புதன், 29 செப்டம்பர், 2010

K.T.Rajasingam:அல்பிரட் துரையாப்பாவை,காண்டீபன் அமர்தலிங்கமே படுகொலை செய்ததா

அல்பிரட் துரையப்பா படுகொலை:புலிகள் செய்யவில்லை! 35 ஆண்டுகளின் பின் உண்மை அம்பலம்: திவயின

35 ஆண்டுகளுக்கு பின்னர் யாழ். மாநகர மேயர் அல்பிரட் துரையப்பாவின் படுகொலைச் சம்பவம் குறித்த உண்மை அம்பலமாகியுள்ளதென திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபையின் மேயராகக் கடமையாற்றிய அல்பிரட் துரையப்பாவை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படுகொலை செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கருத்துக்களை வெளியிட்ட ஆங்கில இணையதளமொன்றின் (ஏசியன் ட்ரிபியூன்) ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அல்பிரட் துரையாப்பாவை, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அமர்தலிங்கத்தின் மூத்த மகன் காண்டீபன் அமர்தலிங்கமே படுகொலை செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமிர்தலிங்கத்திற்கும் இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கும் தொடர்ப்பு இருப்பதாக யாழ்ப்பாணம்  பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய ஆர்.சுந்தரலிங்கம் தெரிவித்திருந்ததாக ராஜசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
காண்டீபன் அமிர்தலிங்கம் தனது தாயாரான மங்கையற்கரசி அமிர்தலிங்கத்துடன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து, லண்டன் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 35 ஆண்டுகளாக இந்தப் படுகொலைச் சம்பவத்தை பிரபாகரன் மேற்கொண்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
யாழ்ப்பாணம்  பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய கே.சுந்தரலிங்கம் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் இந்தப் படுகொலைச் சம்பவம் குறித்து அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: