வியாழன், 3 நவம்பர், 2022

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொத்துக்கள் யார் யாருக்கு சென்றது? சொத்து விபர பட்டியல்

Rajamani Ganesan Ganesan  :   பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உண்மையும் புனைவும்
சொத்தை தாழ்த்தப்பட்டவர்க்கு எழுதிய கதை
பசும்பொன் முத்துராமலிக்க தேவர் தன் சொத்தையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்க்கு உயிலெழுதி வச்சுட்டு செத்துப்போனாரா?
 ,அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அரைவேக்காடுகளே.
அதாவது முத்துராமலிங்கத் தேவர் தாழ்த்தப்பட்டோர் மீது அதீத கரிசனம் கொண்டவர் என்றும்,
 அவர் சாதி பேதம் பார்க்காத தூய்மையாளர் என்றும் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க வேண்டி திட்டமிட்டுப் பரப்பப்படும் பொய்களுள் ஒரு அரைப்பொய் இது.
 ஏன் அரைப்பொய் என்றால், தமது சொத்தை பதினேழு பாகங்களாகப் பிரித்து அவற்றுள் ஒன்றைத் தமக்கென வைத்துக்கொண்டு,
மீதி பதினாறு பாகத்தை பதினாறு நபர்களுக்கு இனாம் சாசனம் எழுதி வைத்தார், அவர்களுள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோரும் இருந்தனர் என்பது வரையில் இது உண்மையாகும்..
ஆனால் அப்பதினாறு பாக சொத்தையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோருக்கே எழுதி வைத்தார் என்பது நாய்த்தோலில் வடிகட்டிய பொய்யாகும்.
அருப்புக்கோட்டை ஏ.ஆர்.பெருமாள்,
அருப்புக்கோட்டை வி.ஏ.சிவன்,
தூரி இராமசாமித் தேவர்,
பாரக்குளம் நல்லமுத்துத் தேவர்,
பசும்பொன் நல்லகுட்டித் தேவர்,
பசும்பொன் சின்னதம்பித் தேவர்,
பசும்பொன் ராமச்சந்திரத் தேவர்,


பசும்பொன் நாகநாதன், கல்லுப்பட்டி வெள்ளைச்சாமித் தேவர்,
மதுரை முத்துச்செல்வம்,
திருச்சுழி குருசாமிப் பிள்ளை,
சிவகங்கை முத்துராசுப் பிள்ளை,
வடிவேலம்மாள், ஜானகியம்மாள்,
பசும்பொன் வீரன்,
பசும்பொன் சந்நியாசி
ஆகியோரே அந்தப் பதினாறு பேர். இவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த வீரன், சந்நியாசி ஆகியோர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யாவரும் முத்துராமலிங்கத் தேவருக்கு நெருங்கிய உறவினர்கள், பணிவிடைகள் செய்தவர்கள் மற்றும் அரசியல் ரீதியில் உதவியவர்கள் என்ற வகையில் மிகவும் நெருக்கமானவர்கள். இதில் எந்த வகையிலும் முத்துராமலிங்கத் தேவரின் சாதி பாகுபாடு பாராத பெருந்தன்மையோ, வள்ளல் குணமோ துளியும் இல்லை.

இவர்களுள் முத்துராமலிங்கதேவரின் நெருங்கிய உறவினர்கள் நால்வர் தவிர மீதமுள்ள (ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரன், சந்நியாசி ஆகிய இருவர் உள்ளிட்ட) பதினான்கு நபர்களும் அவரது இறப்புக்குப்பின் மேற்படி சொத்துக்களில் அவர்களது பாகத்தைத் திரும்ப அளித்து விட்டனர். பின்னாளில் மூக்கையாத் தேவர் உள்ளிட்டோர் முயற்சியால், முத்துராமலிங்கத் தேவரின் பெயரில் உருவாக்கப்பட்ட தர்ம ஸ்தாபனம் (ட்ரஸ்ட்) இந்தச்

சொத்துக்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது. அதாவது மேற்படி சொத்தில் ஒரு பைசா கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துக் கொள்ளவில்லை. இது பின்கதை.
உண்மை இப்படி இருக்க, ஒவ்வொரு வருடம் அக்டோபர் மாதம் முழுக்க இந்த வள்ளல் வாரிசுகளுக்கு பதில் சொல்லி மாளவில்லை. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வந்து கம்பு சுத்துகிறார்கள் என்பது தான் நமக்கு மண்டை காயும் விஷயம்.

[பி.கு. இதற்கெல்லாம் ஆதாரம் என்னவென்று கேட்டு கம்பு சுத்த வருபவர்கள், திருச்சுழி சார்பதிவாளருக்கு நூறு ரூபாய் சலான் கட்டி மேற்படி பத்திர நகல் கோரி விண்ணப்பித்து உண்மையைத் தெரிந்து கொள்ளவும். இவ்வளவு நாள் நீங்கள் நோகாமல் பரப்பிய பொய்யால் நாங்கள் தலையை பிய்த்துக் கொண்டதற்கு ஒரு பரிகாரமாக இருக்கட்டும்.]

கருத்துகள் இல்லை: