செவ்வாய், 28 செப்டம்பர், 2010

லஞ்சம் ஒழிப்பது பணி ., ஆனால் செய்தது லஞ்சம் வாங்குவது., இப்படியும் ஒரு இன்ஸ்பெக்டர்

மதுரை: பணியில் பல விதம் உண்டு போலீசார் பாதுகாப்பது என்றால் அவர்களே சில நேரங்களில் பழிகாரனாக மாறுவதும் உண்டு. வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவல்காரனாக இருக்க வேண்டியவன் திருடனாக மாறிய கதை மதுரையில் நடந்திருக்கிறது. போலீசில் பல பிரிவுகள் உண்டு போலீசுக்கே போலீஸ் இருப்பதுபோல நமது நாட்டில் பல பிரிவு கண்காணிப்பில் உண்டு . ஆனால் இந்த போலீசே குற்றவாளியாக நிறுத்தப்படுவது தலைக்குனிவான விஷயம் தான்.
தமிழகத்தில் முதல் ஆளாக கைதானவர் :  லஞ்சத்தை ஒழிக்க வேண்டி பணியாற்ற வேண்டியவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது கொஞ்சம் நெருடலான ஹைலைட். மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டராக இருப்பவர் பெருமாள்பாண்டி. இவர் ஒரு டாக்டரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளார். இதனை கேள்விப்பட்ட லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் பெருமாள்பாண்டியை எலிக்கு மருந்து வைத்தாற்போல கச்சிதமாக பிடித்தனர். இப்போது பெருமாள் பாண்டி போலீஸ் ஜீப்பில் குற்றவாளியாக அமர்த்தப்பட்டார். போலீசார் தமிழகத்தில் கைது செய்யப்பட்டது உண்டு ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் முதன்முறை.காலை 11 மணி அளவில் நிருபர்களிடம் போலீசார் முழு விவரங்கள் தெரிவித்தனர்.

நடந்தது என்ன ? : மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உதவி டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் அசோகக்குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மூலம் நல்ல வருமானம் கிடைத்தது. இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக சொõத்து சேர்த்ததாக புகார் வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டி டாக்டரை மிரட்டியுள்ளார். இவரது உறவினர் நமச்சிவாயம் அரசு ஆஸ்பத்திரியில் தலைமை பார்மசிஸ்டாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மூலம் டாக்டருக்கு லஞ்சம் கேட்டு இன்ஸ்பெக்டர் தூது அனுப்பியுள்ளார்.

ரூ. 5 லட்சம் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு முதல் தவணையாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்க டாக்டர் ஒத்துக்கொண்டார். அண்ணாநகரில் உள்ள கிளினிக்கிற்கு நமச்சிவாயம் வரவழைக்கப்பட்டார். இவரிடம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும் போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார் நமச்சிவாயத்தை கைது செய்தனர். தொடர்ந்து தகவல் உறுதி செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டி கைது செய்யப்பட்டார்.ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது., தொடர்ந்து சி.ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை வரும் 12 ம் தேதி வரை சிறைகாவலில் வைக்க நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

லஞ்ச ஒழிப்பில் பணியாற்ற தகுதிகள் :  லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரிவில் அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் போஸ்டிங் கிடைக்காது. யார் விருப்பப்படுகிறார்கள் ? உண்மையில் விருப்பம் உள்ளவர்தானா, நேர்மையானர்தானா, நேர்மையாக இருந்தாலும் பார்சியாலிட்டி பார்க்காதவரா என ஒரு பிரிவிவினர் விருப்பம் தெரிவித்த போலீசாரை மறைமுகமாக கண்காணிப்பர் . பின்னர்தான் அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுவார். அப்படி இருந்தும் இந்த பெருமாள்பாண்டி எப்படி பசும்தோல் போர்த்திய புலியாக இருந்தார் என்பது தான் தற்போதைய கேள்வி. 
Mano - சவுதிஅரேபியா,இந்தியா
2010-09-28 14:00:54 IST
முதலில் அரசு பணிக்காக லஞ்சம் வாங்கும் அமைச்சர்களின் பி ஏ க்களை அரெஸ்ட் பண்ணட்டும். அப்புறம் பாக்கலாம் இந்த போலீஸ் திறமையை . எப்போ இவர்களை பிடிக்கிறார்களோ அப்போதுதான் லஞ்சத்தை ஒழிக்கமுடியும்...
சுவாமி - சென்னை,இந்தியா
2010-09-28 13:58:16 IST
doctor செய்தது கரெக்டா ? டாக்டர் செய்த குற்றததுக்கு தண்டனை உண்டா ? இல்லையா ?...
Manoharan - சவுதிArabia,இந்தியா
2010-09-28 13:52:13 IST
This kind of shameful act of this policemen is not new our country especially in Taimlnadu . First arrest and eliminate our politician who is getting bribe for employment in Govt job. Is Vigilance anticurruption wing can arrest the such kind of Ruling politician !!. The day , the Vigilence Anticurruption arresting ruling pollitical party for bribe is the True Independenceday. Can police will you do this !!!!....
அரவிந்தன் - ஒட்டன்சத்திரம்,இந்தியா
2010-09-28 13:48:17 IST
அட போங்கப்பா ...உங்களுக்கு இதே வெளையாட்ட போயிடுச்சு ....இது வரைக்கும் எத்தனை பேரை கைது பண்ணி தண்டனை வாங்கி கொடுத்திருபீங்க ....ஏன் பூச்சாண்டி காட்டுறீங்க ....அப்படி தப்பு பன்னுரவுங்களை கைது பண்ணுனவுடனே பணி நீக்கம் செய்ய வேண்டியது தானே ...அத விட்டிட்டு கைது பண்ணுனாங்கலாம், ஜீபுல எதுனாங்கலாமாம், கோர்ட்ல கொண்டு பொய் நிருத்துனான்கலாம் ..நம்ம கோர்ட் நிலைமைதான் நமக்கு நல்ல தெரியுமே , சமீபத்துல கூட , மகளை கற்பழிச்சு கொன்னவனை ஜாமீன்ல விட்டிருங்க ....வேனும்ன பாருங்க அடுத்தவாரம் அவரு பனியில சேந்து தன்னோட கடைமைய (?) செய்ய போவாரு...போங்கையா பொய் புள்ள குட்டிய படிக்க வெய்யுங்க .....அத விட்டுட்டு சும்மா கமெண்ட் எழுதிகிட்டு ........
காயீதே மில்லத் - Chennai,இந்தியா
2010-09-28 13:44:33 IST
தஞ்சை மாவட்டம் பாபநாசம் காவல் நிலையத்தின் மீது லஞ்ச ஒழிப்பு துறையை கொஞ்சம் கண் வைக்க சொல்லுங்கள்.. மிக பெரிய முதலைகள் காவலர்களாக பணியில் உள்ளனர்.....
பொன்.ஐயம்பிள்ளை - சேலம்,இந்தியா
2010-09-28 13:34:52 IST
இவன புடிகிறதுக்கு ரியல் எஸ்டேட் டாக்டர் எவளோ லஞ்சம் கொடுத்தாரோ! இத போய் யாரு விசாரிப்பா? எல்லா கூத்தையும் பாக்கலாம்....
மணிகண்டன் - madurai,இந்தியா
2010-09-28 13:24:27 IST
இந்தமாதிரி ஆட்களை ஏன் முகத்தை மூடுவதற்கு அனுமதி அளிக்கிறீர்கள்.மக்கள் பார்க்கும்படி (சட்டம் கொண்டு )செய்யுங்கள்.பிறகு பாருங்கள் எப்படி சும்மா அதிருதுன்னு....
V.Manivannan - Calabar,நைஜீரியா
2010-09-28 13:22:04 IST
He should be displayed in public for two days and then stoned to death it will be a lesson for all...
Alagirisamy - coimbatore,இந்தியா
2010-09-28 13:18:55 IST
இந்தியன் என்பதில் பெருமை படுகிறேன்.ஆனால் கடந்த சில நாட்களாக நான் கேள்விப்படும் விஷயங்கள் செய்திதாள்களில் படிக்கும் விஷயங்கள் இந்தியர்களை தலைகுனிய வைக்கிறது.காமன் வெல்த் லஞ்சம்.இங்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரி லஞ்சம்.தயவுசெய்து யாரும் இந்திய தேசம் பெருமை பாடவேண்டாம்.அந்நிய தேசம் நமை பார்த்து சிரிக்கும். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பல துறைகளில் பலர் பெருமை தேடி தந்தாலும் சிலரால் நமக்கு கிடைக்கும் பரிசு அசிங்கமும் அவமானமும் மட்டுமே.லஞ்சம் வாங்குபவன் அதை நிறுத்தும் வரை அது தொடரும்.நம் மண்ணில் இருக்கும் வரை புண்ணியத்தை தேடி செல்வோம் பாவங்களை சேர்த்துவைக்க வேண்டாம்...
வெங்கடேஷ் - பெங்களூர்,இந்தியா
2010-09-28 13:14:23 IST
தமிழ்நாட்டு போலீசுக்கே அவமானம் மற்றும் மக்களுக்கும் அவமானம்...
charles - tampines,சிங்கப்பூர்
2010-09-28 13:12:11 IST
அரசு ஊழியர்களுக்கு கலைஞர் ஆட்சியில் எராளமான சலுகைகள் இருந்தும் இப்படி இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ......
nallavan - singapore,சியர்ரா லியோன்
2010-09-28 13:08:53 IST
அனைத்து காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், M L A , M P , மந்திரி வீடுகள்,அலுவலகங்கள் CCTV கேமராவை பொருத்த வேண்டும். அதை மாவட்ட கலைக்டர் மூலம் கண்காணிக்க வேண்டும்....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-09-28 13:04:03 IST
தலைவன் எவ் வழியோ, தொண்டனும் அவ் வழி ! சட்டம் ஒழுங்கு அமைச்சர் (அதான் சுய புராண "தன்"மான "மஞ்சள்" மாணிக்கம்!) தன் குடும்பத்துடன் எப்படி "மக்கள் பணி" ஆற்றுகிறாரோ, அதே வழியில் தானே அந்த துறை அதிகாரிகளும் "குடும்ப முன்னேற்றத்துக்கு மக்கள் பணி" ஆற்றுவார்கள் ! இதுல நம்ம மாநிலம் அமைதி பூங்கா ன்னு சொல்லி ஊழல் புகலிடமா ஆகிட்டாரு அந்த "பெருசு" !...
marakayar - riyadh,சவுதி அரேபியா
2010-09-28 13:04:02 IST
இந்தியாவின் சட்டத்தை மாற்ற வேண்டும். இந்த லஞ்ச பேய்களுக்கு suspent மட்டும் போதாது. நெற்றியில் பச்சை குத்தினால் மக்கள் இனம் கண்டு கொள்வார்கள். அதோடு ஒரு திருவோடும் கொடுத்தால் நல்லது. இது போன்று ராமநாதபுரம் மாவட்டதில் லஞ்சம் ஏராளம். பாவபட்ட மக்கள் தாராளம். கிழ்மட்டதில் இருந்து மேல்மட்டம் வரை ,மேலும் ராமேஸ்வரம் ஏரியாக்களை லஞ்ச ஒழிப்பு போலீசார்கள் கண்காணிக்க வேண்டும்...
c murugan - kolkatta,இந்தியா
2010-09-28 12:58:10 IST
very good work done by Mr. Ambigapathi, he is doing the commendable job for some time in vigilence and anti corruption wing, there is a person posted as inspector in irukkangudi police station in virudhunagar district, his name is manoharan, he is doing kattapanchayath and collecting hefty amount from the complainant as well as the opposite party by asking him to file a counter complaint, local people have submitted several complaints to DSP, Sattur and SP, Virudhunagar but no action, now it is up to AMBIKABATHI TO TAKE ACTION...
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-28 12:57:06 IST
நாசமா போக. இந்த லஞ்சம் எப்பதான் ஒழியும்?...
குஞ்சுமணி - சென்னை,இந்தியா
2010-09-28 12:54:37 IST
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் ஒரு தமிழர். இவருக்காக வைகோ சீமான் போன்றவர்கள் போராடுவார்களா ?...
ச ayyappan - chennai,இந்தியா
2010-09-28 12:40:16 IST
Find out his properties and recover them let our government use in good ways. But let us not come to conclusion all officials are bad. We get rains due to some good people. The punishment should be severe in order to safeguard the properties of poor people. This is wrong but from a doctor....
marimuthu - pattukkottai,இந்தியா
2010-09-28 12:39:55 IST
மாட்டும் வரை எல்லாம் ராமன் தான். தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு D.S.P. தகவல் தர சொல்கிறார் அவர் அலுவலகத்திற்கு போன் செய்த மறு நிமிடம் சம்பந்தப்பட்ட நபருக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர். போலீஸ் ல யாரும் நல்லவன் இல்லை. நல்லவன் இப்ப எவனும் அந்த வேலைக்கு போக மாட்டன். திருடன்கள் கைல அதிகாரமும் ஆட்சியும் கொடுத்துள்ளோம். என்ன செய்ய?...
Nallavan - Chennai,இந்தியா
2010-09-28 12:28:08 IST
மக்கள் தன்னை தானே ஏமாற்றிக்கொள்ளும் "கொள்ளும்" காலம் இது.........
டெலெக்ஸ் பாண்டியன் - மதுரை,இந்தியா
2010-09-28 12:22:37 IST
ஆஹா..என்ன ஒரு சிறப்பான பணி செஞ்சிருக்காரு இந்த போலீசு..இதை இப்பிடியே மெய்ண்டைன் பண்ணுங்க..நாடு வெளங்கிரும்..பிச்சைக்காரன் கிட்ட பிச்சை எடுக்கிற இந்த நாயை எல்லாம் கட்டி வச்சு வாயிலேயே மிதிக்கணும்.....
Asir - Bangalore,இந்தியா
2010-09-28 12:18:44 IST
இதில் என்ன ஆச்சரியம், லஞ்சமும் போலிசும் ஒன்றாய் வாழ்கிறவர்கள். லஞ்சம் வாங்கினால்தான் அவர் தன் கடமையை சரியாய் செய்கிறார். லஞ்சம் வாங்கா விட்டால் அவர் போலிஸ் வேலைக்கு தகுதியில்லை. இவர் தன் கடமையையை தான் செய்திருக்கிறார். இதில் தவறு ஒன்றும் இல்லையே! இதை கண்டுபிடித்த போலீசாரை தண்டிக்க வேண்டும். கழக ஆட்சியில் இதல்லாம் சகஜமப்பா....
naseer tenkasi - dammam,இந்தியா
2010-09-28 12:14:06 IST
இந்தியா நாட்டு பேர்ல ஒரு கர்வம் இருக்கு. இந்தியா நம்ம நாடு. ஆனா இந்த மாதிரி திருட்டு நாய்கள் இருக்கும் போது வெக்கமா இருக்கு. இத நா ஏன் சொல்றேன் என்றால் நா ஒரு குடிமகனா என் நாட்டுக்கு நா உண்மையா இருக்கிறேன்....
காவல்துறை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம். இவர்(ன்) போன்ற கருப்பு ஆடுகளுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே லஞ்சம் குறைய வாய்ப்பு உண்டு. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்....!...
M . Ali - DohaQatar,இந்தியா
2010-09-28 11:50:10 IST
Dear Police officers, please read carefully the public comments, then you know how they are having opinion about you all. Please try to erase the bad comments in near future....
மக்கள் நண்பன் - கத்தார்,இந்தியா
2010-09-28 11:37:08 IST
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞர் எழுதியது நினைவுக்கு வருகிறது. இப்படிப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், அப்படி தண்டித்தால் தான் அடுத்து தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பயம் இருக்கும். இதே போல் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி காவல் நிலையத்திலும் ஒருவர் இருக்கிறார், அவரை யாரும் கண்டு கொள்வதே இல்லை.......
sankar - pune,இந்தியா
2010-09-28 11:36:53 IST
Hang this dog, these stupids will not satisfied with the money they are getting as salary....how can you use this money and give food to your wife & children. Think then your wife not only for you, also for the people whoever giving money to you....
சேகர் - சேலம்,இந்தியா
2010-09-28 11:26:35 IST
பெருமாள்பாண்டி ஒட்டுமொத லஞ்ச ஒழிப்பு துறையையே கேவலப்படுத்தி விட்டாயே.. நீ உன் குடும்பத்தோடு உருப்படியில்லாமல் போவாய்! இதுக்கு பதிலாக நீ உன்.........
ஜெயக்குமார் - மதுரை,இந்தியா
2010-09-28 11:09:28 IST
மதுரையில் திருட்டு vcd தடுக்க வேண்டிய cbcid போலீசாரே அவர்களை வளரவிட்டு லஞ்சம் வாங்குகின்றனர். இங்கு மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைமைதான். திருட்டு vcd யை ஒழிக்க முடியாது என் அனைவருக்கும் தெரியும். அந்த அளவு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசே லஞ்சம் வாங்குவது என்பது ஜீரணிக்க முடியாத விசயமாக உள்ளது,...
சூனா பானா - மடிப்பாக்கம்chennai,இந்தியா
2010-09-28 11:09:25 IST
இது தாண்டா போலீஸ். கழக ஆட்சியில் இதுவும் நடக்கும் இதுக்கு மேலேயும் நடக்கும். எவனாலேயும் கேள்வி கேட்க முடியாது.... கேட்டா அவனையும் புடிச்சு பொய் கேசு போட்டு உள்ள தள்ளிருவோமில்ல..........
பாலா.சோ தனியாமங்கலம் - மேலூர்மதுரை,இந்தியா
2010-09-28 11:04:53 IST
என்ன கொடும சார் இது? வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்வது? அந்நியன் தோன்றி கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரி ஆட்களை திருத்த முடியும்....
சம்பத் குமார் - Kazakhstan,கஜகஸ்தான்
2010-09-28 11:03:46 IST
welldone dinamalar. very good news . corruption is everywhere . it must be stopped . hence arrest this police inspector is must and good . salute kavalldurai ....
குடிமகன் - Chennai,இந்தியா
2010-09-28 11:01:15 IST
ஒரு தந்தை தன் மகளையே புணர்வதை விட கேவலமான செயல்....
துபாய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-28 10:55:50 IST
இந்த வேலையும் லஞ்சம் கொடுத்து வங்கியிருப்பான். அதான் கொடுத்தத திரும்பி வாங்குறான்....
பால்துரை - portsaid,எகிப்து
2010-09-28 10:55:38 IST
இதில் என்ன ஆச்சரியம். என்னதான் இருந்தாலும் அவனும் ஒரு போலீஸ்தானே..................

கருத்துகள் இல்லை: