சனி, 5 நவம்பர், 2022

‘சமணர் கழுவேற்றம்’ - என்று சொல்லப்படுவது பெரும்பாலும் ஆசீவகர் கழுவேற்றமாகவே இருந்துள்ளது

இரா.மன்னர் மன்னன். - ஆவணம் :க.நெடுஞ்செழியன் எனும் தமிழ் ஒளி!.
இந்திய வரலாற்றில் மறைந்து போன மதங்களில் ஒன்று ஆசீவகம். சமணத்தை பவுத்தமும், வைதீக சமயமும் அழித்தது நாம் அறிந்த வரலாறு என்றால், சமணத்தின் ஒரு பிரிவாக ஆசீவகம் பார்க்கப்பட்டதால் சமணமும் சேர்ந்து ஆசீவக வரலாற்றை அழித்தது நாம் அறியாத வரலாறு.
ஆதிநாதர் முதலான 23 தீர்த்தங்கரர்கள் ஜைனர்கள், ஆசீவகர்கள் - ஆகிய இருவருக்கும் பொது. இதனால்தான் இவர்கள் இருவருமே சமணர்கள்.
ஆனால் ஜைனருக்கு மகாவீரர் 24ஆவது தீர்த்தங்கரர், ஆசீவகர்களுக்கோ மர்கலி 24ஆவது தீர்த்தங்கரர். உண்மையில் ஆசீவகம் ஜைனத்தின் போட்டி மதம். ஆனால் பின்னர் நலிவடைந்த ஆசீவகத்தை, ஜைனம் கைப்பற்றி சுவடே தெரியாமல் போகுமாறு செய்தது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் தள்ளிவைப்பு; நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டம்!

tamil.indianexpress.com  : தமிழகம் முழுவதும் 44 இடங்களில் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தள்ளிவைக்கப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததையடுத்து, காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6ஆம் தேதியன்று ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட்டது. மேலும் ஊர்வலத்திற்கான நிபந்தனைகளை விதித்து, அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்க போகும் பாஜக...? களநிலவரம் என்ன?

tamil.oneindia.com  -   Nantha Kumar R  :  சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு வரும் 12ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்பட எம்எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என ஏராளமான பாஜகவினர் மேடைகளில் அழுது புலம்பி வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக ஜெய்ராம் தாகூர் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச சட்டசபையின் காலம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் இமாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் 12ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 8 ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

கோவை சிக்கிய பென் டிரைவ்... 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவு வீடியோக்களை ஆய்வு செய்யும் போலீஸ்

மாலை மலர் :   கோவை:  கடந்த 2019-ம் ஆண்டில் இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுடன் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கோவையில் சிலரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அப்போது விசாரணை மேற்கொண்டனர். அதில் முபினும் ஒருவர். மேலும் 2 பேரை கைதும் செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி விட்டு அவர்களை விட்டுவிட்டனர். இருப்பினும் அவர்களின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை கோட்டைமேட்டில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்ட முபின் திட்டமிட்டு தனது கூட்டாளிகளுடன் இந்த தாக்குதலை நடத்தியதும், அவர் அதில் இறந்து விட்டதும் தெரியவந்தது.

குடியுரிமைச் சட்டம்: “இலங்கை அண்டை நாடு இல்லையா? ஈழ தமிழர்களை பாஜக இந்துவாக நினைக்கவில்லையா?” - முரசொலி!

கலைஞர் செய்திகள்  : நாட்டுக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்காதீர் என முரசொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் குடியுரிமைச் சட்டத்தை மீண்டும் கையில் எடுக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது விபரீத விளைவுகளையே நாட்டுக்கும் ஏற்படுத்தும். இந்தியாவை ஆளும் பா.ஜ.க.வுக்கும் ஏற்படுத்தும். இந்த பின்விளைவுகளைக் கவனத்தில் கொண்டு குடியுரிமைச் சட்டத்தை அப்படியே கிடப்பில் போடுவதே நல்லது.‘‘அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது” என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சொல்லி இருக்கிறது.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல்வேறு கட்சிகள் (தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) சார்பில் உச்சநீதிமன்றத்தில் 232 மனுக்கள் போடப்பட்டுள்ளன.
இம்மனுக்களின் மீது அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்; தமிழக அரசு திட்டவட்டம்

நக்கீரன் : சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் புதிய இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிற நிலையில் பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடர்ந்து பரந்தூர் மக்கள் அண்மையில் சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையமா?'
 என்ற பதாகைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- ஒன்றிய பாஜக மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

நாட்டிற்கு எதிரான கும்பலுடன் ராகுல்காந்தி நடைபயணம்- மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் புகார்


மாலை மலர்  :   அமிர்பூர்:  வரும் 12ந் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையல் அம்மாநிலத்தின் அமிர்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் கூறியுள்ளதாவது:

சாத்தான்குளம்: “தந்தை, மகன் இருவரையும் ரத்தம் வடிய கூட்டிட்டு வந்தாங்க!”- சாட்சியம் சொன்ன ராஜாசிங்

ஜெயராஜ், பென்னிக்ஸ்
ராஜாசிங்
, ராஜாசிங்

விகடன்  :  இந்த வழக்கில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 400 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்தது.
அதில் பல அதிர்ச்சியூட்டும் சாட்சியங்களை இணைத்திருந்தவர்கள், புதிய சாட்சிகளாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வின்னிலா, கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங் என்ற கைதியையும் சேர்த்திருந்தனர்.
ஏற்கெனவே அரசு மருத்துவர் வின்னிலா சாட்சியம் அளித்த நிலையில், ராஜாசிங் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
வெளியில் வந்தவர் செய்தியாளர்களிடம், “நான் கோவில்பட்டி சிறைச்சாலையிலிருந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் நடக்க முடியாத நிலையில் கொண்டு வந்தாங்க.
உடம்பெல்லாம் காயமா இருந்துச்சு. ரத்தம் வடிய வடிய வந்தாங்க. நான் அவங்ககிட்டே விசாரிச்சப்போ, சாத்தான்குளம் போலீஸ் அடிச்சதா சொன்னாங்க.

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: இதுவரை 277 பேர் பலி; 14,000 பேர் கைது.. Protests in Iran gain momentum

Hindu Tamil  :  தெஹ்ரான்: ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. குழுவைச் சேர்ந்த ஜாவத் ரஹ்மான் கூறும்போது, “கடந்த 6 வாரங்களாக ஈரானில் நடக்கும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட மாணவர்கள் என இதுவரை 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 277 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் போராட்டக்காரர்கள் மீது நடத்தும் வன்முறையை கைவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 4 நவம்பர், 2022

தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞசெழியனார் காலமானார் (அகவை 78)

May be an image of 1 person and text that says 'பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (15-6-1944/4-11-2022)'

 கூத்தன் செந்தமிழ் செந்தமிழ்  : இனமானத் தமிழறிஞர் பேராசிரியர் க.நெடுஞசெழியனார் (அகவை 78) தமிழுடன் கலந்தார்
திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் கொள்ளிடக் கரையேராம் அமைந்துள்ள படுகை என்னும் ஊரில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் சூன் மாதம் 15, 1944 இல் பிறந்தார்.
தமிழில் முதுகலைத் தமிழில் பட்டம் பெற்று, அரசுக் கல்லூரி ஆசிரியராக பல ஆண்டுகாலம் பணியாற்றினார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநராவும் செயல்பட்டார். தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தின் பேராசிரியராகவும் செயல்பட்டார்.
அறிவு தளத்தில் தமிழ் மற்றும் திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து 22 நூல்களை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள்;-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
2. இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும் 1989
3. தமிழர் தருக்கவியல்

இம்ரான் துப்பாக்கி சூடு ஒரு நாடகம்? பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் இழந்த செல்வாக்கை மீட்க நடந்த கூத்து?

 Waseem Altaf  ; Imran Khan has NOT been hit by a bullet!
This information is from authentic sources!
Either he himself engineered face-saving, or it was maneuvered by someone else for him!
Thankfully Imran was scratching his ear with his feet  otherwise bullet would have hit his head
வசீம் அல்தாஃப் ; பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி குண்டு பாயவில்லை இம்ரான் கான் தோட்டாவால் தாக்கப்படவில்லை!இம்ரான் கான் ஒரு தோட்டாவால் தாக்கப்படவில்லை!
இந்த தகவல் உண்மையான ஆதாரங்களில் இருந்து!
அவரே தனது அரசியல் வீழ்ச்சியில் இருந்து தன்னை காப்பாற்றுவதற்காக  ஒரு ஏற்பாட்டை  செய்திருக்கவேண்டும்
அல்லது அவருக்காக வேறு யாரோ இந்த வித்தையை செய்திருக்கவேண்டும்!
ஒருவேளை அதிர்ஷ்டவசமாக இம்ரான் தனது கால்களால் காதை சொறிந்து கொண்டிருந்திருக்க வேண்டும்  இல்லையெனில் புல்லட் அவரது தலையில் தாக்கியிருக்கும்

சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்- டெல்லி மகளிர் ஆணையத்தில் .. குஷ்பு பேட்டி

மாலைமலர் : புதுடெல்லி  தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.
அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.
சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.
குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை!

மாலை மலர் அமிரிட்சார் : பஞ்சாப் மாநில சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.
அமிர்ட்ஸார் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோவில் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இது குறித்து அறிந்த சூரி, தமது கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று கோவில் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ஆதரவு பாசிச ஆர் எஸ் எஸ் வரலாறு .. விவேகானந்தர் சூத்திரர்.. அவர் துறவி அல்ல என்று வழக்கு தொடுத்த பார்ப்பனர்

Kalai Selvi   *வாருங்கள் நாம் அனைவரும் இந்த புரோகித துரோகிகள் மற்றும் இந்து மதவெறியர்களின் உருவபொம்மையை எரிப்போம்*
🔸திப்பு கெட்டவன் என்றால், பல தசாப்தங்களாக இருந்ததாகக் கூறப்படும் புரோஹித் திப்புவின் சன்னதியில் திவானகிரி ஏன்?
அதாவது திப்புவை விட திவான் பூர்ணய்யா மோசமாக இருக்க வேண்டும்! வாருங்கள் அந்த பூர்ணய்யாவை இந்து விரோதி என்று அறிவிப்போம்.
🔹சிவாஜி இந்து சக்கரவர்த்தியானால், அப்சலா கானுடன் சேர்ந்து சிவாஜியைக் கொல்ல முயன்ற கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னி இந்து விரோதி இல்லையா?
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆண்டுதோறும் கிருஷ்ணாஜி பாஸ்கர் குல்கர்னியின் இந்த உருவ பொம்மையை எரிப்போம்.
🔸அக்பர் தீயவர் என்றால் பீர்பாலும் தொடரமல்லாவும் ஏன் அவனது அரண்மனையில் வேலை செய்தார்கள்?
இந்த இரு இந்து விரோதிகளின் உருவபொம்மையை ஆண்டுதோறும் எரிப்போம்.
🔹விவேகானந்தர் ஒரு இந்து மதத் துறவி என்றால், அவர் சிகாகோ தர்ம மாநாட்டிற்குச் செல்வதை அர்ச்சகர்கள் ஏன் எதிர்த்தார்கள்?
மதவெறியர்கள் என்று இந்து விரோதிகளின் உருவ பொம்மைகளை எரிப்போம்.

பலதாரமணத்திற்கு ஆதரவான பெண்களே உங்கள் கணவருக்கு நான்கு கல்யாணத்தை .. மேடைக்கு வாருங்கள்.

Sharmila Seyyid  :   பலதாரமணத்திற்கு ஆதரவாக பல பெண் சட்டத்தரணிகள் கொம்பு சீவிக் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
 இஸ்லாமிய சமூகத்தைப் பாலியல் வரட்சியிலிருந்து காப்பாற்றத்தக்க வரப்பிரசாதம் பலதாரமணம் என்பது வரையில் உளறிக் கொட்டுகிறார்கள்.
இவர்கள் ஆண்களின் மூளையில் பேசுகிறார்கள் என்ற என் முன்னைய ஒப்பீடுகள் ஒன்றும் இந்த சாமி மாடுகளுக்குப் பொருந்தாது.
ஆண்களே இவர்களுக்குள் புகுந்து சாமியாடுகிறார்கள்.
 பலதாரமணத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பும் சட்டத்தரணி பெண்களே உங்கள் கணவருக்கு நான்கு கல்யாணத்தை முடித்து வைத்துவிட்டு மேடைக்கு வாருங்கள்.
உங்கள் கணவரின் இரண்டாம், மூன்றாம், நான்காம் திருமணங்களுக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கும் காணொளிகளைப் பதிவேற்றுங்கள்.
நீங்கள் அரபு தேசத்துக் காசுக்குப் பேசவில்லை என்பதையும், நீங்கள் ரியல் அக்டிவிஸ்ட் தான் என்றும் இந்த சமுதாயத்தில் பலதாரமணங்களினால் நெஞ்சுடைந்து குமுறித் திரியும் மாதர்குலம் நம்பட்டும்!

சுப்பிரமணியம் சுவாமி உயிராபத்தில்? மோடி- அமித் ஷா மீது சுவாமி பகீர் புகார் பின்னணி!

minnambalam.com -    Aara  :  “ஹரேன் பாண்டியா மாதிரி என் மீது பிரதமர் மோடியும் அமித் ஷாவும் திட்டமிடவில்லை என்று நம்புகிறேன். இது உண்மையென்றால் என் நண் பர்களை நான் எச்சரிக்கை செய்ய வேண்டியிருக்கும். எனக்கு என்ன செய்கிறீர்களோ அதையே திருப்பிச் செய்வேன் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்த இரட்டையர்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் உயர் நிலையில் இருப்பவர்களையும் அவமானப்படுத்தியுள்ளனர்”
இப்படியாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி பிற்பகல் 12.15 மணிக்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டது பாஜகவின் டாப் வட்டாரங்களிலும், ஆர்.எஸ்.எஸ்.சின் டாப் வட்டாரங்களிலும் அதிர்வை ஏற்படுத்தியது.

    I hope Modi & Shah are not planning a Haren Pandeya on me. If so I may have to alert my friends. Remember I give as good as I get. The duo have even bluffed those in the highest authority in RSS.
    — Subramanian Swamy (@Swamy39) October 31, 2022
இந்த ட்விட்டர் பதிவிட்ட சில நிமிடங்களில் சுதிர்தா மிஸ்ரா என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு மாணவர், “அப்படியென்றால் ஹரேன் பாண்டியா கொலையில் நீங்கள் இரட்டையரை குற்றம் சாட்டுகிறீர்களா?” என்று சுவாமியிடம் கேள்வி கேட்கிறார்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்: கிஷோர் கே. சுவாமி மீது வழக்குப்பதிவு

tamil.indianexpress.com   :   கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே தீபாவளி முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை ஓடும் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஜமேஷா முபின் எனத் தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் சம்பவ இடத்தில் ஆணி, கோலி குண்டு, பால்ரஸ் குண்டு கண்டெடுக்கப்பட்டது.
டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு விசாரணை மேற்கொண்டார். சதிச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பண்டிகை தினம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

சென்னை வெள்ளத்தின் சாதனை மேயர் திருமதி.பிரியாராஜன் M Com

May be an image of 1 person

 Gudiyattam Kumaran Orator : மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மாண்புமிகு சென்னை மேயர் திருமதி.பிரியாராஜன் M Com அவர்கள்!
இவர்கள் தான் யார் தன்னால் என்ன முடியும் என்பதையெல்லாம் நிரூபிக்கும் முன்பே எவ்வளவு ஊடகத்தாக்குதலுக்கு உள்ளானார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்!
திரு.உதயநிதி நேரடி அரசியலில் வந்த பொழுது வாரிசு வாரிசு என்று சொல்லி கூக்குரலிட்டு கும்பல் இன்னும் 30-40 ஆண்டுகள் ஆனாலும் அதையே தான் பாடும் அவர் ஒவ்வொரு நாளும் நிரூபித்திக்கொண்டே இருக்க எழுதப்படாத சட்டம் இயற்றுவார்கள், அதே போல் அன்று வரை யாருக்கும் பெரிதாக அறிமுகம் இல்லாத இன்றைய மாண்புமிகு சென்னை மேயர் அவர்களை தளபதியார் அறிவித்த பொழுது ,அவ்வளவு காலம்-திரு.உதயநிதிக்கு என்ன என்ன அளவு கொள் எல்லாம் வைத்தார்களோ அதையெல்லாம் 100% கொண்ட நமது சென்னை மேயரை வார்த்தை தாக்குதலால் சிறுமை படுத்தி ஒரு ஊடக தாக்குதலே நடத்தினார்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக!

வியாழன், 3 நவம்பர், 2022

தனுஷ் பாட்டை மட்டுமே கேட்கும் நாய் .. எந்த வேலையும் செய்யாமல் ... உரிமையாளரின் வேடிக்கையான வேதனை !

கலைஞர் செய்திகள்  : எந்த வேலையும் செய்யாமல் தனுஷ் பாட்டை மட்டுமே தனது வளர்ப்பு நாய் கேட்பதாக காட்பாடி இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டில் பலரும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிகமாக வீடுகளில் நாய் வளர்க்கப்படுகிறது. இதற்குக் காரணம் நாய் நன்றியுடனும், நல்ல துணையாகவும் இருக்கும்.
வீட்டிற்கு இரவு நேரத்தில் மர்ம நபர்கள் வந்தால் நாய் குறைத்து உரிமையாளருக்குக் காட்டிக் கொடுக்கும். ஏன் வீட்டிற்குள் புகுந்த பாம்புகளைக் கடித்து தனது உரிமையாளர் உயிரைக் காப்பாற்றியது நாய் என்ற செய்தியை நாம் பார்த்து படித்திருப்போம்.
அந்த அளவிற்கு நாய் நன்றியுடன் இருக்கும்.

ஆளுநரை திருப்பி அனுப்ப முடிவு - திமுகவின் திட்டம் பலிக்குமா? பிளானோடு இறங்கிய CM ஸ்டாலின்!

tamil.oneindia.com  -   Shyamsundar   :  சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை திரும்ப பெறுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆளும் திமுக தரப்பு கையெழுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆளுநருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி, திமுக அரசுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று திமுக மற்றும் தோழமைக்கட்சிகளின் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை ஆளுநருக்கு மிகப்பெரிய அளவில் அழுத்தத்தை கொடுத்தது.
சூடு பிடித்த களம்.. ஆளுநருக்கு எதிராக திமுக பெரிய மூவ்! அவசரமாக டெல்லி பறக்கும் ரவி! என்ன நடக்குது? சூடு பிடித்த களம்.. ஆளுநருக்கு எதிராக திமுக பெரிய மூவ்! அவசரமாக டெல்லி பறக்கும் ரவி! என்ன நடக்குது?

பாகிஸ்தான் Ex PM இம்ரான் கானுக்கு துப்பாக்கி சூடு ... ஆபத்தில்லை

  மாலைமலர் " வசிராபாத்:: பாகிஸ்தானின் வசிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அரசுக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியின்போது இம்ரான் கான் திறந்த வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சபராலி கான் சவுக் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் இம்ரான்கானின் காலில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சியினர் (பிடிஐ) சிலரும் காயமடைந்தனர்.
துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கான் பாதுகாப்பாக குண்டு துளைக்காத வாகனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

இவரை பார்க்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும்?”- மம்தா நெகிழ்ச்சி பேட்டி!

 kalaignarseithigal.com  -   KL Reshma   :  “இவரை பார்க்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும்?”-முதல்வரை சந்தித்த பின் மம்தா நெகிழ்ச்சி பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், அவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு சகோதரர் போன்றவர் என்றும், அவரை சந்திக்காமல் எப்படி சென்னையை விட்டு செல்ல முடியும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டியளித்துள்ளார்
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், தற்போது மணிப்பூர் ஆளுநராக மட்டுமல்லாமல் மேற்கு வங்க ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மூத்த சகோதரரின் 80 ஆவது பிறந்த நாள் விழா சென்னையில் இந்த வாரம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

குஜராத்துக்கு வந்த பிரதமர்.. ஒரே இரவில் படு ஜோராக மாறிய அரசு மருத்துவமனை! gujarat Morbi Hospital Painted Ahead Of PM Modi's Visit

tamil.news18.com  : பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, குஜராத் மோர்பி பால விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு இரவோடு இரவாக போலியான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை,சரியாக  மாலை 6.40 மணிக்கு குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் உள்ள தொங்கு பாலம் விபத்துக்குள்ளானது.
இதில், தற்போது 140க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அந்த பகுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்ற்னர்.  
பால விபத்து உலகளாவிய அளவில் பேசப்பட்டு வருகின்றன. உள்ளூர் முதல் மேற்கத்திய ஊடங்கங்களை வரை மோர்பி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

ராஜாஜி ஆலோசனையில் சி பா ஆதித்தனார் உருவாக்கிய நாம் தமிழர் .. சோ .+ குருமூர்த்தியால் சீமான் நாதக வாகிய கதை ..

Junior Vikatan - 30 March 2016 - பெரியோர்களே... தாய்மார்களே! - 75 |  Periyorkalae Thaimarkalae - Political column - Junior Vikatan - Vikatan

Balasubramania Adityan T : தனக்கு ஓட்டு போட தமிழ்நாட்டில் சாத்தான்குளம் தொகுதியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு எவர்சில்வர் குடம் கொடுத்து ஓட்டு வாங்கி தமிழக அரசியலை கேவலமாக ஆக்கியவர் தான் இந்த சி.பா.ஆதித்தனார்...
இதற்கு சி.பா.ஆதித்தனார் பயன் படுத்திய ஆயுதம் இலுமினாட்டி பிரீமேசன் ராஜாஜி ஆலோசனையில் உருவாக்கப்பட்ட "நாம் தமிழர்" இயக்கம்.
எவர்சில்வர் குடம் ஓட்டுக்கும்,நாம் தமிழர் என்கிற பெயருக்கும் சம்மந்தம் உண்டா ?
அதே "நாம் தமிழர்" பெயர் தற்போது இவர்களிடம் இருந்து பெறப்பட்டு நடிகர் சீமானை ஒருங்கிப்பாளர் ஆக்கி அரசியல் கட்சியாக செயல்படுத்தப் படுத்தப்படுகிறது.
சி.பா.ஆதித்தனை எவர்சில்வர் குடம் இலவசமாக கொடுக்க வைத்தது போலவே சீமானுக்கு நடிப்பு என்கிற மூலதனம் சூட்டப்பட்டு உள்ளது.
பாதிரி ஜெகத்கஸ்பர் நாடார் சொல்வதை கேட்டு நடிகர் சீமானும் பிரமாதமாக நடிக்கிறான்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொத்துக்கள் யார் யாருக்கு சென்றது? சொத்து விபர பட்டியல்

Rajamani Ganesan Ganesan  :   பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உண்மையும் புனைவும்
சொத்தை தாழ்த்தப்பட்டவர்க்கு எழுதிய கதை
பசும்பொன் முத்துராமலிக்க தேவர் தன் சொத்தையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்க்கு உயிலெழுதி வச்சுட்டு செத்துப்போனாரா?
 ,அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அரைவேக்காடுகளே.
அதாவது முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்டோர் மீது அதீத கரிசனம் கொண்டவர் என்றும்,
 அவர் சாதி பேதம் பார்க்காத தூய்மையாளர் என்றும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டி திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களுள் ஒரு அரைப்பொய் இது.
 ஏன் அரைப்பொய் என்றால், தமது சொத்தை பதினேழு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றைத் தமக்கென வைத்துக்கொண்டு,
மீதி பதினாறு பாகத்தை பதினாறு நபர்களுக்கு இனாம் சாசனம் எழுதி வைத்தார், அவர்களுள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோரும் இருந்தனர் என்பது வரையில் இது உண்மையாகும்..
ஆனால் அப்பதினாறு பாக சொத்தையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோருக்கே எழுதி வைத்தார் என்பது நாய்த்தோலில் வடிகட்டிய பொய்யாகும்.
அருப்புக்கோட்டை ஏ.ஆர்.பெருமாள்,
அருப்புக்கோட்டை வி.ஏ.சிவன்,
தூரி இராமசாமித் தேவர்,
பாரக்குளம் நல்லமுத்துத் தேவர்,
பசும்பொன் நல்லகுட்டித் தேவர்,
பசும்பொன் சின்னதம்பித் தேவர்,
பசும்பொன் ராமச்சந்திரத் தேவர்,