தினமணி : செவிலியர்கள் போராட்டம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எஸ்.ஐ.ஆர். பணி தொடங்கப்பட்டதற்கு முன்பே இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது. நாங்களும் நீதிமன்றத்தை நாடினோம். குறுகிய கால இடைவெளியில் இது நடைபெற்றுள்ளது.
சனி, 20 டிசம்பர், 2025
செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்தியாவிலேயே அதிக வாக்காளர்கள் தமிழகத்தில் நீக்கம்.. மே.வங்கம் நம்பர் 2.. முழு பட்டியல்
tamil.oneindia.com -Nantha Kumar R : சென்னை: இந்தியாவிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக தமிழகத்தில் தான் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை விட தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான முழு டேட்டா பின்வருமாறு:
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.
அமெரிக்காவை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் தொடர்புள்ள 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு
bbc.com - டாம் ஜியோகேகன் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட் : மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புடைய 68 புகைப்படங்களின் புதிய தொகுப்பு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புகைப்படங்களில் இடம்பெறுவதால் மட்டுமே, அவர்கள் ஏதேனும் தவறு இழைத்திருப்பார்கள் என எந்த உத்தரவாதமும் இல்லை, மேலும் அதில் இடம்பெற்றுள்ளவர்களில் பலர் எப்ஸ்டீன் தொடர்பாக எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர்.
எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein files) என்றால் என்ன?
2008-ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டீன் தனது பாம் பீச் (Palm Beach) இல்லத்தில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். ஆனால் எப்ஸ்டீன், அரசு வழக்கறிஞர்களுடன் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை (plea deal) மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் – வரைவு வாக்காளர் பட்டியல் முழு விவரம்
தினமணி : தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(டிசம்பர் 19) வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின்போது (எஸ்.ஐ.ஆர்) கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிச் சமர்ப்பித்தவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு பெயர்கள் தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், மாவட்ட அளவிலான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.
வியாழன், 18 டிசம்பர், 2025
கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா
விஜய்க்கு ஓட்டு போடல.. வீட்டுல 9 பேருக்கும் சோத்துல விஷம் வைத்து விடுவேன்!
minnambalam.com - Pandeeswari Gurusamy : நடிகர் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் இருக்கும் 9 பேருக்கும் சோத்துல விஷம் தான் என இளம் பெண் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் பெருந்துயரம் நடந்து 80 நாட்கள் கடந்த நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார். விஜய்யின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் விஜயின் கூட்டத்திற்கு வந்திருந்த பெண் ஒருவரிடம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்த போது, விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் வீட்டில் இருக்கும் 9 பேருக்கும் சாப்பாட்டுல விஷம் வைத்து விடுவேன் என்று தெரிவித்தது பெரும் அதிர்ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகி வீட்டுச்சிறையில் மரணம்?
கிம் அரிஸ், 2021 இராணுவப் புரட்சிக்குப் பிறகு பல ஆண்டுகளாக தனது தாயுடன் பேசவில்லை என்றும், அவரது இதயம், எலும்பு மற்றும் ஈறு பிரச்சனைகள் குறித்து சில நேரங்களில் மறைமுகத் தகவல்கள் மட்டுமே கிடைப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
delh நாளை முதல் பிஎஸ் 4 வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை - அதிரடி அறிவிப்பு!
புதன், 17 டிசம்பர், 2025
அவுஸ்திரேலியாவில் தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்
இதுகுறித்து தகலவறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகையில்,
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியதில் சாஜித் அக்ரம் என்பவர் ஹைதராபாத்தின் டோலிசவ்கி நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதிரடி! அமலாக்கத்துறைக்கு செம்ம அடி!
நேஷனல் ஹெரால்டு வழக்கின் பின்னணி என்ன?
- ராகுல் காந்தியின் தாத்தா ஜவஹர்லால் நேருவால் 1937-ல் தொடங்கப்பட்ட நிறுவனத்தின் பெயர் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட். இந்நிறுவனத்தில் 5000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.
- இந்நிறுவனத்தின் சார்பாக 1938-ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் பத்திரிகை வெளியிடப்பட்டது
செவ்வாய், 16 டிசம்பர், 2025
எமில் சவுந்தரநாயகமும் யாழ்ப்பாண அமெரிக்க விமான தளமும்
![]() |
ராதா மனோகர் : எமில் சவுந்தரநாயகம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தளம் அமைக்க முயற்சித்த வரலாறு!
Emil Savundranayagam அமெரிக்க கொரியா போர் காலத்தில் (Korean War (25 June 1950 – 27 July 1953)
சீனாவுக்கு பெற்ரோலியம் விற்கும் வியாபாரியாக தோன்றினார் .
உண்மையில் இவர் அமெரிக்க ஏஜெண்டாக செயல்பட்டு சீனாவை ஏமாற்றினார்.
சீனாவிற்கு பெற்ரோலியம் கிடைத்து விட கூடாது என்ற நோக்கத்தில் அமேரிக்கா இவரை பயன்படுத்தியது.
இரண்டு தடவைகள் இவர் சீனாவிடம் பணத்தை பெற்று சீனாவை ஏமாற்றினார்
இலங்கை அரகலய போராட்டத்தை 45 நிமிடங்களுக்குள் அடக்கி விட முடியும் என்று இந்திய தூதுவர் .....
![]() |
| Gopal Baglay - Mahinda Yapa Abeywardena |
சபாநாயகர் மகிந்த யாப்பா அபாயவர்தனா அவர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்க ஒப்புக்கொண்டால், 45 நிமிடங்களுக்குள் (அரக்கலய) நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற த உறுதி மொழியை இந்திய தூதுவர் திரு கோபால் பாக்ளே அவர்கள் சபாநாயகருக்கு வழங்கினார்!
இந்த அதிர்ச்சிகரமான தகவலை பேராசிரியர் சுனந்தா மதுமபண்டார அவர்கள் எழுதிய அரக்கலயா பலாய என்ற சிங்கள மொழி நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி மேலதிக விபரங்களை லங்காவேப் என்ற பழம் பெரும் இணையத்தளத்தில் காணலாம்!
.
lankaweb Lastly, the former parliamentarian has revealed that it was then Indian High Commissioner, in Colombo, Gopal Baglay (May 2022 to December 2023) who asked him to accept the presidency immediately. Professor Sunanda Maddumabandara, who served as Senior Advisor (media) to President Ranil Wickremesinghe (July 2022 to September 2024), disclosed Baglay’s direct intervention in his latest work, titled ‘Aragalaye Balaya’ (Power of Aragalaya).
திங்கள், 15 டிசம்பர், 2025
தவெக? திமுக? டெல்லி காங். மீட்டிங்கில் பரபர வியூகம்! - TVK? DMK? Congress
மின்னம்பலம் -Mathi : டெல்லியில இன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட முக்கியமான மீட்டிங் நடந்துச்சு.. கூட்டணி விவகாரங்களுக்கான ஐவர் குழுதான் இந்த மீட்டிங்கை நடத்துச்சு.. கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்தான் அந்த ஐவர் குழு..
ஏற்கனவே சென்னையில சிஎம் ஸ்டாலினை சந்திச்சு பேசி திமுகவுடனான கூட்டணியை உறுதி செஞ்சிருந்தது இந்த ஐவர் குழு.. அதே நேரத்துல காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை சந்திச்சு பேச கூட்டணி பத்தி லேசா குழப்பம் ஏற்பட்டுருச்சு..
இப்படியான நிலையில்தான் ராகுல் காந்தி, கார்கே, ஐவர் குழு எல்லாம் சேர்ந்து தமிழக தலைவர்களுடன் ஆலோசிக்கிறதுன்னு முடிவெடுத்தாங்க..
H-1B விசாவில் மாபெரும் முறைகேடு.. இந்தியாவில் - முன்னாள் அமெரிக்க அதிகாரி பேட்டி பகீர்
tamil.oneindia.com : Vigneshkumar ; வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா என்பது இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்கு அமெரிக்கா பல கடுமையான விதிகளை விதித்து வருகிறது.
சிலர் அதற்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் ஹெச்-1பி விசா குறித்து முன்னாள் விசா அதிகாரி ஒருவர் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவில் டிரம்ப் வந்த பிறகு வெளிநாட்டினருக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். குறிப்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்போருக்குக் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறார்.
ஞாயிறு, 14 டிசம்பர், 2025
ஆர்.எஸ்.பாரதி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்!
மின்னம்பலம் - கவி : தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14) உடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 13) செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், வாக்காளர்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்க திமுகவின் சட்டத்துறையும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றினர். கட்சி சார்பின்றி பணியாற்றினர்.
சனி, 13 டிசம்பர், 2025
கொத்மலை நீர்த்தேக்கம் - மனிதப்பேரழிவு - அதிகாரிகளின் அலட்சியம் இலங்கை அரசின் அனுபவம் இன்மை
கம்பளயான் - Gampalayan : கொத்மலை - மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக ஆபத்தான நீர்த்தேக்கம்!
6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள, கடல் மட்டத்திலிருந்து 640 - 703 மீட்டர் உயரம்.
174 மில்லியன் கன மீட்டர் நீர் கொள்ளளவு.
முழுமையாகக் கறுப்புக் கற்களால் அடுக்கப்பட்டது.
15 மீட்டர் உயரம் மற்றும் 14 மீட்டர் அகலம் கொண்ட மூன்று வான்கதவுகள் மற்றும் ஒரு வான்கதவு கொண்டது.
இவை மூலம் வினாடிக்கு 1850 கன மீட்டர் நீரை வெளியேற்ற முடியும்.
87 மீட்டர் உயரம், 600 மீட்டர் நீளம் மற்றும் உச்சியில் 10 மீட்டர் அகலம் கொண்ட அணையுடன், 544 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது இந்த நீர்த்தேக்கம்.
1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கொத்மலை ஓயா மகாவலி கங்கையில் கலப்பதற்கு 6.6 கிலோமீட்டருக்கு முன்னர்,
பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியது! காங்கிரஸ் கோட்டையை கூட்டிக்கொடுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர்
tamil.oneindia.com - Vignesh Selvaraj : “பாஜகவின் வெற்றி தெளிவான சிக்னல்”- தனது கோட்டையில் பாஜக வென்றதை பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலில் சசி தரூரின் கோட்டையான திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு ஷாக் கொடுத்துள்ள நிலையில் இது மக்களின் தெளிவான ஆணை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது.
Shashi Tharoor Lauds BJP s Historic Thiruvananthapuram Civic Polls Win
மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் விரித்துள்ள உலக வலையமைப்பு! குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!
இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்ட சங்கிகள் குறிவைத்துள்ள மசூதிகள் பட்டியல்!
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 14 மசூதிகள் மீது ஆர் எஸ் எஸ் குறிவைத்துள்ளது
இதற்காக பெருமளவு நிதியை பஹாமாஸ் தீவில் பதுக்கி வைத்துள்ளது.
வழறிஞர் திரு வாஞ்சிநாதன் இது பற்றி மிக தெளிவாக விபரமாக எழுதி உள்ளார்.
அவரின் அந்த கட்டுரை உங்கள் தூக்கத்தை தொலைத்து விடும்
நிலவினியன் மாணிக்கம் : ஆர்எஸ்எஸ்ஸஸின் உண்மை முகம் மதக்கலவரத்தை தூண்டுவதை தோலுரித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
டி.வி. சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை.. என்ன காரணம்?
தினத்தந்தி :சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 39), சீரியல் நடிகை. ‘சிறகடிக்க ஆசை', ‘பனி விழும் மலர் வனம்', ‘பாக்கியலட்சுமி' போன்ற பல பிரபல டி.வி. தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஓரிரு படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார்.
ராஜேஸ்வரிக்கும், அவரது கணவர் சதீசுக்கும் கடந்த சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரி சில நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்தபடியே சீரியல்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு ராஜேஸ்வரி தாய் வீட்டிலேயே மயங்கி விழுந்தார்.
வெள்ளி, 12 டிசம்பர், 2025
நடிகை பாவனா- நடிகர் திலீப் பாலியல் வன்கொடுமை வழக்கு 6 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை நடிகர் திலீப் தப்பி விட்டார்
![]() |
தினமலர் : திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
2017ம் ஆண்டு பிப். 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர், காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை கடத்திய ஒரு கும்பல், பாலியல் வன்கொடுமை, செய்து அதை செல்போனில் படம் பிடித்தது. கேரளாவில் மட்டுமல்ல, அம்மாநில திரையுலகமான மல்லுவுட்டிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பை (வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்) நிரபராதி என்று எர்ணாகுளம் அமர்வு நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
Indigo Airlines ரூ.7,253 கோடி லாபம் ஈட்டிய இண்டிகோ! உறைய வைக்கும் அதிர்ச்சித் தகவல்!
tamil.samayam.com - ஆனந்தன் : இந்தியாவில் விமானப் போக்குவரத்து துறை தற்போது மிகக் கடினமான நிதி சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் மூழ்கியுள்ள நிலையில், பயணிகள் தினமும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக சமீப நாட்களில் இண்டிகோ விமானங்களில் நடந்த சேவை பாதிப்புகள் இந்தப் பிரச்சினையை மேலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
இண்டிகோ சேவை பாதிப்பு
பணியாளர் பற்றாக்குறை, திடீர் அட்டவணை மாற்றங்கள், புதிய பணி நேர விதிமுறைகளால் வந்த குழப்பங்கள் என பல காரணங்களால் இண்டிகோ ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய நேரிட்டது.
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : உச்ச நீதிமன்றம் உத்தரவு
தினமலர் : புதுடில்லி : ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது, சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல், இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த, சாகின் மாலிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு :
ஒருவர் மீது ஆசிட் வீசுவது மற்றும் ஆசிட்டை குடிக்க வைப்பது அவரது உயிருக்கே தீங்கு விளைவிக்கும் செயல். இதனை போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது.
வியாழன், 11 டிசம்பர், 2025
இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம்!
![]() |
இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும் சென்று வரமுடியும்.
நிரந்தரமாக தங்க முடியும் நிரந்தரமாக தொழில் செய்ய முடியும் வியாபாரம் செய்ய முடியும் .கல்வி கற்க முடியும்! சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது! விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.
பாடகி சின்மயி - டாக்டர் பால் அடித்த கூத்து . முழுநேர சங்கிகள் Chinmayi with Dr. Pal
சமூக வலைதளங்களின் கவனஈர்ப்புக்காக எவ்வளவோ போலி அறிவியல் தகவல்கள் வருகிறதல்லவா? அதில் இவரும் ஒருவர் என கடந்து விட்டேன்.
மருத்துவராக இருப்பதனாலேயே போலி தகவல்கள் சொல்ல மாட்டார்கள் என நம்ப முடியாதல்லவா?
ஆனால் சின்மயி அவர்களுடைய நேர்காணல் ஓன்றில் இருவரும் திட்டமிட்டு ஒரு தகவலை எப்படி Misleading செய்கிறார்கள் என பார்த்த போது அதை expose செய்ய வேண்டும் என நினைத்தேன். நேரமின்மையால் அதையும் கடந்து விட்டேன்.



