சனி, 2 அக்டோபர், 2010

Australia.தமிழ் குடும்பம் பொலிஸார் வீட்டுக்காவலில்

புலிகளின் கழுத்தை இறுக்கும் அவுஸ்திரேலியா....?
அவுஸ்திரேலிய சிட்னி நகரில் இலங்கை தமிழ் குடும்பமொன்றை அந்தநாட்டுப் பொலிஸார் வீட்டுக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலாக விளங்கினர் எனக்கூறி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவிலிருந்து குறித்த குடும்பத்தினர் வில்லாவுட் தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், 6 மற்றும் 3 வயது பிள்ளைகளை உள்ளடக்கிய இந்தக் குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக் குடும்பத்திலுள்ளப் பெண் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதிமன்ற கட்டமைப்பில் கடமைப் புரிந்ததாகவும், 78 பேரை ஏற்றிவந்த ஓசியானிக் வைக்கிங் கப்பலிலிருந்து காப்பாற்றப்பட்டவர்களில் ஒருவர் எனவும் தெரியவந்துள்ளது. இவரின் கணவர் கடந்த வருடம் நடுப்பகுதியில் கிறிஸ்மஸ் தீவுக்கு சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: