வெள்ளி, 4 நவம்பர், 2022

கோவை கார் வெடிப்பு சம்பவம்: கிஷோர் கே. சுவாமி மீது வழக்குப்பதிவு

tamil.indianexpress.com   :   கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே தீபாவளி முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை ஓடும் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஜமேஷா முபின் எனத் தெரியவந்தது. காவல்துறை விசாரணையில் சம்பவ இடத்தில் ஆணி, கோலி குண்டு, பால்ரஸ் குண்டு கண்டெடுக்கப்பட்டது.
டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தை நேரில் ஆய்வு விசாரணை மேற்கொண்டார். சதிச் செயலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
பண்டிகை தினம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
ஜமேஷா முபின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து தமிழக அரசு வழக்கை என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்தது. தேசிய புலானய்பு முகமை வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க பல்வேறு கருத்துகளை கூறியது. தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஆளும் தி.மு.க அரசு, காவல்துறை சார்பில் பதில் கொடுக்கப்பட்டது. இருப்பினும் சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில் காவல்துறை தெரிவிக்காத தகவல்களை வெளியிட்டனர். தவறான கருத்துகளை பரப்புவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் எச்சரித்து வந்தனர்.

இந்தநிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கிஷோர் கே. சுவாமி சமூகவலைதளத்தில் தவறான கருத்து பதிவிட்டதாக அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டதாக சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பே தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக யூ டியூபர் கிஷோர் கே. சாமி கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை: