பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தையும் பெரும் ஆதரவையும் பெற்று கொண்டு வருகிறது .இதன் தாக்கம் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை உலக அரங்கில் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை .பல உதவிகள் மற்றும் பொருளாதார சலுகைகள் குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும் சாத்தியம் உள்ளது . ஏற்கனவே பாஜகவின் இந்துத்வா கொள்கையால் உலக அரங்கில் இந்திய பெரிதும் தனிமைப்பட்டு உள்ளது .
சர்வதேச ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் சாதாரணமானது அல்ல . இதை எளிதில் கடந்து போவது புத்திசாலித்தனம் அல்ல .
nammatamizhagam.com : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு தழுவிய அளவில் இன்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்குச் சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில் 'சக்கா ஜாம்' என்ற பெயரில் இன்று ( பிப்ரவரி 6) நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.அதன்படி இன்று பிற்பகல் 12 மணியிலிருந்து 3 மணிவரை
பல்வேறு மாநில நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதையொட்டி டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் காவல்துறையினர்,
துணை ராணுவ படையினர் என மொத்தம் 50 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில்
களமிறக்கப்பட்டனர். டெல்லியில் 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் சாலை மறியல்
போராட்டத்தை முன்னிட்டு இன்று மூடப்பட்டன.
maalaimalar : சென்னை:
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா, பெங்களூருவில் ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். அவர் தனது காரில் அதிமுக கொடியை பொருத்தியது, அதிமுகவை கைப்பற்றுவோம் எனறு டிடிவி தினகரன் கூறியது, அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு குரல் போன்ற நிகழ்வுகள் அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரசாரத்தை
தீவிரப்படுத்துவது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள்
வழங்கப்பட்டுள்ளன.
nakkeeran :
சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் பிப்ரவரி 8- ஆம் தேதி (திங்கள்கிழமை) அன்று காலை 09.00 மணியளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார் என்று டி.டி.வி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தமிழகம் வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அதற்கான ஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலாவை வரவேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சசிகலாவை வரவேற்க வேண்டும். போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் சசிகலாவிற்கு வரவேற்பு அளிக்க வேண்டும். சசிகலாவை அ.ம.மு.க.வினர் வரவேற்பதைத் தடுக்க சிலர் சதித்திட்டம் தீட்டுவதாக சந்தேகம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
maalaimalar : புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 73-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில்
வன்முறை ஏற்பட்டது. இது விவசாயிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதன்
பிறகு 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர்ந்து அமைதியாக போராடி
வருகிறார்கள்.
அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துகிறோம் என்பதை பொதுமக்களின்
கவனத்துக்கு கொண்டு செல்லவும், அரசின் கவனத்தை ஈர்க்கவும், வேளாண்
சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடுமுழுவதும்
இன்று ‘சக்கா ஜாம்’ எனப்படும் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை நடத்தப்போவதாக
விவசாயிகள் அறிவித்தனர்.
திமுக சார்பில் கடந்த சில வாரங்களாகவே கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் சந்தித்திருக்கிறார்கள். ”உங்களுக்கு
இத்தனை சீட்டுதான், தலைவர் சொல்லச் சொன்னார்” என்று அந்த நபர் கூட்டணிக்
கட்சித் தலைவர்களின் முன்னே நின்று சொல்லும்போதே அந்தத் தலைவர்களுக்கு
அதிர்ச்சி ஆகிவிட்டது. காரணம் அவர் சொன்ன சீட்டுகளின் எண்ணிக்கை அவ்வளவு
குறைவாக இருந்தது.
உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்
திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினுக்கு நெருக்கமான பிரமுகர், “உங்களுக்கு வரும்
தேர்தலில் இரு சீட்டுகள்தான்” என்று சொன்னதையும் அதைக் கேட்டு திருமா
அதிர்ந்ததையும் நாம் ஏற்கனவே மின்னம்பலத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
minnambalam ": நேற்றுப்போல்
இன்று இல்லை; இன்று போல் நாளையில்லை...காதலுக்கு மட்டுமில்லை; கலிகால
அரசியலுக்கும் இது அப்படியே பொருந்தும் பாட்டுதான். இன்னும் தெளிவாய்ச்
சொல்வதானால் தேர்தல் கால அரசியலுக்கு இது செமையான சிச்சுவேஷன் சாங்... சசிகலாவின்
ரீஎன்ட்ரி குறித்தும் இப்படித்தான் நாளுக்குநாள், மணிக்கொரு தரமாக கதைகள்
கிளம்பிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் சசிகலா தற்போது இருக்கும்
கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து அத்தனை எளிதில் ‘பிரேக்கிங் நியூஸ்’
வருமென்று தோன்றவில்லை. நமக்குத் தெரிந்து, ஜனவரி 27 ஆம் தேதியிலிருந்து
நடந்த நிகழ்வுகளிலும் அரிதான சந்திப்புகள், அதிரடி அறிவிப்புகள் எதுவும்
அங்கே நிகழ்வதற்கு வாய்ப்புகளில்லை. பெங்களூர் பரப்பன அக்ரஹார
சிறையில் நான்காண்டு சிறைத்தண்டனை முடிவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு,
உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஜனவரி 20ஆம் தேதி, சிவாஜி நகரில் உள்ள அரசு
மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் சசிகலா. பிறகு விக்டோரியா தனியார்
மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 27 ஆம்
தேதியன்று, அங்கே வைத்தே அவருக்கு விடுதலை அளித்தது, பரப்பன அக்ரஹார சிறை
நிர்வாகம்.
நீங்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் நீங்க இஸ்லாமியராக இருக்கலாம் அகமுடையர்களாக இருக்கலாம் நாவிதர் சமுதாயமாக இருக்கலாம் முத்தரையராக இருக்கலாம் வன்னியராக இருக்கலாம் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கலாம் பிரான்மலை கள்ளராக இருக்கலாம் யாராக வேண்டும் என்றாலும் இருகலாம் .இந்த வீடியோ உங்களுக்கு முக்கியமானது.
உங்கள் குடும்பத்தில உள்ள ஒருவரின் வாழ்க்கைக்கு நேரடியாக தொடர்புடையது உங்கள் வருங்காலத்தையே தீர்மானிக்க கூடியது . இந்த இட ஒதுக்கீடு எம் டேக் நீங்கள் படிக்க முடியாமல் போகிறது , எம்எஸ் சி படிக்கமுடியாமல் போகிறது .. பையோ டெக்னோலஜி படிக்க முடியாமல் போகிறது . கெமிக்கல் பயோலொஜி படிக்க முடியாமல் போகிறது.இந்த படிப்புக்களை எல்லாம் பலருக்கும் தெரியாது முதல் தலைமுறை பெற்றோர்களுக்கு இதெல்லாம் தெரியாது . இதன் முக்கியத்துவம் எல்லாம் தெரியாது ... இந்த காணொளி முழுவதும் கண்டிப்பாக பாருங்கள்
எவ்வளவு பெரிய அக்கிரமம் கண்முன்னே நடக்கிறது . தயவு செய்து .இதை அதிக அளவில் பகிரங்க அன்பர்களே.
athiradi: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால்
முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான
இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள்
அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம்
செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல்
ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை
அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை
கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு
நடைபெற்று வருகின்றது
இன்று காலை 09.00 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி
கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து
புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து இரவு7
மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக
வவுனியாமாவட்டத்தை அடைந்து புதிய பேருந்துநிலையத்தில் வைத்து போராட்டம்
நிறுத்திக்கொள்ளப்பட்டது.
Surya Xavier :சீமான் கருத்தியலை முற்றாக நிராகரிக்கிறேன். ஏன்?
சீமான் பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் விமர்சித்து தானே பேசுகிறார். பிறகு எப்படி பாஜக B டீம் என்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புவோர்கள் உண்டு. அரசியல் கட்சிகளை விமர்சிப்பதற்கும், அரசியலை விமர்சிப்பதற்குமான வேறுபாடுகள் உண்டு. இந்தக் கட்டுரையைப் படியுங்கள். நுட்பம் விளங்கும்.
முதலாளித்துவம் எப்பொழுதெல்லாம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக சூறையாடி, அவர்களை வாழ்வா சாவா என்ற நெருக்கடிக்குத் தள்ளுகின்றதோ, அப்பொழுதெல்லாம் முதலாளி வர்க்கம் தன்னை காப்பாற்றிக் கொள்ள தேசிய வெறியையும், இனவெறியையும் கைக்கொள்ளும் என்பதுதான் உலக வரலாறு.
எந்த ஒரு பாசிச சித்தாந்தமும் அதற்கான சமூகத் தேவை இல்லை என்றால், அது வெகுமக்களிடம் எடுபடாது என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், அது துளிர்விட்டு முளைக்கும் போதே அதை சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இல்லாமல் பலவீனமாக இருந்தோம் என்றால், பாசிசம் மெல்ல மெல்ல அதிருப்தியின் மீது படர்வதை நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும். இன்று அப்படியான ஒரு போக்குதான் தமிழகத்தில் சீமானின் வடிவில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
G Selva : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. கேபி_பார்க் குடியிருப்பில் 864 வீடுகளை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் பணிகள் அதிகாரப் பூர்வமாக தொடங்கியது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் கே முருகன் முன்னிலையில் குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடுகளில் யாருக்கு எந்த வீடு என்பதை முடிவெடுக்கும் குலுக்கல் இன்று (05-02-2021) தொடங்கியது. தகரக் கொட்டகைகளிலும் சுடுகாட்டின் ஓரங்களிலும் வாழ வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்காக, தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது. மனு கொடுப்பது, தெருமுனை கூட்டம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு, அதிகாரிகள் சந்திப்பு, முற்றுகை போராட்டம், குடியேறும் விழா என இடைவிடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கம் இன்று வெற்றியடைந்துளளது.
nammatamizhagam.com : திருப்பதி
தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்குக் கோயில் கட்ட சென்னை
ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 30 கோடி ரூபாய்
பெறுமானமான நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமான அந்த இடத்தை நன்கொடையாக அவர்
வழங்கியுள்ளார்.
சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில்
திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. இதேபோல
திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோயிலையும் கட்டுவதற்கு முடிவு
செய்தது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. தற்போது
ஜி.என்.செட்டி ரோட்டில் கோயிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த
இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும். அதை அவர் நன்கொடையாக
வழங்கியுள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும். மொத்தம்
14,880 சதுர அடியில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கோயில் கட்டப்பட
உள்ளது. கட்டுமானங்கள் எப்படி அமைய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு
செய்யப்பட்டு இருந்தது. ராஜகோபுரம், பிராகாரம், முகாம் மண்டபம் என கோயிலை
கட்ட இருக்கிறார்கள்.
minnnambalam : ஏழரைக்குப்
பின்புதான் எட்டு வரும்; ஆனால் எட்டுக்குப் பின்தான், தமிழகத்தில் ஏழரை
ஆரம்பிக்கப் போகிறது. நான்காண்டு சிறைவாசம், பத்து நாள்கள்
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை, ஏழு நாள்கள் தனிமைக்குப் பின்பு வரும்
எட்டாம் தேதியன்று தமிழகத்துக்கு வரவிருக்கிறார் சசிகலா. அன்றைக்கு
கர்நாடகா எல்லையிலிருந்து சென்னை வரையிலும் சிறப்பான வரவேற்பு
கொடுக்கப்படவிருப்பதாக டிடிவி தினகரன் சொல்லியிருக்கிறார். சசிகலாவுக்கு
ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சுவரொட்டிகள் தெறிக்கின்றன.அவர் வந்த
காரில் அதிமுக கொடி இருந்தது தொடர்பாக, தமிழக காவல்துறை தலைவரிடமே
அமைச்சர்களே நேரில் சென்று புகார் கொடுத்திருக்கின்றனர். தமிழக
எல்லைக்குள் அதிமுக கொடி கட்டிய காரில் வந்தால், சசிகலா மீது சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன்முகம் காட்டியிருக்கிறார் தமிழகத்தின்
சட்டத்துறை அமைச்சர் சண்முகம். கொடியை மட்டுமல்ல; கரைவேட்டி கட்டி
வருகிறோம்; முடிந்தால் அவிழ்த்துப் பாருங்கள் என்று கர்நாடகா செய்தித்
தொலைக்காட்சிகளில் சீறுகிறார்கள் சின்னம்மா பேரவையினர்.
kalaignarseithigal.com : தனது
அறிவிப்பைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி
பழனிசாமியின் கடைசிநேர நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க
தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. “விவசாயிகளின்
வாழ்வு செழித்திடும் வகையில், தலைவர் கலைஞர் வழிநின்று, விவசாயிகள் கடனை
ரத்து செய்வதற்கான உத்தரவை திராவிட முன்னேற்றக் கழக அரசு வெளியிடும்” என்று
உறுதிபடத் தெரிவித்து வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க
தலைவரின் இந்த அறிவிப்புக்கு விவசாயப் பெருங்குடி மக்களிடையே எழுந்துள்ள
பேராதரவால் அச்சமடைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக இந்த
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடன் ரத்து குறித்த அறிவிப்பை
வெளியிட்டிருக்கிறார்.இந்நிலையில், தனது அறிவிப்பைத் தொடர்ந்து,
சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்ட எடப்பாடி பழனிசாமியின் கடைசிநேர
நாடகங்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
அளித்தும், அதை எதிர்த்து, “கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய
முடியாது" என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு - தடை உத்தரவு பெற்ற
முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் என்றதும், பதவி பறிபோகப் போகிறதே என்ற
பயத்திலும் பதற்றத்திலும், திடீர் ஞானோதயம் பிறந்து, விவசாயக் கடன்களைத்
தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறார்.
NEW DELHI: In a major setback for China’s infrastructure footprints in Sri Lanka, local engine drivers have decided to boycott operating trains with railway carriages made in China.
The Sri Lankan Locomotive Engine Operators' Union (LEOU) Secretary Indika Dodangoda recently said that railway carriages made in China pose a threat to the safety of the passengers.
economictimes.indiatimes.com
malaimalar :கொழும்பு:
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சீனா வலுவாக காலூன்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. சீனாவின் இந்த முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், இலங்கை ரெயில் டிரைவர்களின் முடிவு அமைந்துள்ளது.
இலங்கையின் ரெயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளர் இந்திகா தொடங்கொட சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில் வண்டிகள், பயணிகளின்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சீன ரெயில் பெட்டிகளில்
பிரேக்குகள் கோளாறாக உள்ளன. பிரேக்குகளை அழுத்தும்போது, நிறுத்தவேண்டிய
இடத்தை விட கூடுதல் தூரம் செல்கின்றன. சீனாவில் தயாரிக்கப்பட்ட ரெயில்
வண்டிகள் உள்ளூர் தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய முறையாக
பராமரிக்கப்படவேண்டும்.
maalaimalar :
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய
ரூ.12,410 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை:முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:- ;
விவசாயிகளுக்கு துயர் ஏற்படும்போதெல்லாம், அம்மா அரசு உதவிக்கரம் நீட்டி,
அவர்களைக் காப்பதில் முன்னிலையில் இருந்து வருகின்றது. அதனால்தான், 2016
ஆம் ஆண்டு அம்மா மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், 31.3.2016 வரை
நிலுவையில் இருந்த 5,318.73 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி
செய்தார். இதனால் 12.02 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற்றனர்.
tamil.oneindia.com : சென்னை: வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே, "நீ புடுங்கிறது பூரா தேவையில்லாத ஆணிதான்"..ன்னு.. அதுதான் நினைவுக்கு வருகிறது டெல்லி போலீசாரின் தற்போதைய செயலை பார்த்தால்.. காசிப்பூரில் நடுரோட்டில் நட்டு வைத்த ஆணிகளை இப்போது ஒவ்வொன்றாக பிடுங்கி கொண்டிருக்கிறார்களாம்..! வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.. அதேபோல, வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், குடியரசுத் தலைவரின் உரையையும் புறக்கணித்தன. அளவுக்கு அதிகமான குளிர், கொட்டி தீர்க்கும் உறைபனியில் விவசாயிகள் போராட்டத்தை உறுதியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.. அதிலும் பெரும்பாலும் வயசான தாத்தாக்கள்தான் இரும்பு மனசுடன் டெல்லி நுழைவாயிலில் மிரட்டலாக போராட்டத்தில் உட்கார்ந்துள்ளனர். போராட்டம்
இந்த 3 மாசமாகவே சரியான வழியில், சாத்வீகமான முறையில் சென்று கொண்டிருந்த
போராட்டம், குடியரசு தினத்தன்று வன்முறை சம்பவத்தால் திசை
திருப்பப்பட்டுவிட்டது.. எனினும் தங்கள் போராட்டத்தை கைவிட விரும்பாத
விவசாயிகள், டெல்லியின் காசிப்பூர், திக்ரி, சிங்கு உள்ளிட்ட எல்லைகளில்
குவிந்துள்ளனர்.
minnambalam : சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, ‘பாஷ்யம் மெட்ரோ’என்று திடீரென பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம், கோயம்பேட்டில் அமைந்து இருக்கின்றது. அங்கே இருக்கின்ற பாலத்திற்கு, கடந்த சில நாள்களாக பெயிண்ட் அடித்தார்கள். திடீரென நேற்று, ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என, புதிய பெயரைச் சூட்டி எழுதி இருக்கின்றார்கள். இதுகுறித்து, எந்தவிதமான முன்அறிவிப்பையும், மெட்ரோ நிர்வாகம் வெளியிடவில்லை. இந்தப் பெயர் மாற்றத்தை, வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ள வைகோ, “யார் அந்த பாஷ்யம்? கோயம்பேடு மெட்ரோ நிலையத்தை விலைக்கு வாங்கி இருக்கின்றாரா? அது நிறுவனமா? அல்லது தனி ஒருவரா? அல்லது பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தம் பெற்று இருக்கின்றாரா?
Ka Deena : ·
ரஜினி வர மறுக்கிறார் என்று தெரிந்தவுடன் யாரை முதலமைச்சர் ஆகவிடாமல் கைது செய்து சிறையல் அடைத்தார்களோ அவர்களின் உதவியையே நாடியுள்ளது மத்திய பாஜக.
தினகரன் டில்லிக்கு தனி விமானத்தில் வரவைக்கப்பட்டு வழங்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்ற ஆரம்பித்திருக்கிறார்.
டில்லி எஜமானர்களிடம் அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு வந்திருப்பார் தினகரன்.. அந்த நம்பிக்கையை காக்க திமுக-வை வீழ்த்துவதே நோக்கம் என்ற புள்ளியில் இணைய தன்னுடைய மூத்த இரு அடிமைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்..
சந்திப்புகள் நிகழும். ஒன்றினைவார்கள். ஏனென்றால் அடிமைகளின் சுபாவம் ஒன்று தான். சுயலாபத்திற்காக சுயமரியாதை இழந்து மண்டிபோடுவது.. அது இவர்களுக்கு ஆரம்பம் முதலே கைதேர்ந்த கலை.
உடனே அந்த பக்கமிருந்து மாலன்களும், சுமந்த்களும் கூடவே முருகன்களும் இணைப்புக்கு பின்னர் அதிமுக வீழ்த்த முடியாத கட்சியாக உருவெடுத்துள்ளது என்று வாசிப்பார்கள். பத்திரிக்கை துறையினரும் நடுநிலையாளர்களும் அதிமுகவின் இணைப்பு ராஜதந்திரம் என்றெல்லாம் பேசி தேர்தலில் திமுகவின் வெற்றி கடினமானது என்ற தோற்றத்தை ஊதுகுழலாகி விவாதம் நடத்துவார்கள்.
இதெல்லாம் சாத்தியமில்லை.!! திமுகவின் வெற்றி என்பது உறுதிசெய்யப்பட்ட ஒன்று.!! அதிமுக மீதமிருப்பவர்களையும் வேண்டுமானால் கூட்டிக்கொண்டு வரட்டும்.!!
ஆலஞ்சியார் : ·
எங்கள் கலாச்சாரம் உயர்ந்தது, பண்பாடு செழுமையானது என்றெல்லாம் கூக்குரல் எழுப்புகிற யாருக்கும் நான் சொல்கிற பதில் இதுதான்
நீதியோடும், சக உயிர்களின் மீது மதிப்போடும் வாழ்கிறவனே இந்த உலகின் உயர் பண்பாட்டைக் கொண்டவன், அவனே நாகரீக உலகின் சிற்பி..
2013 ல் சர்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது சச்சின் எழுதியது . இன்று பன்னாட்டு சமூகம் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துக்களை சொல்லும் போது இந்திய இறையாண்மைக்குள் தலையிட கூடாதென்கிறார் ..
90 வருட காத்திருப்பிற்கு பின் பார்பனிய பனியா கூட்டம்
(ஆர்எஸ்எஸ்)அதிகாரத்திற்கு வந்த பிறகு தங்கள் சுயரூபத்தை
வெளிபடுத்துகிறார்கள்.. கிரிக்கெட் கூட தன் புகழுக்காக விளையாடியவர் தான்
50ம் 100ம் எடுக்க வேண்டுமென்பதற்காக நிறைய இழப்பை தந்து நாடு
(அணி)தோல்வியடைந்தாலும் பரவாயில்லை என்ற மனபான்மை கொண்டவர்தான் ..இவருக்கு
வழங்கபட்ட வாய்ப்புகள் பிறருக்கு வழங்கபட்டிருந்தால் நிறைய வெற்றிகளை
பெற்றிருக்கலாம் .. எப்போதும் தனக்காகவே சிந்தித்தவர் நாடுபற்றியெல்லாம்
கவலை கொள்ளாதவர் இப்போது குரல் கொடுக்கிறார்
Mathivanan Maran - tamil.oneindia.com : சென்னை: சட்டசபை தேர்தலில் வலிமையான கூட்டணியாக இருந்து வரும் திமுக அணியில் தொகுதி பங்கீடு விவகாரம்தான் மிக பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி உறுதி என்கிற பெரியண்ணன் மனோபாவத்தில் திமுக இருக்கிறது. மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி வந்த திமுக தலைவர் ஸ்டாலின், இப்போது முதல்வர் என்கிற தோரணையிலேயே பேசிவருகிறார்.
இந்த ஓவர் கான்பிடன்ஸ் அணுகுமுறையை அப்படியே கூட்டணி கட்சிகளிடம்
திமுக காட்டி வருகிறது. திமுக ஆட்சியில் அமையும்; நமது கட்சியிலும் சில பல
எம்.எல்.ஏக்கள் உருவாக வாய்ப்பு கிடைத்துவிட்டது என நினைத்து கொண்டிருந்த
அத்தனை கூட்டணி கட்சிகளின் கனவிலும் லாரி லாரியாக மண்ணை அள்ளி போட்டு
வருகிறது திமுக......
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் தொடக்கம் முதலே தொகுதி பங்கீடு
விவகாரத்தில் ஒருவித கமுக்கத்துடன் இருந்து வருகிறது. இருந்தபோதும்
குறைந்தபட்சம் 25 தொகுதிகளாவது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என நம்பிக்
கொண்டிருக்கிறது. இருப்பினும் திமுக தரப்பு மிக அதிகபட்சமாக 15
தொகுதிகள்தான் தர முடியும் என கூறிவிட்டது. .....
.
Vishnupriya R - /tamil.oneindia.com : சென்னை: பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 161 இன்படி தமிழக சட்டசபையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நிராகரித்துள்ளார். மேலும் இந்த விடுதலை தொடர்பான முடிவை எடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் செல்லும் நெடுஞ்சாலையை இணைக்கும் காஸிபூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்க வியாழக்கிழமை சென்ற தமிழக எம்.பி.க்கள் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். இதனால், காவல்துறையினருடன் எம்.பி.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தர
பிரதேசத்தில் இருந்து டெல்லிக்குள் நுழைய நகர காவல்துறையினர் அனுமதி
மறுத்துள்ளதால், டெல்லி எல்லை பகுதியான காஸிபூரில் உள்ள நெடுஞ்சாலையின் ஒரு
பாதையை வழிமறித்துள்ள விவசாயிகள், அங்கு தங்களுடைய டிராக்டர்களை
நிறுத்தியும் கூடாரங்களை போட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய
அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்களின்
எதிர்ப்பை பதிவு செய்து வரும் அவர்கள், அங்கிருந்தவாறு ஊடகங்களை சந்தித்து
தங்களுடைய குரல்களை ஒலித்து வருகிறார்கள்.
Greta Thunberg
@GretaThunberg
I still #StandWithFarmers and support their peaceful protest.
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest
5:59 AM · Feb 4, 2021 maalaimalar :
சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர்
கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில்,
தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.இந்திய அரசு அமல்படுத்தியுள்ள
மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள விவாசயிகள்
ஒன்றாக இணைந்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
டெல்லிக்குள் விவசாயிகள் நுழைந்து
விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அடுக்கு தடைகளை டெல்லி போலீசார்
ஏற்படுத்ததியுள்ளனர். பேரிகார்கடுகளை வரிசையான வைத்து சாலைகளில் ஆணிகளை
புதைத்து வைத்துள்ளனர். மேலும், இணையதள சேவையை முடக்கியுள்ளனர். மின்சாரம்
மற்றும் கழிப்பிட வசதிகளையும் துண்டித்துள்ளனர்.
minnambalam.com : தஞ்சையில்
கூலித் தொழிலாளியை மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் கடுமையாகத் தாக்கி
துன்புறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது. தஞ்சாவூர்
அருகே பூண்டி கிராமம், மேலத்தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து
வருகிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் ராகுல். 22
வயதான ராகுல் கூலி வேலைக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்
பணத்தைத் திருடி விட்டதாக ராகுலை 5 பேர் கொண்ட கும்பல் கண்களைக் கட்டி
கடுமையாகத் தாக்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
முதலில்
முட்டி போட வைத்து அவரது கண்ணைத் துண்டால் இறுக்கிக் கட்டி அங்கிருந்த
மரத்தின் அருகே அந்த கும்பல் அழைத்துச் செல்கிறது. அங்கு இரண்டு பேர்
தனித்தனியாக ராகுலின் கைகளை இழுத்து பிடித்துக் கொள்கின்றனர். பின்னர்
ராகுலின் நெஞ்சு பகுதியினை மரத்தில் வைத்து அழுத்துகின்றனர்.