தினகரன் : சென்னை: அடையாறு இந்திரா நகரில் கணவர் இறந்ததால் மன
அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக தனியாக வசித்த அண்ணா
பல்கலை பெண் பேராசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு, இந்திரா நகர் 4வது அவென்யூவை சேர்ந்தவர் மீரா ஆஷாமேனன் (56). அண்ணா பல்கலைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர். இவரது கணவர் வின்சென்ட் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2014ம் ஆண்டு முதல் பணிக்கு செல்லாமல் மீரா ஆஷாமேனன் வீட்டில் தனியாக இருந்ததால் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டார். நீண்ட காலமாக, மீரா ஆஷாமேனன் பணிக்கு வராததால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அவரது வீட்டுக்கு ஆள் அனுப்பி விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து சிலர் அங்கு சென்றபோது, ‘‘நான் எவரையும் பார்க்க விரும்பவில்லை’’ என்று கூறியுள்ளார். இதனால் அவர்கள் குழம்பியபடி திரும்பி சென்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீரா ஆஷாமேனன் தன்னுடைய வீட்டின் எதிரே இஸ்திரி கடை நடத்தும் வரதன் என்பவரிடம், ‘‘பணம் இல்லை. பிறகு தருகின்றேன். டிபன் வாங்கி கொடு’’ என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார்.