங்கள்.

May be an image of text

 Vimalaadhithan Mani : ·எந்த பதவிகளிலும் இல்லாத கழகத்தின் கடைசி தொண்டன்தான் கழகத்தின் ஆணிவேர் என்று தலைவர் தளபதி அவர்கள் வாயில் சொல்லி எந்த பலனுமில்லை. 
முதலில் கழகத்துக்காக உண்மையிலேயே களமாடும் உடன்பிறப்புகளை முழுமையாக  சரியாக அடையாளம் கண்டு ஒருங்கிணைத்து அவர்களின் களப்பணியை முறையாக  அங்கீகரியுங்கள் தலைவரே. 
கட்சி பதவிகளில் எல்லாம் முழுமையாக அமர்ந்துகொண்டு கழக தொண்டர்களை, கழக அபிமானிகளை கொஞ்சமும் மதிக்காமல் திமிர்த்தனம் செய்துகொண்டு இருக்கும் கட்சி நிர்வாகிகளை தொண்டர்கள் மற்றும் கழக அபிமானிகளுக்கான மரியாதையை முதலில்
கொடுக்க சொல்லுங்கள்.
வட்டம், மாவட்டம் பொறந்த நாள், இறந்த நாள், கல்யாண நாள், காதுகுத்து, திரட்டினு எப்பவும் அதிகாரத்தின் பின்னால் கூஜா தூக்கிகிட்டு சுத்தி அல்லக்கை வேலை செய்யாத சுயமரியாதைக்காரர்கள், கழக அபிமானிகள் என்று பஞ்சத்துக்கு கட்சிக்கு வராத பாரம்பரிய கட்சிக்காரர்கள்  கழகத்தில் நிறைய இருக்கிறோம். 

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூஜா தூக்கும் அல்லக்கை வேலை செய்ய விரும்பாத இந்த கழக அபிமானிகளின்  சுயமரியாதையையும்,  கழகத்தின்மீதான அவர்களின் பற்றையும் கழகத்தின் நிர்வாகிகளும் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களும் முதலில் புரிந்துகொள்ளுங்கள். 

இந்த சுயமரியாதைகாரர்களின் உழைப்பு இல்லாமல் இன்று நீங்கள் யாரும் அதிகாரம் மிக்க உங்களுடைய தற்போதைய பதவிகளில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். நாளை ஆட்சி போனால் உங்கள் பதவி போய்விடலாம். ஆனால் கட்சிக்கான இந்த சுயமரியாதைக்காரர்களின் உழைப்பு எப்போதும் நிற்கவே நிற்காது.
 May be an image of scarf and text that says 'இதுதான உணமை #திமுகவிற்கு_உண்மை உண்மையா #உழைத்தவன் லிஸ்டு எடுங்க... பாதிப்பேர் #செத்து போயிறுப்பான் மீதிப்பேர் #வறுமையில இருப்பான். சொஞ்சம்பேர் திமுக கரை வேஷ்டி கடைசி வரை கட்டிக்கிட்டு எங்கயவாது #வாதம் பன்னிட்டு இருப்பான். இவங்களால் மட்டும் தான் திமுக #ஓளிர்கிறது இன்று வரை. Google CGoogleLens Lens'

நேற்றுவரை வேற்று கட்சிகளில் இருந்துகொண்டு கழகத்தை கழுவி ஊற்றியவர்கள் கழகத்தில் சேர்க்கப்பட்டு உடனடியாக பொறுப்புகளும் வழங்கப்படுகின்றது. உண்மையாக உழைக்கும் தொண்டர்கள், கழக அபிமானிகள் யாரும் கட்சி நிர்வாகிகளை நெருங்க கூட முடியவில்லை. 
 

பிறகு உண்மையாக உழைக்கும் தொண்டர்கள், கழக அபிமானிகள் எப்படி உற்சாகமாக களப்பணியாற்றுவார்கள் தலைவரே ? 
அப்புறம் எங்க 200 சீட் ஜெயிக்கறது தலைவரே ?🙄🙄
தேர்தல் கிட்ட நெருங்கிடுச்சு. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பதை நினைவில் வையுங்கள் தலைவரே 🙄🙄
Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

செவிடன் காதில் ஊதிய சங்கு. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உண்மை. புரிந்து கொண்டு செயல் பட்டால் தப்பிக்கலாம். அலட்சியப்படுத்தினால் ambo என்றுதான் போகும்