சனி, 2 அக்டோபர், 2010

போராட்டம் பிழையான கரங்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டபோது,ஆரம்பித்தது

யாருக்காக அழுதான் ? சபேசன்- கனடா
நகைச்சுவை நடிகன் நாகேசு குணச்சித்திர பாத்திரத்தில் நடித்த ஒரு நல்ல திரைப்படம் என்று நினைக்கின்றேன். இந்தத் திரைப்படத்தின்  தலைப்பு இப்போது தமிழ் முற்போக்கு வாதிகளாக கருதப்பட்டவர்கள் பலருக்கும் பொருத்தமாக இருக்கிறது.
அப்பாவித் தனமாக தேசியவிடுதலையின் பிரதிநிதியாக பிரபாகரனை வரித்துக்கொண்ட பெரும்பாலானவர்கள் பிரபாகரனின் அழிவின்போது கண்ணீர் விட்டு அழுதார்கள். அதனை இவர்களது அரசியல் ஆழமின்மைக்காக மன்னித்து விடலாம். ஆனால் அதிசயம் என்னவென்றால் அராஜகத்தை எதிர்த்தவர்கள், பாசிசத்தை நிராகரித்தவர்கள், மாற்றுக்கருத்தாளர்கள் என்று மார்தட்டியவர்கள் பலர் பிரபாகரனுக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலர் தனது தலையும் சிறிது சிரம் தாழ்த்தியது என்று நாகரீகமாக முறையிட்டனர்.
பிரபாகரன் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டபோது கவலைப்பட்டவர்களின் நானும் ஒருவன்.  இலங்கையின் சிறுபான்மை மக்களினால் அதிலும் பொதுமக்களினால் தெருவில் விட்டு மக்களால் தண்டிக்கப்பட வேண்டியவன் பெருமபான்மை சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டானே என்று!  கவலைப்பட்டேன்.
கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் பிழையான கரங்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டபோது,ஆரம்பித்தது எம்போன்றவர்களின் அழுகை.  ஒவ்வொரு நாளும் அழுதோம்;. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பெண்கள் முதியோர் குழந்தைகள் போராளிகள்  எல்லோரும் முள்ளிவாய்க்காலில்; அழிந்தபோதும் அதற்கு முன்னர் 30 வருடங்களாக அழிந்த போதும்   மாற்றுகருத்தியலாளர்கள் பத்திரிகையாளர்கள் மனிதாபிமானிகள் மற்றைய இயக்க தலைவர்கள் அதற்கும் அப்பால் தமிழ் தேசிய விடுதலை தலைவர்களான அதாவது சிறிசபாரத்தினம் பத்மநாபா உமாமகேசுவரன் என்று எல்லோரும் கொலலப்பட்டபோது நாங்கள் இதற்காக அழுதோம் என்று எமது உணர்வை கூற முடியாதவர்கள்.  பிரபாகரன் அவலச்சாவிற்கு அழுதிருக்கிறார்கள்.
இங்கே தனி நபர்களின் பலவீனங்களை கூறுவதும் விவாதிப்பதும் அல்ல முக்கியமான விடயம்.  இந்த ஆழ்மனங்கள் அல்லது இவர்களின் நாடியோட்டத்தில் அடிப்படையில் ஊறியிருக்க்கும் யாழ்ப்பாண மேல்சாதி “வெள்ளாள மாக்சிசம்”; கதைக்கும் தன்மையை இவர்கள் அறிய வேண்டிய காலம் இதுதான்;. தமிழ் நாட்டு சினிமாக்கலாச்சாரத்தின் ஒரு வகையான “கதாநாயகர்கள் விடுதலையை பெற்றுத்தருவார்கள்” என்கின்ற மனோவியல் பாதிப்புதான் இந்த அழுகையோ . . ?
இப்படி அழுதவர்களின் மனவியலின் ஆழத்தினை ஆராயாமல் எள்ளி நகையாடுது என்பது ஒட்டுமொத்த தமிழ், சிறுபான்மை மக்களின் பலவீனமான அரசியலற்ற பக்கத்தினை கிளறி வேதனைப்படுத்துவதற்கு ஒப்பானதாகும்
யுhழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம் எப்பொழும் தமக்கான மீட்பர்ளை காலத்துக்குக்காலம் வரித்துக்கொள்ளும். தமிழரசுக் கட்சியின் கடைசி பரம்பரையின் கடைசிப்பிள்ளையான புலியும் இதன் பிள்ளையான குறைப்பிரசவத்தால் புத்திசுவாதீனமாக பிறந்த நாடுகடந்த, வட்டுகோட்டை போன்றவர்களும் இந்த சிந்தனைப்போக்கிலிருந்து மாறவேயில்லை. இவர்கள் மாறப் போவதும் இல்லை. காரணம் இவர்களது வர்க்க சுபாவம்தான் காரணம்
யுhழ்ப்பாணத்தை மையமாக வைத்தே பிரதான ஜந்து இயக்கம்களும் தோன்றின என்பதே உண்மை.  யுhழ்ப்பாணத்தின் வர்க்க வேறுபாடுகளை மேலிருந்து கீழாக வேறுபட்ட தளங்களாக வித்தியாசப்படுத்துவதால் இதனை அறியமுடியும். ஓவ்வொரு தளங்களையும் இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.
புலிகள் -
-மேல்சாதிய மனோபாவம்,
-மற்றைய சாதிகளை “பாவித்து” போராட வைப்பது,
ஆண்டபரம்பரை கனவு,
-ஆமெரிக்காவிலிருந்து ஜயனார் கோவிலடி வரைக்கும் “கயிறு” விடுவோம் என்ற மனோபாவம்
- இந்தியாவில் பிராமணியத்திற்கு ஒப்பான சுயநலமான மனோ இயல்
ஈ பி ஆர் எல் எவ்-
-யாழ்ப்பாணத்து மேல் தட்டுக்கே ஒவ்வாத இயக்கம்
-;இதன் ஆரம்பகர்த்தாக்களில் பலருக்கு மாக்சிய இடதுசாரிய கருத்துக்களின் ஈடுபாடு
-;ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள், பெண்கள், சாதியம் போண்றவற்றினை உள்வாங்கியவர்கள்
-&;யாழ் மனோபாவமான கட்டுப்பாடு ஒழுக்கம் போன்றவற்றை முன்நிறுத்தாததால் அதன் விளைவுகளை அனுபவித்தவர்கள்.
-
புளெட் -
-;மேல் குறிப்பிட்ட இரண்டு அமைப்புகளின் மிக மிக சிக்கலான கலவை.
ரெலோ
- இவர்கள் புலிகளினதும் புளட்டினதும் சிக்கலான கவை
ஈரோஸ்
- இந்த எல்லா அமைபுகளின் ஒன்றான கலவை அதனால் எல்லா கையான வர்க்கம், அரசியல், தத்துவம் எல்லாவற்றையும் புரிந்தவர்கள் என்ற மனோபாவம் . . . இந்த மனோபாவம்தான் இவர்களிற்கு எதிராக அமைந்தது
இந்த இயக்கங்களின் வர்க்ககுணாம்சங்களும் இவற்றோhடு ஒப்பிடக்கூடிய யாழ் மக்கள் குழுக்களிடம் அமைந்திருக்கும் வர்க்கக் அமைவுகளும் அதைவிட முக்கியமாக வர்க்ககுணாம்சங்களின் கலவையும்தான் இப்படி “அழுதவர்களின்” சோகத்திற்குக் காரணம். அதாவது தீர்மானகரமாக. தான் எந்த அரசியல் நிலைப்பாட்டில நிற்கவேண்டும் என்ற முடிவை எடுக்கமுடியாதவர்களின் பரிதாப நிலை. இதற்காக ஆத்திரப்படுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. . இது எம்மவர்களின் பரிதாப நிலையாகும்.
இதற்கு மற்றைய பக்கத்தில் . . கடந்த பெரும் அழிவுகளுக்கு அப்பால் ஆயுதப்போராட்டம் பிழையான கரங்களில் போனதால் ஏற்பட்ட விளைவுதான் என்பதை புரியமுடியாமல் ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கை வைக்க வேண்டாம் என்பதால் அஜிம்சை போராட்டத்தில் ஏற்பட்ட நம்பிக்கை . . . இதற்கு மகாத்மா காந்தி என்ற ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதியின் உதாரணங்கள் வேறு. . இது இன்னொரு வகை பரிதாபம்.
இது ஒரு எதிர்மறையின் “பக்கவிளைவு”  அவ்வளவுதான்.
இன்று எம்முன்னால் உள்ள பெரும் கடமை என்னவென்றால் கடந்த போராட்டம், பேரழிவுகள் தோல்விகள் என்பதை; கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் மேற்படி “அழுதவர்கள்” போன்றவர்களின் மனவியல் அடிப்படை, வர்க்கசுபாவம், அபிலாசை போன்றவற்றை ஆய்வு செய்வதுகூட ஆரோக்கியமாக ஆமையும்.
நாம் எமக்குள் எப்பொழுது எமக்குள்ளேயே விவாதத்தை ஏற்க மறுக்கின்றோமோ அந்தப் புள்ளியிலேயே அராஜகம் ஆரம்பிக்கின்றது. அதற்கும் அப்பால் ஆயுதப் போராட்டத்தில் வன்முறைகளோ கொலைகளோ ஒரு வீதம் தன்னும் இருக்கக்கூடாது என்று நினைத்தால் அது நடைமுறை சாத்தியம் இல்லாதது.
உலகத்திற்கு வன்முறை பிழை என்று போதிக்கும் வல்லரசுகளும் அதிகாரத்துவ சக்திகளும் அரசாங்கம்களும் ஏன் ஆயுதத்தால் ராணுவத்தால் தம்மை நிலைநித்த வேண்டும்.
கிட்லர் போன்றவர்கள் கொல்லப்பட வேண்டுமா? .இல்லையா? ஏன்ற பட்டிமன்றத்தின் முடிவில்தான் இதற்கான முழுமையான விடை கிடைக்கும்.
ஒட்டு மொத்தமாக பிரபாகரனை இழந்ததற்காக அழுதவர்கள் யாரென்று பார்ப்போமாகில் இவர்கள் முற்போக்குவாதிகள். புpற்போக்குவாதிகள். நற்போக்குவாதிகள் யாராக இருந்தாலும் “கதாநாயகனான பிரபா தம்மை மீட்பான்” என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் அல்லது அந்த நம்பிக்கைக்கு மாறியவர்கள்.
இந்த மனோபாவம் இலங்கை தமிழர்களுக்கே உரியது என்பது அர்த்தமற்ற கூற்று.  இது ஒட்டுமொத்த உலகத்திற்கே பொருந்தும்.  கடந்தகால வரலாறுகளை பார்த்தால் பல உதாரணங்களை பல போராட்ட வரலாகளிலிருந்ந்து கற்றுக்கொள்ளலாம்.
முள்ளிவாய்காலின் ஆரம்பம் 2009 இல் தொடங்கவில்லை என்று முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தார்களோ, என்று சிறி சபாரட்ணத்தை கொன்றார்களோ என்று இராணுவ கட்டுப்பாடான போராட்டம் மட்டுமே வெற்றியடையும் என்பதை நம்பினார்களோ (பிரபாகரனுடன் இருந்த ஜயரின் பதிவுகளில் இருந்து) அன்றே ஆரம்பமாகிவிட்டது.
புpரபாகரன் என்ற தனிமனிதனை அவனது ஆழ்மனவியலை அவனது போராட்ட வரலாற்று பாரம்பரியங்களுடன் பார்ப்போமாகில்
எந்த நல்ல பண்புகள் இவனிடம் இருந்தன?  அடிப்படையாக ஆயுதப்போராட்டம் என்பதே அரசியல் போராட்டத்திற்கான ஒரு முன்நிறுத்தி என்பதை மறுத்து ஆயுதப்போராட்டத்தினூடாக எதையும் அடையலாம் என்பதே அறியாமையின் ஆரம்பம். ஆரம்ப இயக்க வரலாறுகளில் (ஜயரின்) இருந்து இதை அறியலாம்.
ஆரசியல், இலக்கியம், அழகியல், வாசிப்பு, விமர்சனம், உலக அரசியல், அதை விட நாபா போன்றவர்களிம் இருந்த தன்னலமற்ற சமூகப் பார்வை எதுவுமே அற்றவன் எப்படி தான் சார்ந்த சமூகத்தை நேசித்திருப்பான். . ?
முள்ளிவாய்க்காலில் தமிழர்களினது போராட்டம் பிழைத்தது என்பது யாழ்ப்பாணிகளுக்கு மட்டும் பாடமல்ல ஒடுக்கப்படுகின்ற இலங்கை சிறுபான்மை இனங்களிற்கும் சிங்கள பெரும்பான்மைக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் ஏன் ஆசிய கண்டத்திற்கும் அதற்கும் அப்பால் உலகம் பரந்த ஒடுக்கபட்ட மக்களிற்கான ஒரு பாடம்.
http://www.matrathu.com

கருத்துகள் இல்லை: