சனி, 2 அக்டோபர், 2010

Susex,surreay,பிரிட்டனில் இரண்டு இலங்கையர்கள் கைது

பிரிட்டனில் இரண்டு இலங்கையர்கள் கைது;ஐக்கிய ராச்சியத்தின் குடிவரவு சட்டத்தை முறியடித்தமை தொடர்பில், இரண்டு இலங்கையர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் சசெக்ஸ், சரெய் மற்றம் கென்ட் ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் பிரித்தானிய எல்லை பாதுகாப்பு தரப்பினர் பாரிய சோதனைகளை நடத்தியுள்ளனர்.
சுமார் 150 படையினர் வரையில் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் இடம்பெற்று வரும் சட்ட விரோத தொழிலாளர் பரிமாற்று நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகளை அடுத்து, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது இந்த குற்றச்சாட்டுகள் உட்பட, பணக் கடத்தல் போன்ற குற்றச் சாட்டுக்களுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை சட்ட விரோத ஆவணங்களுடன் பிரித்தானியாவில் தங்கி இருந்த குற்றச்சாட்டின் கீழ் இலங்கையர்களாக இருக்கலாம் என நம்பப்படும் 25 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள் சசெக்ஸ் மற்றும் சரெய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக பொதுமக்களுக்கான தொலைபேசி இலக்கம் ஒன்றையும் பிரித்தானிய பொலிஸா வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை: