சனி, 6 பிப்ரவரி, 2021

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு .. போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது

athiradi: பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது

இன்று காலை 09.00 மணிக்கு திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து புதுக்குடியிருப்புநோக்கி சென்று ஒட்டுசுட்டான் சந்தியை அடைந்து இரவு7 மணியளவில் நெடுங்கேணியை ௮டைந்து அங்கிருந்து புளியங்குளம் ஊடாக வவுனியாமாவட்டத்தை அடைந்து புதிய பேருந்துநிலையத்தில் வைத்து போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.

நாளையதினம் காலை 7.30 மணிக்கு வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகி. ஏ9 வீதியூடாக மணிக்கூட்டு கோபுரம் வரை சென்று கடைவீதி ஊடாக நகர பள்ளிவாசல்வரை சென்று அங்கிருந்து கொறவபதானை வீதி வழியாக மன்னார் வீதிக்குசென்று அங்கிருந்து மன்னார் மாவட்டம் நோக்கி பயணமாகும்.
அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

*பொத்துவிலில் இருந்து புலிகண்டி நோக்கிய கவனயீர்ப்பு பாதயாத்திரை பற்றி முகநூலில் பதியப்பட்டிருந்த சில கருத்துக்கள் கிழக்கு,வடக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களை தொல்பொருள் தேடலென்ற பெயரில் பேரினவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அராஜகத்தை எதிர்த்தும், *இந்து மத வழிபாட்டுத்தலங்களை பௌத்த விகாரைகளாக மாற்றும் பேரினத்துவேச நடவடிக்கையை எதிர்த்தும்,*தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை குறைந்தது 1000 ரூபாவாய் உயர்த்தவேண்டும் என்று வலியுறுத்தியும், விஞ்ஞான அறிவியலை புறந்தள்ளி முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை நிறுத்தக்கோரியும் இன்று 03/02/2021ல் பொத்துவிலில் இருந்து புலிகண்டி நோக்கிய கவனயீர்ப்பு பாதயாத்திரையில் கலந்து கொள்ள மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாணக்கியனுக்கு போலிச் சுகாதார காரணத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் இன்று காலை தனது வீட்டிலேயே 'அடையாள கவனயீர்ப்பை' ஏனைய செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலுடன் மேற்கொண்டார். உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு இடையூறுகள் வரத்தான் செய்யும் ஆயினும் மாற்று வழிகள் இல்லாமலில்லை. ஏனையோரின் பங்கேற்புடன் கவனயீர்ப்பு பாதயாத்திரை பொத்துவிலில் ஆரம்பித்திருக்கும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையிலும் ஜனாஸாக்களை எரித்து கொடுமைக்குள்ளாகும் சமூகம் என்ற காரணத்தாலும் இந்த கவனயீர்ப்பு பாதயாத்திரைக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவோமாக!

-வஃபா பாறுக்-
ஒடுக்கும் ஒரு அரசாங்கத்திற்கு எதிராக மக்களும், அரசியல் பிரதிநிதிகளும் வீதியில் இறங்கி , வெகுஜன தளத்தில் தமது “அடையாள எதிர்ப்பினை” காட்டுவதை இன்றைய அரசியல் சூழலில் இன்றியமையாத ஒரு ஜனநாயக முன்னெடுப்பாகவே நாங்கள் பார்க்கிறோம்! தென்னிலங்கையில் சிங்கள மக்களும், மாணவர்களும், தொழிற்சங்க அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், இன்றைய அரசாங்கத்திற்கு எதிராக , வெகுஜனத் தளத்தில் போராடியே வருகின்றனர்.

இன்றைய இனவாத மேலாதிக்க அரசாங்கத்தின் கபடத் திட்டங்களால் அண்மைக்காலமாக மிக மோசமாக, திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படும் கிழக்கு மாகாணத்தின் அரசியல் , நிர்வாகம் மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களுக்காகவும், நீண்டகாலமாக தமிழ் , முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், அம்மக்களின் மீதான அரச , இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் , அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளால் இன்று தொடங்கப்பட்டுள்ள , இந்த ஜனநாயக வெகுஜனப் போராட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவையும் உறுதியான ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கிறோம்! அரச படைகளையும் , தமது கைபொம்மையான நீதித்துறையையும் வைத்து , இன்றைய இந்த சாத்வீக மக்கள் போராட்டத்தை ஒடுக்கி, தடுத்துவிட முயற்சிக்கும் இராணுவாத கோதா அரசாங்கத்தினை வன்மையாக கண்டிக்கிறோம்!

People’s Movement Against Racism and for Democracy

சிங்கள ஒற்றையாட்ச்சி ஆதிக்கம் தனது இறுதி ஆட்டத்தை தொடர்கிறது. தமிழர்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்கிற போராட்டத்தில் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் இணைக்கிற செல்வநாயகம் தோழர் அஸ்ரப் இணைந்து பயணித்த காலத்தை அணுகுமுறையை இனம்கண மெய்சிலிர்க்க வைகிறது. 1950 - 1970 காலத்தில் செல்வநாயகத்திற்க்கும் சூபி முஸ்லிம் தலைவர்களுக்குமிருந்த நல்லுறவை ஓரளவுக்கு அறிவேன். 1970 களின்பின் தமிழ் இளைஞர்கள் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தபோது செல்வநாயகத்தின் சமாதான சகவாழ்வை அனுகுமுறையை கைவிட்டார்கள். அதே காலக் கட்டத்தில் அம்பாறை மாவட்டம் மையமாக உழைக்கும் முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் அரபுபுலப்பெயர்வுகள் அதிகரித்தது. அப்ப முன்னிலைப்பட்ட வஹாபிச அமைப்புகள் சூபிகளின் சமாதான சகவாழ்வை கைவிட்டனர். இப்படி இரு தரப்பிலும் சமாதான சகவாழ்வை கைவிட்ட இளைஞர்களால்தான் 1985ல் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மோதல்கள் வலுப்பெற்றது. இப்ப மீண்டும் இளைய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடை சமாதான சக வாழ்வும் அரசியல் புரிந்துணர்வும் மீண்டும் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இப்ப தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் வெளியில் வந்து இருதரப்பிலும் வளர்ந்துவருகிற சமாதான சகவாழு நல்லுறவை போக்கை அரசியல் ரீதியாக மேம்படுத்தும் வரலாற்றுப் பணிகளில் ஈடுபடவேண்டும்.

Jaya Palan

சகோதர தமிழ் சமூகம் பறிபோகும் தங்கள் மக்கள் உரிமைக்காகவும் சகோதர இனமான எமது முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் அடக்கம் செய்யும் உரிமைக்காகவும் அடைமழையையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கி உரிமைக்காக போராட எமது மக்களின் வாக்குகளை ஏமாற்றி பெற்று அதை தங்கள் சுயநல தேவைக்காக அடகு வைத்து கருணாவையும் சிங்கள பேரினவாத ஞானசாரவையும் வைத்து முஸ்லிம் சமூகத்தை பயம் காட்டி இனவாதத்தையும் பிரதேசவாதத்தையும் அப்பாவி முஸ்லிம் சமூகத்தில் விதைத்து பாராளுமன்ற ஆசனங்களை அதன் மூலம் பெற்று தற்போது அரச சுகபோகங்களை அனுபவிக்கும் ஒரு துரோகிகள் கூட்டம் இன்னும் தங்கள் மக்களின் ஜனாசாக்கள் வகை தொகை இன்றி எரிக்கப் படும் போதும் அவர்களது பொருளாதார நில புலன்கள் அணைத்தும் பேரினவாதத்தால் கபளீகரம் செய்யப் படும் நிலையிலும் ஏதுமறியாத பாலகர்கள் போல் இந்த அடை மழையின் குளிரில் சமூகத்தை அடகு வைத்ததன் மூலம் வாங்கிக் கொண்ட வயற் காலைகளிலும் பண்ணை வீடுகளிலும் படுத்துறங்கி உல்லாசம் அனுபவிக்கின்றனர்,

தங்கள் மக்களின் அடிப்படை உரிமைக்காக பேரின அடக்கு முறைக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு இழப்புக்களோடு போராட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு ஏமாற்றங்களை சந்தித்த போதும் ஏதும் சலனமின்றி தற்போது வரை தங்கள் இன மக்களின் உரிமைக்காக போராடும் சகோதர இனமான தமிழ் சகோதரர்களிடமும் அவர்களின் அரசியல் தலைமைகளிடமும் எமது சமூகம் படித்து பாடம் பெற இன்னும் எவ்வளவோ விடயங்கள் கொத்தடிமைகளாக , அரச சலுகைக்களுக்காக அலைந்து திரியும் கோடாரிக் காம்புகளுக்கு அரசின் ஏவல்வாதிகளுக்கு இன்னும் பின்னால் திரியும் எம் சமூகத்துக்கு உண்டு.

May be an image of 2 people, people standing and text

கருத்துகள் இல்லை: