கனடாவில் அகதி அந்தஸ்து கோரியவர்களில் 85.2 சதவீதமானோருக்கு 2010 ஆம் ஆண்டு, முதல் காலப்பகுதியில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகவலை கனடா இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இதன் பிரகாரம் 345 பேருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் 50 பேரின் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 705 பேர் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோரிய இலங்கையரில் அநேகர் தமிழர்கள் என கனடாவின் குடிவரவு திணைக்கள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர்கள் 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய இறுதிகட்ட யுத்த சூழலின் போது பாதிக்கப்பட்டவர்கள் என ஹொஸ்கோர்ட் ஹால் லோ ஸ்கூலின் விரிவுரையாளர் சீன் ரேஹாக் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்த போதும், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 425 இலங்கையர்களுடன் கப்பல் ஒன்று வன்கூவர் துறைமுகத்தை வந்தடைந்தது.
இவ்வாறு சட்டவிரோத கப்பல்கள் நாட்டை வந்தடையுமிடத்து, சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டவர்களும் நாட்டை வந்தடையக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. சிலர் அதிக பணத்தைக் கொடுத்து இவ்வாறு சட்ட விரோதமாக கனடாவை வந்தடைகின்றனர்.
சிலர் அகதி அந்தஸ்து கோரி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடிவரவு அமைச்சர் ஜெசன் கென்னி கருத்து வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக