ஞாயிறு, 4 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் குடியேற வேண்டுமாயின இடம்பெயர்ந்துள்ள 36963 முஸ்லிம் குடும்பங்கள்

யாழ்ப்பாணத்தில் குடியேற வேண்டுமாயின் புத்தளத்தை கைவிட வேண்டுமென முஸ்லிம்களுக்கு மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசித்து வரும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீடுகளிலிருந்து வெளியேற வேண்டுமேன இடம்பெயர் முஸ்லிம்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து வந்த அநேகமான முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் நிரந்தர வீடுகளை அமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் நிரந்தரமாக குடியேற விருப்பமென்றால் புத்தளத்திலிருந்து நிரந்தரமாக இடம்பெயர வேண்டுமென முஸ்லிம்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த போர் காலத்தில் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து 36963 முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இதில் 16196 குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: