தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை அரசாங்கம் உபசரிக்கும் முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என எதிர்கட்சியின் பிரதித்தலைவர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார். பிபிசி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் பெருந்தலைகளான கே.பி. கருணா, பிள்ளையான் போன்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியும், ஏனைய சிறிய உறுப்பினர்களை தண்டனைக்கு உட்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஒரே சமமாக பார்க்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஏனைய குற்றவாளிகளை போல முன்னாள் போராளிகளை உபசரிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அறங்கூறுனர் சபையின் விமர்சனத்துக்கு பதில் வழங்கும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பி.பிசியிடம் பதில் வழங்கிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளை தடுத்து வைத்திருப்பதன் காரணமாக பல்வேறு தகவல்களை அரசாங்கத்துக்கு தெரிந்துக் கொள்ள கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக