வியாழன், 30 செப்டம்பர், 2010

அயோத்தி நிலத்தை 3 ஆக பிரித்து ராமர் கோவில் கமிட்டி, பாபர் மசூதி கமிட்டி, அகராவிடம் வழங்க உத்தரவு

அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும்,

இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை இன்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தரம்வீர் சிங் சர்மா, சுதிர் அகர்வால், சிப்கத் உல்லா கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது.

ஆனால், ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனியே வெவ்வேறு தீர்ப்பை வழங்கினர். மொத்தத்தில் அவர்கள் அளித்த தீர்ப்பின்படி நிலத்தை 3 மாதத்துக்குள் மூன்றாகப் பிரித்து கோவில் கட்டிக் கொள்ள ராமஜென்ம பூமி அறக்கட்டளையிடமும், இன்னொரு பகுதியை அங்கு ஏற்கனவே கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேத்தில் மொத்த நிலத்தையும் தங்களிடம் தர வேண்டும் என்ற சன்னி முஸ்லீம் வக்பு வாரியத்தின் கோரிக்கையை 3 நீதிபதிகளும் ஒட்டு மொத்தமாக நிராகரித்துவிட்டனர்.

இதன் மூலம் பாபர் மசூதி இருந்த இடமான 2,400 சதுர அடி நிலம் மூன்றாகப் பிரிக்கப்படும். இதைப் பிரித்து மூவரிடம் வழங்கும் வரை இப்போது இருக்கும் நிலையே, அதாவது, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அந்த இடத்திலிருந்து ராமர் சிலை அகற்றக் கூடாது என்றும் தீர்ப்பளித்தனர்.

இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்)

மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி சுதிர் அகர்வால் தனது தீர்ப்பில், இந்த மசூதி கட்டப்பட்ட இடத்தில் கோவில் இருந்துள்ளது என்பதை இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு நிரூபித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதை இஸ்லாம் மதமே தவறு என்கிறது என்றார்.

நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து, அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

இவ்வாறு தனித்தனியே நீதிபதிகள் கருத்துத் தெரிவி்த்தாலும் மூவரும் மொத்தத்தில் அளித்த தீர்ப்பின்படி, இந்த இடத்தில் 3ல் 2 பங்கை இந்துக்களிடமும் (ராமர் கோவில் கட்டவும், நிர்மோகி அகராவிடமும்), 1 பங்கு இடத்தை பாபர் மசூதி கமிட்டியிடமும் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இந்த இடத்துக்கு உரிமை கோரி ராம ஜென்மபூமி நியாஸ், நிமோகி அகரா ஆகியவை 1950களில் வழக்குத் தொடர்ந்தன. 1961ம் ஆண்டில் சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு கடந்த 60 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  Read:  In English 
இந்தத் தீர்ப்பையொட்டி நாடே பெரும் பரபரப்பில் ஆழ்ந்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து எந்தத் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப் போவதாக சன்னி முஸ்லீம் வக்பு வாரியமும் இந்து மகா சபாவும் அறிவித்துள்ளன. இதனால் இந்தத் தீர்ப்பே இறுதியானதல்ல. உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்பே இறுதியானதாகும்.

பதிவு செய்தவர்: கருணாநிதி
பதிவு செய்தது: 30 Sep 2010 8:18 pm
ராமன் பிறந்ததை சொன்ன நீதிபதி அவர்களே,ராமன் படித்த பல்கலைகலகத்தையும் சொன்னால் நன்றாக irukkum

பதிவு செய்தவர்: unnmai
பதிவு செய்தது: 30 Sep 2010 8:15 pm
intha theerpu solluvatharku naalu peruda picchai edukalam

பதிவு செய்தவர்: ஏழை இந்தியன் துபாய்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:15 pm
நீதியை குழி தோண்டி புதைத்து விட்டார்கள் மலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள் பாவம் எல்லாமே கூட்டு களவாணிகள் தான் இந்த காவிகளுக்கு இறைவனின் தீர்ப்பே இறுதியானது அதுவரை பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை காத்திட வேண்டியது அவசியம்

பதிவு செய்தவர்: தி க தோழன்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:15 pm
ராமர் என்ற கடவுள் தன் கடத்தப்பட்ட மனைவியை (மனைவியை கூட காப்பாற்ற தெரியாத இவன் கடவுளா? ) காப்பாற்ற மிகேப்பெரிய யுத்தம் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை போரில் கொள்ளுவார். தன் சொந்த சுயநலத்திற்காக லட்சக்கணக்கான மக்களை கொள்ளும் இவன் கடவுளா ? இந்த கடவுள் எப்படி ஜீவ காருண்யம் பற்றி சொல்லலாம் ? இந்த ராமனுக்கு கோயில் தேவையா? இதற்காக கலவரம் என்று கூறி அப்பாவி மக்களை கொல்லணுமா ?
பதிவு செய்தவர்: தி க தோழன்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:16 pm
கடவுளான ராமனுக்கு தன மனைவி பத்தினியா இல்லையா என்று எழுந்த சந்தேகத்தால் (மனைவியை சந்தேகப்படும் இவன் கடவுளா?) மனைவியை தீயில் இறங்க செய்ததை இன்று உள்ளா மா பாதகர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள். இந்த கொடூர பரீட்சை செய்து தன கொடூர என்னத்தை காட்டிய ராமன் எப்படி கடவுளாக முடியும். இன்றைக்கு ஒருவன் இப்படி செய்திருந்தால் இவனை சேடிஸ்ட் என்றுசொல்லி மரணதண்டனை தானே தீர்ப்பாக நீதி மன்றங்கள் கொடுத்திருக்கும். இதற்கு ஏழுமலையின் பதிலென்ன ?
பதிவு செய்தவர்: தி க தோழன்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:17 pm
உண்மையில் சீதாவை கற்புடன் திருப்பி அனுப்பிய ராவணன் தான் யோக்கியன். ராவணன் மற்றும் அவனை சார்ந்த மக்கள் திராவிடர்கள் என்பதால் அவர்களை அரக்கர்களாக அயோயோக்கியர்கலாகவும் ராமாயணத்தில் சித்தரித்திருப்பார்கள்.ராமனுக்கு உதவி செய்த திராவிடர்களை (ஹனுமான், வாலி, சுக்க்ரீவன்) குரங்கினமாக காட்டி இருப்பார்கள் இந்த அயோக்கிய பி.ராமினர்கள்.

பதிவு செய்தவர்: True Indian
பதிவு செய்தது: 30 Sep 2010 8:12 pm
நீதிபதி சிப்கத் உல்லா கான் தனது தீர்ப்பில், கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அந்த இடத்தில் கோவில் இருந்து, அது நெடுங்காலமாக சிதிலமடைந்து கிடந்தது. கோவில் முழுவதும் சிதிலமடைந்த பி்ன்னரே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. இடிந்து கிடந்த கோவிலின் சில கட்டுமானப் பொருட்களும் மசூதி கட்ட பயன்படுத்தப்பட்டுள்ளன---நல்ல தீர்ப்பு

பதிவு செய்தவர்: Abu Dhabi Karthik
பதிவு செய்தது: 30 Sep 2010 8:08 pm
Forget the Ayothi issue. Enjoy the latest entertainment Enthiran. Enthiran released in Dubai and Abu Dhabi on Thursday 30th 6 shows per screen per day. Film is a world class tamil movie. Will be a mega duper hit. A proud tamil movie for world screens.

பதிவு செய்தவர்: செபஸ்டின்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:08 pm
எது எப்படியோ இந்த நல்ல தீர்ப்பால் அதிகம் கவலை படுவது ஆர் எஸ் எஸ் காரர்களுக்ம் பிஜேபி கட்சியும்தான். இனி அவர்களின் பிழைப்பு எப்படி நடக்கும் என்ற காரணம்தான். கண்டிப்பாக இந்த அமைப்புகளால் கீழ்மட்ட மக்களுக்காக போராடவே முடியாது. அதனால்தான் இவர்கள் இந்து முஸ்லிம் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்தினார்கள். இப்பொழுது அதுவும் முடியாமல் போகிவிட்டது.

பதிவு செய்தவர்: இசைஅன்பன்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:05 pm
இந்திய நாட்டில் நீதிமன்றத்தின் மேல் இருந்த நம்பிக்கையும் மரியாதையும் போய்விட்டது

பதிவு செய்தவர்: டீல் முருகா
பதிவு செய்தது: 30 Sep 2010 8:05 pm
ஆறின காஞ்சி பழங்கஞ்சி

பதிவு செய்தவர்: துரைமலைவேல் துபாய்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:01 pm
 
இந்த தீர்ப்பு காங்கிரஸ் காரர்களின் கபட நாடகத்திற்கு
 
பதிவு செய்தவர்: யூசுப்
பதிவு செய்தது: 30 Sep 2010 7:58 pm
நீதிக்கு தலை வணங்குவோம் . இனி இந்த பிரச்சனையை வைத்து பிஜேபி அரசியல் நடத்த முடியாது. மக்கள் ஒற்றுமையுடன் இந்திய முன்னேற்றத்துக்கும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கும் மட்டும் பாடுப்படும் கட்சிகளை மட்டும் ஆதரிக்க வேண்டும் . வாழ்க இந்தியா...
பதிவு செய்தவர்: இசைஅன்பன்
பதிவு செய்தது: 30 Sep 2010 8:09 pm
நீதி என்றால் தலை வணகிதான் ஆக வேண்டும் இது நீதி இல்லை நீதி படுகொலை

பதிவு செய்தவர்: இசைஅன்பன்
பதிவு செய்தது: 30 Sep 2010 7:57 pm
ஆமாங்க இந்தியா நியாப்படி நான் ஒரு வீட்டை வன்முறையை கையாண்டு இடிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் எனக்கு இடித்த அந்த வீட்டை மூன்றாக பங்கு வைத்து அதில் இரண்டு பங்கை எனக்கு கொடுத்து விடுவார்கள் ஒரு நீதி மன்றம் வழங்கும் தீர்ப்ப்பா இது? நியமாக தீர்ப்பு வழங்க தைரியம் திராணி இல்லாதவர்கள் ஓன்று நிலம் முஸ்லிம்களுக்கு சொந்தம் என சொல்லி இருக்க வேண்டும் அல்லது இந்துகளுக்கு சொந்தம் என சொல்லி இருக்க வேண்டும் இந்த தீர்ப்பு வரலாற்றில் ஒரு துரோகமாகத்தான் பதியப்படும்

பதிவு செய்தவர்: Abu Dhabi Karthik
பதிவு செய்தது: 30 Sep 2010 7:56 pm
Forget the Ayothi issue. Enjoy the latest entertainment Enthiran. Enthiran released in Dubai and Abu Dhabi on Thursday 30th 6 shows per screen per day. Film is a world class tamil movie. Will be a mega duper hit. A proud tamil movie for world screens.

பதிவு செய்தவர்: unmai
பதிவு செய்தது: 30 Sep 2010 7:55 pm
ஓரளவு நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது எனினும் முழு இடமும் இந்துக்களுக்கு வழங்கபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,நீதிபதிகள் யாவருமே இந்துக்கோவில் இருந்ததை உறுதிபடுத்தியுள்ளது மகிழ்ச்சிஅளிக்கிறது.

பதிவு செய்தவர்: anniyan
பதிவு செய்தது: 30 Sep 2010 7:55 pm
கதை அப்படி போகுதா

பதிவு செய்தவர்: ஐயோ ராமா
பதிவு செய்தது: 30 Sep 2010 7:55 pm
தீர்ப்பு வடிவேலு படத்தில் ஒருத்தியை நான்கு கணவனுக்குள் ஒருத்தனுக்கு பிரித்ஹ்டிகொடுப்பதுபோல் தான் இருக்கு. ஒரு இடம் எப்படி மூவருக்கும் சொந்தமாக முடியும். ஒருவேளை உங்கள் பாஞ்சாலி பத்தினி தத்துவம்போல் முடிந்தாலும் முடியும்.

பதிவு செய்தவர்: ராஜு
பதிவு செய்தது: 30 Sep 2010 7:54 pm
முழு பகுதியும் இந்துகளுக்கே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இருந்தும் நீதிபதிகள் மூன்று தானதர்ம மனப்பான்மை உள்ளவர்கள் ஆகவே இது சிறந்த தீர்ப்ப்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்

பதிவு செய்தவர்: ராமர் அப்துல
பதிவு செய்தது: 30 Sep 2010 7:54 pm
இந்த இடத்தை வியாபார சந்தையாக மாற்றி நாட்டின் வளர்சிக்கு உதவுமாறு வேண்டிகொள்கிறோம் .இப்படிக்கு காந்தி அர்ரகட்டளை & ரகுமான் antikoljirom

பதிவு செய்தவர்: சீதை
பதிவு செய்தது: 30 Sep 2010 7:53 pm
நீதிமான்களே ஏன் பு ருசன் ராமனுக்கு ஒரு பங்கு கோடுடீர்கள் சரி அப்படியே ஏன் க ல்லப் பு உருசங்கள் ஆனா ராவணனுக்கும் லச்மனனுகும் பங்கு கொடுத்து விடுங்கள் அப்பத்தான் எனக்கு நிம்மதி

கருத்துகள் இல்லை: